ஐரோப்ப குழுமத்தில் அணுக்கரு ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊதா நிறம் ஐரோப்ப அணுக்கரு உற்பத்தி செய்யும் இடம் அல்லது நாடுகள் .

ஐரோப்ப குழுமத்தில் அணுக்கரு ஆற்றல் (Nuclear Power in the European Union) கடந்த 2005 ஆம் ஆண்டில் மொத்த மின் ஆற்றல் உற்பத்தி சராசரியாக 15% விழக்காடுகள் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள் . ஐரோப்ப குழும அதிகாரிகளின் மின் ஆற்றல் கொள்கைகள் தொடர்ந்து மாறுபட்டுக்கொண்டே உள்ளது . சனவரி 2010 இல் ,ஐரோப்பா நாடுகளில் 14 நாடுகள் அணுக்கரு ஆற்றல் உற்பத்தி செய்யும் வினைக்கலன்களை பயன்படுத்துகின்றனர் . வினைக்கலன்கள் பயன்படுத்தும் நாடுகள் பெல்ஜியம் , செக்கொசுலோவகியா ( Czechoslovakia ) , பின்லாந்து , பிரான்சு , செருமனி , அங்கேரி , நெதர்லாந்து , ரோமானியா , ஐக்கிய இராச்சியம் , சுவீடன் , எசுப்பானியா , சுலோவீனியா , பல்கேரியா ( Bulgaria ) மற்றும் சுலோவகியா ( slovakia ) போன்ற 14 நாடுகள் ஆகும் . பிரான்சு , பின்லாந்து போன்ற நாடுகள் அணுக்கரு தொழில்நுட்பத்திற்கு அதிக கவனம் செலுத்தி , புதிய வினைக்கலங்களை உருவாக்குவதில் முனைந்து செயல்படுகின்றனர் .

சக்தியின் கலவை[தொகு]

இ.யு - 27 ( EU - 27 ) தனது மின் ஆற்றல் உற்பத்தியில் , 37% எண்ணெயிலும் , 24.6 % வாயுவிலும் , 17.7% எரிபொருளிலும், 14.2% அணுக்கருவிலும் , 6.7% புதுப்பிக்கத்தக்கவையிலும் , 0.1% தொழிற்சாலை கழிவுகளிலும் உள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது .

யுரேனிய ஆதாரங்கள்[தொகு]

யுரேனிய ஆதாரங்கள்

ஐரோப்பாவில் 3% தான் யுரேனியம் கிடைப்பதாக கூறப்படுகிறது . ருசியாவிலும் , ஆசுத்திரேலியாவிலும் , கனடாவிலும் தான் 75% கிடைக்கின்றது என்றும் அவை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வதாகவும் தெரிகின்றது .