ஐயுறவியல்
Jump to navigation
Jump to search
ஐயுறவியல் (Scepticism) என்பது ஒரு விளக்கத்தை நம்பிக்கையால் அல்லது அதிகாரத்தால் ஏற்றுக்கொள்ளாமல் ஐயுறவு அல்லது சந்தேக கண்ணோட்டத்தோடு பார்த்து, ஆதாரங்களைத் தேடும் முறைமையக் குறிக்கிறது. சில விடயங்களில் தெளிவான முடிவுகள் இல்லாவிட்டால் அது தொடர்பாக இறுதியான முடிவுகள் எட்டாமல், ஐயமுற்று தொடர்ந்து தேடுவது ஐயுறவியல் பண்பு ஆகும். ஐயுறவியல் மூடநம்பிக்கைகள், சமய நம்பிக்கைகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களைக் முன்வைக்கிறது.