ஐராங்கனீ சேரசிங்கே
ஐராங்கனீ சேரசிங்கே අයිරාංගනී සේරසිංහ | |
|---|---|
| பிறப்பு | ஐரங்கனீ ரோக்சன்னா மீதேனியா 9 சூன் 1927[1] ருவன்வெல்ல, பிரித்தானிய சிலோன் |
| கல்வி |
|
| பணி | ஆசிரியர் (முசேயஸ் கல்லூரி) பத்திரிகையாளர் (டைம்ஸ், SLBC)[2] திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் மேடை நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1950 |
| வாழ்க்கைத் துணை |
|
| பிள்ளைகள் | 2 |
| உறவினர்கள் | ஜே. எச். மீதேனியா (தாத்தா) டி. ஆர். விஜேவர்தன (மாமா) பிரான்சிசு மொலமுரே (மாமா) திச விதாரன (மைத்துனர்) ரணில் விக்ரமசிங்க (ஒரு தலைமுறை தள்ளி உள்ள முதல் உறவினர் (இளைய தலைமுறை)) |
| விருதுகள் | கலா கீா்த்தி,[3] ஆண்டின் சிறந்த இலங்கைக்காரர் |
ஐராங்கனீ சேரசிங்கே (Iranganie Serasinghe)(ஐராங்கனீ ரோக்சன்னா மீதேனியா) (பிறப்பு 9 சூன் 1927)[1] இலங்கைத் திரைப்படங்கள், நாடகங்கள் ,தொலைக்காட்சி போன்றவற்றில் நடித்துவரும் ஓர் நடிகை ஆவார்.[4] ரேக்கவாவில் அறிமுகமானதிலிருந்து, சேரசிங்கே பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தாய் பாத்திரங்களில் நடித்து அங்கீகாரம் பெற்றுள்ளார்.[5] இவர் முன்னாள் சனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அத்தை ஆவார்.[6]
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]இவர் 1927ஆம் ஆண்டு சூன் 9 ஆம் தேதி இலங்கையின் ருவன்வெல்ல, முடுங்கோமுவவில், இரத்தினபுரவின் ரதே மகாத்மயாவான ஜோசப் ஹெர்குலசு மீதேனியா மற்றும் வயலட் எல்லாவெல ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தாயார், இரத்தினபுரவின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நந்த எல்லாவெலவின் தந்தையின் சகோதரி ஆவார். இவர் பேராசிரியர் திச விதாரனாவை மணந்தாா்.இவருக்கு காமனி விதாரனா மற்றும் மஹிந்த மீதேனியா என மூன்று உடன்பிறப்புகள் இருந்தனர்.[6]
பிற்காலத்தில் இவா் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலரானாா். பிசப்சு கல்லூரியில் பயின்றபோது, இவர் பல நாடகங்களில் நடித்தார். கண்டி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, பெர்னார்ட்சாவின் 'பிக்மாலியன்' நாடகத்தில் மீதேனியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இங்கு பேராசிரியர் ஈ. எஃப். சி. லுடோவிக்கின் வழிகாட்டுதலின் கீழ், இவர் இலங்கை நாடக உலகில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். மேலும் சித்திரசேனாவிடம் பயிற்சி பெற்று ஒரு திறமையான நடனக் கலைஞராகவும் ஆனார்.
தொழில்
[தொகு]இலங்கைக்குத் திரும்பிய மீதேனியா, லுடோவிக் மற்றும் ஆத்திரிய யூத இயக்குநரான நியூமன் ஜூபலைச் சந்தித்து மீண்டும் நாடகத் துறைக்குத் திரும்பினார். இந்த மையத்தின் லயனல் வென்ட் கலை மைய நாடகப் பிரிவு, 1953 டிசம்பர் 12 அன்று, நியூமன் ஜூபல் தயாரிப்பில், இரங்கனி சொரசிங்க நடிப்பில் மாக்சிம் கோர்க்கியின் "தி லோவர் டெப்த்ஸ்" நாடகத்துடன் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் பெரும்பாலும் ஆங்கில வேடங்களில் நடித்த இவர், ஹென்றி ஜெயசேனவின் 'அபாத புத்தே மகக் நேத்தே' நாடகத்தில் சிங்கள நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து தம்ம ஜகோடாவின் 'எ ஸ்ட்ரீட்கார் நேம்ட் டிசையர்' நாடகத்தின் சிங்களப் பதிப்பு, 'வேசு முஹுனு', மற்றும் 'பொரிசதயா' ஆகிய நாடகங்களிலும் நடித்தார். இலண்டனிலிருந்து திரும்பிய பிறகு 'தி டைம்ஸ் ஆஃப் சிலோன்' பத்திரிக்கையில் பணியாற்றுதல், இலங்கை வணிக வாரியத்தில் சிறிது காலம் பணியாற்றுதல், மற்றும் வாக்கர்ஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தில் இளநிலை நிர்வாகியாகவும் வழிகாட்டியாகவும் சுற்றுலாத் துறையில் ஒரு பதவியைக் கையாளுதல் எனப் பல பணிகளைச் செய்தார். இதன்படி, நடிப்பில் கல்விப் பயிற்சி பெற்ற முதல் இலங்கை நடிகை சொரசிங்க ஆவார்.[6]
மீதேனியா தனது திரைப்பட வாழ்க்கையை லெசுடர் ஜேம்ஸ் பீரீஸின் "பீ சேவ் பீ பிாி" என்ற அரசாங்க திரைப்படப் பிரிவின் திரைப்படத்தில் தொடங்கினார். இதைத் தொடர்ந்து பீரீஸ் தனது முதல் திரைப்படமான ரேகாவாவில் இவரை 'கதிரினாஹமி' என்ற தாயாக நடிக்க வைத்தார்.[7] 1956ஆம் ஆண்டில், இப்படத்தில் சிறந்த நடிகைக்கான தீபாசிகா விருதை வென்றார். இரங்கானி சொரசிங்க என்ற புதிய குடும்பப் பெயருடன், பீரீஸின் பல படைப்புகளில் தோன்றி நடிகையாகப் புகழ் பெற்றார்.[8] பின்னர் 1982இல் சகராயக் மேடா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான சரசவியா விருதை வென்றார். இவரது அடுத்த குறிப்பிடத்தக்க கதாபாத்திரம் சுனில் அரியரத்ன இயக்கிய சூடு செவநெலி திரைப்படத்தின் மூலம் வந்தது. இதில் இவர் ஓர் ஏழை வயதான தாயின் கதாபாத்திரத்தில் நடித்தார். 2000ஆம் ஆண்டில், இந்தப் பாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான குடியரசுத்தலைவா் விருதை வென்றார்.[6] 2021ஆம் ஆண்டில், சிங்கள திரைப்படத்துறையின் ஆரம்ப தசாப்தங்களில் சிங்கள திரைப்படத்துறைக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய 21 கலைஞர்களுக்காக நடைபெற்ற விழாவில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Irangani As Told to Kumar de Silva", Kumar de Silva, Samaranayake Publishers, 2013
- 1 2 "Lankadeepa Online". www.lankadeepa.lk. Archived from the original on 2013-10-16. Retrieved 2013-10-16.
- ↑ "The Sunday Times News and Comments". www.sundaytimes.lk. Archived from the original on 2019-08-04. Retrieved 2019-02-28.
- ↑ "Love the environment The environment protects you". Sarasaviya. 2021-09-01. Archived from the original on 2021-09-03. Retrieved 2021-09-03.
- ↑ "A Shining Star striving to protect Planet Earth". Daily News(Sri Lanka). 23 May 2007 இம் மூலத்தில் இருந்து 4 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604115434/http://www.dailynews.lk/2007/05/23/fea12.asp.
- 1 2 3 4 "Beloved mother of Sinhala cinema: Irangani Serasinghe". Silumina. Archived from the original on 2021-06-09. Retrieved 2021-06-07.
- ↑ "Love the world ... the world will return and love you infinitely". Silumina. Archived from the original on 2021-06-06. Retrieved 2021-06-05.
- ↑ "Fascinating facet of genuine original art". Sunday Observer (Sri Lanka). 16 December 2007 இம் மூலத்தில் இருந்து 19 December 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071219172740/http://www.sundayobserver.lk/2007/12/16/spe05.asp.
- ↑ "An award for pioneering artists in cinema". Sarasaviya. Archived from the original on 30 December 2021. Retrieved 30 December 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- Iranganie Serasinghe's SLMDb
- Iranganie Serasinghe's Biography in Sinhala Cinema Database
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Iranganie Serasinghe
- Iranganie Serasinghe – personal website
- National Film Corporation of Sri Lanka – official website
- Irangani Serasinghe's childhood photographs
- රංගන විජිතයේ කිරුළු පළන් ආදරණීය මිත්තණිය අයිරාංගනී සේරසිංහ කියයි
- යථාර්ථවාදී රංගනයක පුරෝගාමී නිළිය
- අපතේ ගිය ඇගේ රූපණ ප්රතිභාව