ஐரோப்பியர்கள் இந்திய வருகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐரோப்பியர்கள் இந்திய வருகை[தொகு]

இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பழங்காலம் முதல் வாணிபம் நடைபெற்று வருகிறது. வாணிபம் மேற்கொள்ள வந்த ஐரோப்பியர்கள் பின்பு இந்திய அரசியலிலும் ஈடுபட்டு இந்தியர்களை ஆள ஆரம்பித்தனர்.போர்ச்சுகீசியர்கள்,டச்சுக்காரர்கள்,ஆங்கிலேயர்கள்,டேனியர்கள்,பிரெஞ்சுக்காரர்கள் போன்ற ஐரோப்பிய நாட்டினர் இந்தியாவில் குடியேற்றங்களை ஏற்படுத்தினர். இவர்கள் ஐரோப்பா கண்டதிலிருந்து கடல்வழிப் பயணம் மேற்கொண்டு இந்தியா வந்தவர்களாவர்.

போர்ச்சுகீசியர்கள்[தொகு]

வாஸ்கோடகாமா

இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதன்முதலில் ஈடுபட்டவர்கள் போர்ச்சுகீசியர்கள். போர்ச்சுகீசிய மன்னரான ஹென்றி தனது கப்பல் மாலுமிகளை புதிய கடல்வழி பயணத்தை ஊக்குவித்ததன் காரணமாக வாஸ்கோடகாமா என்ற மாலுமி மே-27-1498 -ல் நன்னம்பிக்கை முனையை கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரையிலுள்ள கள்ளிகோட்டையை அடைந்தார்.அப்போதைய கள்ளிகோட்டை மன்னரான சாமரின் போர்ச்சுகீசியர்கள் வாணிபம் செய்ய அனுமதி அளித்தார்.கள்ளிகோட்டை,கண்ணனூர்,கொச்சி ஆகிய இடங்களில்போர்ச்சுகீசியர்கள் வாணிக நிலையங்களை நிறுவி வணிகம் மேற்கொண்டனர்.[1]

டச்சுக்காரர்கள்[தொகு]

டச்சுக்காரர்கள் என்பவர்கள் ஹாலந்து நாட்டைச் சார்ந்தவர்கள் ஆவர் .இவர்கள் 1602-ல் டச்சு கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப்பட்டு, இந்தியாவில் மசூலிப்பட்டினம்,புலிகாட்,சூரத்,காரைக்கால்,நாகப்பட்டினம்,கசிம்பசார் ஆகிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினர்.ஆங்கிலேயர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் ஏறத்தாழ எழுபது ஆண்டுகளாக போட்டி நிலவியது.எனவே தங்கள் வாணிக மையங்களை ஆங்கிலேயர்களுக்கு விற்றுவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.

ஆங்கிலேயர்கள்[தொகு]

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் ஆங்கிலேயர்கள்.1609-ல் இங்கிலாந்திலிருந்து கேப்டன் வில்லியம் ஹாகின்ஸ் ஜகாங்கீரின் அரசவைக்கு வந்தார்.போர்ச்சுகீசியர்களின் தூண்டுதலினால் ஆங்கிலேயர்களுக்கு முதலில் அனுமதி தர மறுத்தாலும் 1612-ல் ஜகாங்கீரிடம் அனுமதி பெற்று ஆங்கிலேயர்கள் 1613 -ல் சூரத்தில் வணிக நிலையத்தை நிறுவினர்.இது முதல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி 1858 -வரை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

டேனியர்கள்[தொகு]

டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள் டேனியர்கள் ஆவர்.1620 -ல் தரங்கம்பாடியில் டேனிஷ் வணிக நிலையம் நிறுவப்பட்டது. இந்தியாவில் அவர்களது வணிக நிலையங்களை விரிவுபடுத்தவில்லை. எனவே 1845-ல் தங்களது குடியேற்றங்களை ஆங்கிலேயர்களுக்கு விற்றுவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.

பிரெஞ்சுக்காரர்கள்[தொகு]

பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயி மன்னரின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழு 1664 -ல் அமைக்கப்பட்டது. இவர்கள் 1668-ல் சூரத்திலும் 1669-ல் மசூலிப்பட்டினத்திலும் வாணிபத் தளங்களை நிறுவினர்.1673 -ல் பாண்டிச்சேரியில் வணிக நிலையங்களை நிறுவினர்.பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போட்டி நிலவியது.இது இந்தியாவில் கர்நாடக போர்களாக மாறின.இறுதியில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றனர்.பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.

ஆதாரம்:[தொகு]

  1. தமிழ்நாடு பாடநூல் - மேல்நிலை முதலாமாண்டு-வரலாறு-பக்கம்-279-285

1