ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி (European migrant crisis) [1][2][3][4][5] அல்லது ஐரோப்பிய அகதிகள் நெருக்கடி (European refugee crisis) [6][7][8][9][10]என்பது 2015ஆம் ஆண்டில் நடுநிலக் கடல் (அல்லது தென்கிழக்கு ஐரோப்பா) வழியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெருமளவில் அகதிகளும், புலம் பெயர்வோரும் வந்தது குறித்ததாகும். இவர்கள் மத்திய கிழக்கு (சிரியா, ஈராக்), ஆபிரிக்கா (எரித்திரியா, நைஜீரியா, சோமாலியா, சூடான், காம்பியா), மேற்கு பால்கன் (கொசோவோ, அல்பானியா, செர்பியா, பொசுனியா எர்செகோவினா, மாக்கடோனியா), தெற்காசியா (ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம்) ஆகிய பகுதிகளிலிருந்து புகலிடம்கோரி வந்து சேர்ந்தவர்கள் ஆவர்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் அறிக்கையின்படி, செப்டம்பர் 2015 துவக்கம்வரைக்கும் சிரியா, ஆப்கானிஸ்தான், எரித்திரியா நாடுகளிலிருந்து பெருமளவில் (71 சதவீதம்) அகதிகள் வந்திருந்தனர். இவர்களில் 72 சதவீதம் பேர் வயதுவந்த ஆண்கள் ஆவர்.

ஏப்ரல் 2015இல் சுமார் 2000 புலம் பெயர்வோரை ஏற்றிக்கொண்டு வந்த 5 படகுகள் நடுநிலக் கடலில் மூழ்கின. இந்த நிகழ்வுகளில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக புலம்பெயர்வோர் நெருக்கடி (migrant crisis) எனும் சொற்றொடர் ஊடகங்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை விவரம்[தொகு]

புலம்பெயர்விற்கான அனைத்துலக அமைப்பு, 16 அக்டோபர் 2015 அன்று வெளியிட்ட விவரங்கள்[11]:

  • 2015இல் இத்தாலி, கிரீசு, ஸ்பெயின், மால்டா ஆகிய நாடுகளை இதுவரை வந்தடைந்தோர் = 613,179
  • 2015இல் பயணத்தின்போது இறந்தோர்/காணாமல் போனோர் = 3,117

செப்டம்பர் 2015 நிகழ்வுகள்[தொகு]

  • செப்டம்பர் 16 - செர்பியாவுடனான தனது எல்லையை அங்கேரி மூடியதால், குரோவாசியா வழியாக வட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் புதிய வழித்தடத்தினை புலம்பெயர்வோர் தேர்ந்தெடுத்தனர்[12].
  • செப்டம்பர் 17 - செர்பியாவிலிருந்து குரோவாசியாவிற்குள் சுமார் 7,300 புலம்பெயர்வோர் நுழைந்தனர். பெருவாரியான மக்கள் வரவினை சமாளிக்க இயலவில்லை என குரோவாசியா தெரிவித்தது[13].
  • செப்டம்பர் 18 - அதிக அளவில் புலம்பெயர்வோர் வருவதையடுத்து, செர்பியாவுடனான 8 எல்லைகளில் 7 எல்லைகளை குரோவாசியா மூடியது. செர்பியாவுடனான தனது எல்லையை அங்கேரி மூடியபிறகு, சுமார் 13,000 பேர் குரோவாசியாவில் நுழைந்துள்ளதாக குரோவாசியா அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்[14].
  • செப்டம்பர் 19 [15] - ஒரே நாளில் 12,000 முதல் 13,000 பேர் வரை ஆசுதிரியாவிற்குள் நுழைந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை அண்டை நாடுகள் கடைப்பிடிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய ஆசுதிரியா, குரோவாசியாவிலிருந்து சுலோவேனியா வழியாக புலம்பெயர்வோர் வந்துசேருதல் குறித்து தனது கவலையைத் தெரிவித்தது. புலம்பெயர்வோரை பதிவு செய்யாமல் அடுத்த நாட்டிற்கு அனுப்புவதன் மூலமாக குரோவாசியா அனைத்துலக சட்டத்தினை மீறுவதாக அங்கேரி குற்றஞ்சாட்டியது.
  • செப்டம்பர் 21 [16] - புலம்பெயர்வோரால் ஐரோப்பிய எல்லைகள் அச்சுறுத்தலுக்குளாகியுள்ளது என அங்கேரி பிரதமர் தெரிவித்தார். புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த இரப்பர் குண்டுகள், கண்ணீர்ப் புகை குண்டுகள் ஆகியவற்றை இராணுவம் பயன்படுத்துவதை அனுமதிக்கும் புதிய சட்டத்திற்கு அங்கேரி நாடாளுமன்றம் அனுமதியளித்தது.

நாடுகளின் நிலைப்பாடு[தொகு]

செருமனியின் நிலைப்பாடு[தொகு]

புலம்பெயர்வோரை தனது நாட்டிற்கு வரவேற்பதால், பெரும்பாலானோர் தங்களின் புகலிடமாக செருமனியை தேர்ந்தெடுக்கிறார்கள். தனது நாட்டின் மாநிலங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் புகலிடம்கோருவோரை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் பகிர்மானத் திட்டத்தை செருமனி அரசு நடைமுறைப்படுத்தியது. இதனையொட்டி மாநிலங்களின் விமரிசனங்களையும் அரசு எதிர்கொண்டது.


ஆசுதிரியாவுடனான தனது எல்லையில் இடைக்கால கட்டுப்பாடுகளை செப்டம்பர் 13 அன்று செருமனி அறிவித்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக எனக் கூறப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகளின்படி, ஆசுதிரியாவிலிருந்தான தொடர்வண்டிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது; வாகனப் பரிசோதனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அங்கேரியின் நிலைப்பாடு[தொகு]

செர்பியாவிலிருந்து அங்கேரி நாட்டிற்குள் நுழைந்த சுமார் 9000 புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்திய அங்கேரி காவற்துறை, அவர்களை தனது காப்பில் வைத்தது[17]. செர்பிய எல்லையை ஒட்டிய தனது பகுதிகளில் அவசரகால நிலையை அங்கேரி பிரகடனப்படுத்தியது[18].

குரோவாசியாவின் நிலைப்பாடு[தொகு]

புலம்பெயர்வோரை வரவேற்பதாக ஆரம்பத்தில் தெரிவித்த குரோவாசியா, புலம்பெயர்வோரின் முக்கிய இடமாக தனது நாட்டை கருதலாகாது என செப்டம்பர் 18 அன்று அறிவித்தது. 3 நாட்களில் சுமார் 17,000 புலம்பெயர்வோர் தனது நாட்டில் நுழைந்ததால், குரோவாசியா தனது கொள்கையை மாற்றிக் கொண்டது[19].

சுலோவேனியாவின் நிலைப்பாடு[தொகு]

புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தாமல், அவர்களை சுலோவேனியாவுக்கு குரோவாசியா அனுப்பிவருவதாக சுலோவேனியா குற்றஞ்சாட்டியது[20].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Europe migrant crisis".
  2. "The battle over the words used to describe migrants".
  3. "Europe's Migration Crisis".
  4. "Refugees or migrants – what's in a word?".
  5. "European migrant crisis: A country-by-country glance".
  6. "Europe's African Refugee Crisis: Is the Boat Really Full?". Der Spiegel. 15 April 2014.
  7. "UNHCR chief issues key guidelines for dealing with Europe's refugee crisis". UNHCR."This is a primarily refugee crisis, not only a migration phenomenon".
  8. "European Refugee Crisis 2015: Why So Many People Are Fleeing The Middle East And North Africa". International Business Times. 3 September 2015. http://www.ibtimes.com/european-refugee-crisis-2015-why-so-many-people-are-fleeing-middle-east-north-africa-2081454. 
  9. "What You Need to Know About Europe's Refugee Crisis: Q&A". Bloomberg. 8 September 2015. http://www.bloomberg.com/news/articles/2015-09-08/what-you-need-to-know-about-europe-s-refugee-crisis-q-a. 
  10. "UNHCR viewpoint: 'Refugee' or 'migrant' - Which is right?". UNHCR."The majority of people arriving this year in Italy and Greece especially have been from countries mired in war or which otherwise are considered to be 'refugee-producing' and for whom international protection is needed. However, a smaller proportion is from elsewhere, and for many of these individuals, the term 'migrant' would be correct."
  11. Mediterranean Update - 16 October 2015[தொடர்பிழந்த இணைப்பு]
  12. "Migrant crisis: Dozens reach Croatia as Hungary border sealed". பிபிசி (British Broadcasting Corporation). 16 செப்டம்பர் 2015. http://www.bbc.com/news/world-europe-34264942. பார்த்த நாள்: 16 செப்டம்பர் 2015. 
  13. "Refugees pour into Croatia". தி இந்து. 18 செப்டம்பர் 2015. http://www.thehindu.com/news/international/refugees-pour-into-croatia/article7662651.ece. பார்த்த நாள்: 19 செப்டம்பர் 2015. 
  14. "Migrant crisis: Croatia closes border crossings with Serbia". பிபிசி (British Broadcasting Corporation). 18 செப்டம்பர் 2015. http://www.bbc.com/news/world-europe-34286432. பார்த்த நாள்: 18 செப்டம்பர் 2015. 
  15. "Migrant crisis: Austria sees fresh influx". பிபிசி (British Broadcasting Corporation). 20 செப்டம்பர் 2015. http://www.bbc.com/news/world-europe-34305086. பார்த்த நாள்: 20 செப்டம்பர் 2015. 
  16. "Hungary PM Orban: Europe borders threatened by migrants". பிபிசி. 21 செப்டம்பர் 2015. http://www.bbc.com/news/world-europe-34311254. பார்த்த நாள்: 22 செப்டம்பர் 2015. 
  17. "Hungarian police detain over 9,000 migrants".
  18. "Migrant crisis: Hungary declares emergency at Serbia border". பிபிசி (British Broadcasting Corporation). 15 செப்டம்பர் 2015. http://www.bbc.com/news/world-europe-34252812. பார்த்த நாள்: 15 செப்டம்பர் 2015. 
  19. "Migrant crisis: Neighbours squabble after Croatia U-turn". பிபிசி (British Broadcasting Corporation). 18 செப்டம்பர் 2015. http://www.bbc.com/news/world-europe-34291648. பார்த்த நாள்: 19 செப்டம்பர் 2015. 
  20. "Slovenia accuses Croatia of lack of control on migrant surge". தி இந்து (The Hindu). 20 அக்டோபர் 2015. http://www.thehindu.com/news/international/slovenia-accuses-croatia-of-lack-of-control-on-migrant-surge/article7784299.ece. பார்த்த நாள்: 21 அக்டோபர் 2015. 

வெளியிணைப்புகள்[தொகு]