ஐவர் சுனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐவர் சுனை என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம் பரமத்தியிலிருந்து, திருச்செங்கோடு செல்லும் வழியில் அர்த்தநாரி பாளையம் என்ற ஊரில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் ஐவர் மலை என்ற இடத்தில் ஐவர் சுனை உள்ளது. பஞ்ச பாண்டவர்கள் பயன்படுத்திய இடம், ஆதலால் இப்பெயர் பெற்றது, என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இவ்விடத்தில் வற்றாத சுனை உள்ளது இது ஐவர் சுனை என அழைக்கப்படுகிறது. அர்த்தநாரி பாளையம் ஊரின் வயல்களின் நடுவில் இந்தக் கற்பாறைக் குன்றும், நீர் உள்ள சுனையும் இருக்கின்றன. இங்குள்ள பொடவில் ஐந்து கற் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குக் கடைச்சங்க காலத்தில் சமண அல்லது பௌத்த சமயத் துறவிகள் தங்கியிருந்தனர் என்பதற்கு இக் கற்படுக்கைகள் சான்றாக உள்ளன. இக்குன்றைதான் இக்காலத்தில் பஞ்ச பாண்டவ மலை என்றும் இங்குள்ள சுனையையே ஐவர் சுனை என்றும் மக்கள் அழைக்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2". தமிழ்நாடு இணைய கல்விக் கழகம். பார்த்த நாள் 13 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐவர்_சுனை&oldid=2321759" இருந்து மீள்விக்கப்பட்டது