ஐரிசு பலியாட்டம்
ஐரிசு பலியாட்டம் (Irish Gambit) என்பது ஒரு பலவீனமான சதுரங்கத் திறப்பு முறையாகும். சிக்காகோ பலியாட்டம், ரேசில் தாசில் பலியாட்டம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இத்திறப்பு பின்வரும் நகர்வுகளுடன் தொடங்குகிறது.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
3...Nxe5 4.d4 என்ற உத்தேசத்தில் (படம்).
வெள்ளை ஆட்டக்காரரின் சிப்பாய் போர்களத்தின் மையத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் ஒரு சிப்பாய்க்காக ஒரு குதிரையை தியாகம் செய்வது மிகவும் அதிகமானதொரு இழப்பாகும். கொடுக்கப்படும் பலி பெரியதாக எந்த நன்மையையும் வெள்ளைக்கு கொடுக்கவில்லை. உயர்மட்ட போட்டிகளில் எங்கும் இத்தகைய பலியாட்டம் விளையாடப்படவும் இல்லை. பெரும்பாலும் இத்திறப்பு சிக்காக்கோ பலியாட்டம் என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் அரால்டு மேயர் பிலிப்சு 1899 ஆம் ஆண்டு அக்காலத்தில் வலிமையான உலக சதுரங்க வீர்ராகக் கருதப்பட்ட ஆரி நெல்சன் பில்சுபரியை இந்த திறப்புடன் விளையாடி குறிப்பிடத்தக்கதொரு வெற்றியை ஈட்டியது இதற்கு காரணமாக இருக்கலாம் [1]. எனவே இவர்தான் இந்த பலியாட்டத்தைக் கண்டுபிடித்தவர் என்ற கட்டுக்கதை உலாவத் தொடங்கியது. என்னவிதமான நுட்பமான சிந்தனை இப்பலியாட்டத்தின் பின்னால் இருந்தது என்று மரணப்படுக்கையில் இருந்த போது அவரிடம் கேட்கப்பட்டது. பதிலாகக் கிடைத்த அவருடைய கடைசி வார்த்தைகள் இவ்வாறு இருந்தன. : "ராசாவின் சிப்பாய்க்கு பாதுகாப்பு இருந்ததை நான் பார்க்கவில்லை” [2].
ஆலோவீன் பலியாட்டம் என்ற திறப்பும் இதைபோன்றதொரு திறப்பு ஆகும். இதுவும் சந்தேகத்திற்கிடமான ஒரு நகர்த்தலே என்றாலும் ஐரிசு பலியாட்டத்தை விட சற்று மேம்பட்ட தொடக்கமாக இருக்கிறது. ஏனெனில் வெள்ளை ஆட்டக்காரருக்கு போர்களத்தின் மையத்திலுள்ள கருப்பின் இரண்டு குதிரைகளையும் விரட்டுவதற்கான வாய்ப்பும் நேரமும் கிடைக்கிறது. இந்தத் திறப்புடன் விளையாடத்தொடங்கி வெள்ளை பல போட்டிகளில் குறைந்த நகர்வு ஆட்டங்களாக வெற்றி பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harold Meyer Phillips vs Harry Nelson Pillsbury, Chicago 1899, Chessgames.com, பார்க்கப்பட்ட நாள் 2006-11-18
- ↑ Hooper, David; Whyld, Kenneth (1996), "Irish Gambit", The Oxford Companion To Chess (2 ed.), Oxford University, p. 182, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280049-7