ஐஸ்கார்த் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலத்திலிருந்து பார்த்த மேல் நீர்வீழ்ச்சி
வடக்கு கரையில் இருந்து மத்திய நீர்வீழ்ச்சி
ஆற்றங்கரையிலிருந்து கீழ் நீர்வீழ்ச்சி

ஐஸ்கார்த் அருவிகள் என்பது மூன்று நீர்வீழ்ச்சிகளை உள்ளடக்கியது ஆகும்.[1] இது வனப்பகுதி மற்றும் விளைநிலங்களால் சூழப்பட்டுள்ள இந்த நீர்வீழ்ச்சி இங்கிலாந்தின் யார்க்ஷயர் டேல்ஸின் அருகே உள்ள ஐஸ்கார்த் கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகின்றன: மேல் நீர்விழ்ச்சி, மத்திய நீர்விழ்ச்சி மற்றும் கீழ் நீர்விழ்ச்சி.[2]

ஐஸ்கார்த் நீர்வீழ்ச்சி 200 ஆண்டுகளாக பார்வையாளர்களை ரசிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களான ரஸ்கின் பாண்ட், வில்லியம் வோர்ட்ஸ்வோர்த் மற்றும் டர்னர் ஆகியோர் இந்த நீர்வீழ்ச்சியை அழகை ரசித்துள்ளனர்.[3] இதன் மூன்று நீர்வீழ்ச்சிகளும் ராபின் ஹுட்: பிரின்ஸ் ஆப் தீவ்ஸ் படத்தில் இடம்பெற்றன.[4]

இந்த நீர்வீழ்ச்சி யார்க்ஷயர் டேல்ஸ் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இங்கு பார்வையாளர்களுக்காக கண்காட்சி, தகவல் பொருட்கள் விற்பனை நிலையம், கபே ஆகியவை உள்ளன.

மேல் நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி

இந்த பெயர் பழைய நோர்ஸ் மொழியில் இருந்து உருவானது. இதற்கு ஓக் மரங்களுக்கு நடுவே உள்ள திறந்தவெளி என்று பொருள்.[5]

இது ஏழு இயற்கை அதிசயங்கள் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இங்கிலாந்து நாட்டு வடக்கின் அதிசயங்களில் ஒன்றாக இடம்பெற்றது.[6]

குறிப்புகள்[தொகு]

  1. "Wensleydale Yorkshire History". Archived from the original on 1 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
  2. The waterfalls of England : a guide to the best 200. 
  3. "Aysgarth Falls". Archived from the original on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Filming locations in Yorkshire". Archived from the original on 25 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.
  5. "Aysgarth and Aysgarth Falls". Archived from the original on 28 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "BBC - Seven Wonders - Aysgarth Falls". பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஸ்கார்த்_அருவி&oldid=3928359" இலிருந்து மீள்விக்கப்பட்டது