உள்ளடக்கத்துக்குச் செல்

ஐராவதி கார்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராவதி கார்வே
பிறப்பு15.12.1905
மியான்மர்
இறப்பு11.08.1970
இருப்பிடம்புனே, இந்தியா
பணிமானிடவியல்

இராவதி கர்வே (1905-1970) ஆங்கிலம் Iravati Karve, தேவனாகரி: इरावती कर्वे,இந்தியாவைச் சேரந்த மானிடவியல் ஆய்வாளரும் எழுத்தாளரும் கல்வியாளருமாவார், இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவரும் ஆவார்.

இளமை பருவம் மற்றும் கல்வித்தேர்வு[தொகு]

இராவதி அவர்கள் ஒரு சித்பவன அந்தணர் குடும்பத்தில் 1905 ஆண்டில் பிறந்தார். தந்தை கணேஷ் ஹரி கர்மாகர் பர்மா தேசத்தில் பர்மா பருத்தி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். பர்மாவில் ஓடும் இராவதிநதியின் நினைவாக தனது மகளுக்கு இராவதி என்று பெயரிட்டார். இவரது பள்ளித்தோழியின் தாயார் சகுந்தலா இவரைத் தனது மகளாக ஏற்று வளர்த்தார்.[1]

இராவதி 1926ம் ஆண்டு இளங்கலை பட்டமும் 1928ம் ஆண்டு முதுகலை பட்டமும் பம்பாய் பல்கலை கழகத்திலிருந்து பெற்றார். பின்னர் தினகர் தோண்டோ கர்வே அவர்களோடு திருமணம் நடந்தது. தினகர் கர்வேயும் அந்தணர் குலத்தவராயிருந்தாலும், இரவதியின் தந்தைக்கு இந்த திருமணத்தில் முழுமையாக சம்மதம் இல்லை. தினகர் இராவதியின் மேற்படிப்பிற்காக செர்மனி (Germany) நாட்டிற்கு மனைவியை அனுப்பினார். ஆனால் இதில் தினகரின் தந்தை தோண்டோ கர்வேயிற்கு விருப்பம் இல்லை. காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ஜீவராஜ மேத்தா என்பவரிடமிருந்து பணம் கடனாகப் பெற்று இராவதி செருமனிக்கு சென்றார். 1930ம் ஆண்டில் மானிடவியல் மற்றும் வம்சாவளி, தலைமுறை ஆகிய விஞ்ஞானங்களில் முனைவர் பட்டம் பெற்று தாய் நடு திரும்பினார். கணவர் தினகர் நாத்திகவாதி. அக்காலத்தில் இருந்த சமூக பழக்கவழக்கங்களில் அதிக ஈடுபாடு இல்லாமல் இருவரும் இருந்தாலும், இராவதி பந்தார்புரத்தில் இருந்த விதோபா ஆலயத்திற்கு மரபுவழி காரணமாக, சென்றுவருவது உண்டு.

1931 முதல் 1936 வரை பம்பாயில் இருந்த SNDT பெண்கள் பல்கலைகழகத்தில் ஆட்சியராக (Administrator) விளங்கினார். இதனுடன் முதுகலை பாடங்களுக்கு ஆசிரியராகவும் திகழ்ந்தார். பின்னர் பூனா சென்று டெக்கான் (Deccan) கல்லூரியில் மானிடவியல் பகுதிக்கு தலைவராக பணிஓய்வுபெரும்வரை இருந்தார். இராவதி அவர்கள் இந்தியாவின் முதல் பெண் மானிடவியல்வல்லுனர் என்று நந்தினி சுந்தர் எனும் வாழ்க்கைவரலாறு குறிப்பாளர் கூறுகிறார். 1947ம் ஆண்டு நடைபெற்ற தேசீய விஞ்ஞான மாநாட்டில் மானிடவியல் பகுதியின் தலைவராக உரை நிகழ்த்தினார்.

இராவதி கர்வே மராத்திய மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதும் வல்லுனராகத் திகழ்ந்தார்.

முக்கியப் படைப்புகள்[தொகு]

  • கின்ஷிப் ஆர்கனைசேஷன் இன் இன்டியா (ஆங்கிலம்)
  • ஹிந்து சொசையிடி-ஆன் இன்டெர்ப்ரெடேஷ்ன் (ஆங்கிலம்)
  • மஹாராஷ்ட்ரா-லேண்ட் அண்ட் பீபிள் (ஆங்கிலம்)
  • யுகன்தா (மராத்தி மற்றும் ஆங்கிலத்திலும்)(1967 ஆண்டிற்கான மராத்திய மொழி ஸாஹித்ய புரஸ்கார விருது வழங்கப்பட்டுள்ளது)
  • பரிபூர்தி (மராத்தி)
  • போவாரா(மராத்தி)
  • அமிசி ஸம்ஸ்க்ருதி (மராத்தி)
  • ஸம்ஸ்க்ருதி (மராத்தி)
  • கங்காஜல் (மராத்தி)

மேற்கோள்கள்[தொகு]

  1. Anthropology in the East :FOUNDERS OF INDIAN SOCIOLOGY AND ANTHROPOLOGY. Seagull Books. p. 367. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781905422777. {{cite book}}: |first= missing |last= (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐராவதி_கார்வே&oldid=3497788" இலிருந்து மீள்விக்கப்பட்டது