உள்ளடக்கத்துக்குச் செல்

ஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி-அண்ணீரக அச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி-அண்ணீரக அச்சின் தொகுப்பு (CRH= கார்டிகோடிராபின் வெளியிடு இயக்குநீர், ACTH = அட்ரினோ கார்டிகோடிராபிக் இயக்குநீர்).

ஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி-அண்ணீரக அச்சு (hypothalamic-pituitary-adrenal axis; HPA; HTPA; LHPA) என்பது ஐப்போத்தலாமசு, கபச் சுரப்பி, அண்ணீரகச் சுரப்பிகளுக்கிடையில் நடைபெறும் சிக்கலான நேரடி பாதிப்புகளையும், பின்னூட்டத் தொடர்புச் செயற்பாடுகளையும் குறிப்பிடுகின்ற தொகுப்பு அமைப்பாகும். எப்போதாகிலும், இந்த அச்சு ஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி-அண்ணீரக-பாலக அச்சு என்றும் அழைக்கப்படுகின்றது. ஐப்போத்தலாமசு, கபச் சுரப்பி, அண்ணீரகச் சுரப்பிகளுக்கிடையேயானத் தொடர்புகளைக் குறிக்கும் நரம்பிய-அகஞ்சுரக்குந்தொகுதியின் பெரியப் பகுதியாக உள்ள ஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி-அண்ணீரக அச்சானது உளைச்சலுக்கான (மன இறுக்கம்) நம் செயற்பாடுகளைக் கட்டுபடுத்துகின்றது. மேலும் சமிபாடு, நோயெதிர்ப்பு, மன நிலை மற்றும் உணர்ச்சி மாற்றங்கள், பாலின ஈர்ப்பு, ஆற்றல் சேமிப்பு மற்றும் செலவிடுதல் ஆகியப் பலவகையான உடற்செயற்பாடுகளை குளுக்கோகார்டிகாய்டுகளின் உள்பரவிய வெளிப்பாட்டை ஒழுங்குப்படுத்துவதன் மூலமாகச் சீரமைக்கிறது[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bellavance MA, Rivest S. (March 2014). "The HPA - Immune Axis and the Immunomodulatory Actions of Glucocorticoids in the Brain.". Front Immunol. 5: 136. doi:10.3389/fimmu.2014.00136. பப்மெட்:24744759.