ஐயங்கார் தமிழ்
ஐயங்கார் தமிழ் | |
---|---|
பிராந்தியம் | முதன்மையாக தமிழ்நாட்டிலும், கருநாடகத்திலும் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (ஐயங்கார் சமூகம் பொதுத் தமிழுடன் இணைந்து தன் பேச்சுவழக்கையும் பயன்படுத்துகிறது) (date missing) |
ஆரம்ப வடிவம் | பழந்தமிழ்
|
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | – |
மொழிக் குறிப்பு | aiya1239[1] |
ஐயங்கார் தமிழ் ( Iyengar Tamil ) என்பது தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும், தென்னிந்தியாவின் பிற அண்டைப் பகுதிகளிலும் பெரும்பாலும் பேசப்படும் தமிழ் பேச்சுவழக்கு ஆகும். இது தமிழ் பிராமணர்களின் ஒரு பிரிவான ஐயங்கார் சமூகத்தினரால் பேசப்படுகிறது, இதன் உறுப்பினர்கள் ஸ்ரீ வைஷ்ணவத்தை கடைபிடிக்கின்றனர். [2] ஐயங்கார்கள் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர், இருப்பினும் அவர்களின் பேச்சு மொழி மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
வளர்ச்சி
[தொகு]பண்டைய காலத்தில், பிராமண தமிழ் ஐயர் உட்பட சுமார்த்தம் பாரம்பரியத்துடன் தொடர்புடைய பிராமணர்களால் மட்டுமே பேசப்பட்டது. ஐயங்கார்கள் பல நூற்றாண்டுகளாக ஸ்ரீ வைஷ்ணவ மணிப்பிரவாளம் என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான பேச்சுவழக்கை உருவாக்கினர். [3] இடைக்காலத்தில் ஒரே மாதிரியான பிராமண அடையாளத்தின் வளர்ச்சியின் காரணமாக, தமிழகத்தின் வைணவ பிராமணர்கள் பெரும்பாலும் பிராமண தமிழை தங்கள் சொந்த பேச்சுவழக்குடன் இணைத்து, வைணவ மணிப்பிரவாளத்தின் பல சொற்களை தங்கள் சொற்களஞ்சியத்தில் தக்க வைத்துக் கொண்டனர். இருப்பினும், தமிழ் நாட்டிற்கு வெளியே வசிக்கும் ஹெப்பர் மற்றும் மண்டியம் ஐயங்கார், ஐயங்கார் தமிழையே தொடர்ந்து தங்கள் தாய் மொழியாக பயன்படுத்துகின்றனர்.
சிறப்பியல்புகள்
[தொகு]ஐயங்கார் தமிழின் ஒரு தனித்துவமான பண்பு, சமசுகிருதத்திலிருந்து அதன் வேர்களைக் கொண்டு, புனிதத்தன்மையுடன் தொடர்புடைய சொற்களஞ்சியத்தைத் தக்கவைத்துக்கொண்டதாகும். எடுத்துக்காட்டாக, ஐயங்கார் தமிழ் குடிநீருக்கும் ( தீர்த்தம் ) குடிக்க பயன்படுத்தப்படாத நீருக்கும் ( ஜலம் ) இடையே உள்ள வேறுபாட்டைக் கொண்டுள்ளது. முந்தையது ஒரு புனிதமான பொருளைக் குறிப்பதாக உள்ளது. பொதுவாக தமிழ் பேச்சுவழக்கில், குடிநீரைக் குறிக்க தண்ணி என்ற சொல் பயன்படுத்துகிறது. இதேபோல், ஐயங்கார்கள் மதப் பிரசாதமான உணவைக் குறிக்க பக்ஷணம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இது பொதுத் தமிழில் இல்லை.
இலக்கணத்தின் அடிப்படையில், ஐயங்கார் தமிழில் விசாரிப்புகளின் பின்னொட்டுகளில் பெரும்பாலும், ஏளா மற்றும் னோ அகியவை இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு ஐயங்கார் "சாப்டேளா?" அல்லது "சாப்டியானோ?" என்று கேட்பார். இது பொதுத் தமிழ் பேச்சு வழக்கான "சாப்டீங்களா?" என்று விசாரிப்பதாகும். ஐயங்கார் தமிழில், கட்டளைகள் வரும்போது சொற்களின் முடிவில் "ஓ" என்று வரும். காட்டாக, ஒரு ஐயங்கார், யாரையாவது போகச் சொல்ல, பேச்சுவழக்கில் "போங்க" என்பதற்குப் பதிலாக "போங்கோ" என்று கூறுவார்.
பொதுத் தமிழ் மற்றும் ஐயங்கார் தமிழ் ஆகியவற்றுக்கு இடையேயான மாறுபாடுகளின் விரிவான பட்டியலுக்கு, பிராமனத் தமிழைப் பார்க்கவும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "ஐயங்கார்". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Nagendra Kr Singh, ed. (1997). Encyclopaedia of Hinduism. New Delhi: Centre for International Religious Studies. ISBN 81-7488-168-9. கணினி நூலகம் 37795201.
- ↑ Bright, William; Retnamma, K. (March 1978). "A Linguistic Study of Early Manipravalam". Language 54 (1): 248. doi:10.2307/413039. பன்னாட்டுத் தர தொடர் எண்:0097-8507.