ஐப்பரியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்மர தேசியப் பூங்காவில் உள்ள செம்மரங்கள் (எடுத்துக்காட்டுக்கு) (படத்தில் இருப்பவற்றில் எதுவும் ஐப்பரியான் மரம் இல்லை)

ஐப்பரியான் என்பது ஒரு செம்மரம். இது வடக்கு கலிபோர்னியாவில் உள்ளது. இதன் உயரம் 379.3 மீட்டர்கள். இன்று உயிருள்ள மரங்களில் இதுவே உலகின் உயரமான மரம். [1] இது 2006 ஆகத்து 25-ஆம் நாள் கண்டறியப்பட்டது.[2] இது இருக்கும் துல்லியமான இடம் தெரிவிக்கப்படவில்லை. ஏனெனில் தெரிவிக்கப்பட்டால் வரும் அதிகமான பார்வையாளர்களால் காட்டின் சூழியல் பாதிக்கப்படும் என்று கருதுகின்றனர். இதில் 502 கனமீட்டர் மரம் இருக்குமெனவும் 700-800 ஆண்டுகள் வயதுடையதாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மரத்தின் மேற்பகுதியில் மரங்கொத்திகளால் ஏற்பட்ட சேதத்தினால் இம்மரம் மேலும் உயரமாக வளராமல் போயிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Earle, CJ (2011). "Sequoia sempervirens". The Gymnosperm Database. http://www.conifers.org/cu/Sequoia.php. பார்த்த நாள்: 2011-08-12. 
  2. Preston, R (2006-10-09). "Tall for its age – Climbing a record breaking redwood". The New Yorker. http://www.savetheredwoods.org/league/pdf/srl_newyorker.pdf. பார்த்த நாள்: 2010-03-26. 
  3. Martin, G (2006-09-29). "World's tallest tree, a redwood, confirmed". SFGate. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2006/09/29/BAGBULF6NG1.DTL&hw=hyperion&sn=004&sc=799. பார்த்த நாள்: 2009-08-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐப்பரியான்&oldid=2549298" இருந்து மீள்விக்கப்பட்டது