ஐந்தொழில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து சமய நூல்களின் அடிப்படையில் ஐந்தொழில்கள் என்பது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்பவனவாகும். இந்த ஐந்தொழில்களையும் இறைவன் செய்து மக்களைக் காப்பதாக வேதங்களிலும், புராணங்களிலும் குறிப்புகள் உள்ளன.[1]

பொதுவாக இந்து மதத்தில் முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவை மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால், சிவபெருமான் ஆகியோர் இத்தொழிலைச் செய்வதாக முன்னிலைப்படுத்தப் படுகின்றார்கள். சில நூல்களில் ஐந்தொழில்களை ஐந்து மூர்த்தங்கள் செய்வதாக குறிப்புகள் உள்ளன. இதன்படி பிரம்மா படைத்தலையும், திருமால் காத்தலையும், உருத்திரன் அழித்தலையும், மகேசுவரன் மறைத்தலையும், சதாசிவன் அருளலையும் ஆற்றுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் சைவத்தில் ஐந்தொழில்களையும் சைவத்தின் கடவுளான சிவபெருமானே செய்வதாகும். அதற்காக சிவபெருமானின் ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகியவற்றைச் செய்வதாக சைவ நூல்கள் கூறுகின்றன. ஐந்தொழில்களைச் செய்பவர் விஸ்வகர்மா என்னும் ஆதி கடவுள். இவரே சிவன், சக்தி, விஷ்ணு ஆகியவரைப் படைத்தார். விஸ்வகர்மாவின் ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகியவற்றைச் செய்வதாக சைவ நூல்கள் கூறுகின்றன.[சான்று தேவை]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. டாக்டர் வை. இரத்தினசபாபதி, தொகுப்பாசிரியர் (1969). சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நால்வர் நான்மணி மாலை. மணிவாசகர் பதிப்பகம். பக். 133. https://books.google.co.in/books?id=RLA_AAAAIAAJ&q=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88&dq=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88&hl=en&sa=X&ved=2ahUKEwjH3omlgrTvAhUIWX0KHcHuCloQ6AEwAHoECAMQAw. "கடவுளுக்கே உரிய ஐந்தொழிலை ( படைத்தல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் ) இப்பாட்டுக்களே நடைமுறையிற் செய்து காட்டின" 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தொழில்கள்&oldid=3399141" இலிருந்து மீள்விக்கப்பட்டது