ஐந்து உணர்வுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்து உணர்வுகள்
இயக்கம்ஞான ராஜசேகரன்
தயாரிப்புஞான ராஜசேகரன்
கதைஞான ராஜசேகரன்
இசைசிறீகாந்து தேவா
ஒளிப்பதிவுசி. ஜே. இராஜ்குமார்
படத்தொகுப்புபி. லெனின்
கலையகம்அறம் புரொடக்சன்ஸ்
வெளியீடுநவம்பர் 26, 2021 (2021-11-26)
ஓட்டம்106 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஐந்து உணர்வுகள் ( Ainthu Unarvugal) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி பலகதை தொகுப்புத் திரைப்படமாகும். இது ஆர். சூடாமணியின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கபட்டது. இப்படம் ஞான ராஜசேகரன் இயக்கிய ஐந்து குறும்படங்களைக் கொண்டுள்ளது. படம் 26 நவம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. [1] [2] [3]

கதை[தொகு]

கதைகள் ஐந்தும் 1975 முதல் 1985 வரை தமிழ்நாட்டில் நிகழ்ந்தவையாக உள்ளன.

முதலாவதாக, இரண்டின் இடையில், பதின்ம வயது மாணவன் ஒருவன் தன்னுடைய தனிப்பயிற்சி ஆசிரியைமீது கொள்ளும் அந்த வயதுக்குரிய ஈர்ப்பின் கதையை விவரிக்கிறது. பையனுக்கு வரலாற்றில் ஆர்வத்தை ஊட்டுகிறார் ஆசிரியை. மேலும் அவர் பாடத்தை கற்பிக்கும் விதத்தால் ஈர்க்கப்பட்ட அவன் அவர் மீது ஈர்ப்பு கொள்ளத் தொடங்குகிறான். பின்னர் அவர் திருமணமானவர் என்பதை அறிந்த பிறகு, அவரது கணவர் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்கிறான். அந்தச் மாணவனின் தாய் எப்படி நிலைமையைக் கையாளுகிறார் என்பதுதான் கதையின் மையக்கரு.

இரண்டாவது கதை, அம்மா பிடிவாதக்காரி, ஒரு விதவைத் தாயை மையமாகக் கொண்டது. தாயும், மகனும் ஒரு சிறிய வீட்டில் வசிக்கின்றனர். தனியுரிமைக்கு அங்கே அதிக வாய்ப்பு இல்லை. மகனுக்குத் திருமணமான பிறகு, தாய் அவளது மகன், மருமகளுடன் அந்த சிறிய வீட்டிற்குச் செல்கிறார். புதுத் தம்பதியரின் அறையில் இருந்து ஒவ்வொரு நாள் இரவும் வெளிப்படும் ஒலியின் விளைவாக, தாய் ஒரு மகளிர் விடுதிக்குச் செல்ல முடிவெடுக்கிறார்.

மூன்றாவது கதையான பதில் பிறகு வரும் வரதட்சணைப் பிரச்சினையை மையமாகக் கொண்டது. ஒரு பெண், மணமகனுக்கு வரதட்சணை கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக திருமணமாகாமல் இருக்க முடிவு செய்கிறாள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நாள் ஒரு மாப்பிள்ளை அவளைச் சந்திக்கிறான். அவன் தன்னை மனைவியை இழந்தவர் மற்றும் இரண்டு மகன்களின் தந்தை என்று கூறுகிறான். மேலும் அவன் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறுகிறான். இருப்பினும், அவன் தனது விருப்பத்தை மறுபரிசீலனை செய்யும் ஒரு ரகசியத்தை அவள் வெளிப்படுத்துகிறாள்.

நான்காவது கதை தனிமைத் தளிர் கதை தாத்தா, பாட்டி தங்கள் பேத்தி மீது வைத்திருக்கும் அன்பை விவரிக்கிறது. பெற்றோரின் அன்புக்கு ஏங்குகிறாள் ஒரு சிறுமி. அவளின் உணர்வை உணர்ந்த தாத்தாவும் பாட்டியும் தங்களுடனேயே வைத்துக் கொண்டு அரவணைத்து வளர்க்கின்றனர். அச்சிறுமி வளரிளம் பருவத்தை அடைந்த பின்னர். அவளை தங்களிடம் வந்துவிடும்படி பெற்றோர் அழைக்கின்றனர். அவள் பெற்றோரின் அழைப்பை ஏற்றாளா இல்லையா என்பதை குழந்தகளின் உலகில் இருந்து இக்கதை பேசுகிறது.

ஐந்தாவது கதை, களங்கம் இல்லை, தென்னிந்தியாவைச் சேர்ந்த வேலைக்குப் போகும் பெண் பாலியல் நெருக்கடியால் கடும் மன நெருக்கடியைச் சந்திக்கிறாள். பின்னர் துணுவுடன் வாடகை வீட்டில் தனியாக வாழும் முடிவை எடுக்கிறாள். அவள் மீது பாலியல் வன்முறையை பிரயோகித்தவனை ஒரு முதன்மையான சந்தர்பத்தில் எதிர்கொள்ளும் நேரம் வருகிறது. அப்போது அதே துணிவுடன் அவனது போலி முகத்திரையை கிழித்தெறிகிறாள்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

எழுத்தாளர் ஆர். சூடாமணி எழுதிய ஐந்து கதைகளை அடிப்படையாகக் கொண்டு ஞான ராஜசேகரன், உறவுகளைப் பற்றியும், அவற்றில் உள்ள உளவியல் நுணுக்கங்களைப் பற்றியும் திரைக்கதை அமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம், அவர் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களை மட்டுமே உருவாக்கும் ஒரு திரைப்பட படைப்பாளி என்ற வட்டத்தை விட்டு விலக ஆர்வமாக உள்ளதை உணர்தியுள்ளார். [4]

கூத்துப்பட்டறையின் நடிப்புப் பட்டறைகளில் கலந்துகொண்டபோது குழுவினரில் காணப்பட்ட நடிகை நயனா சாயை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். [5]

முதலில் மேலதிக ஊடக தளத்தில் வெளியிடத் திட்டமிட்டிருந்த போதிலும், ஞான ராஜசேகரனின் படத்தைப் பார்த்த, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், செயற்கைகோள் அலைவரிசைகளுக்கான முகவர்களின் கருத்துகளைப் பெற்றார். பின்னர் அவர் திரையரங்குகளில் படத்தை வெளியிடும் முடிவை எடுதார். [6]

வெளியீடு[தொகு]

இந்தத் திரைப்படம் 26 நவம்பர் 2021 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. மேலும் தற்செயலாக அதே வெளியீட்டுத் தேதியில் வசந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (2021) படமும் வெளியானது. இவை தென்னிந்தியப் பெண்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை. [7] தி இந்துவின் ஒரு விமர்சகர், தினத்தந்தி செய்தித்தாளில் இருந்த ஒரு விமர்சகரைப் போலவே, திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனத்தை அளித்தார். [8] [9]

குறிப்புகள்[தொகு]

  1. "ஞானராஜசேகரன் இயக்கிய படம் ஐந்து உணர்வுகள்". Dailythanthi.com. 17 September 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.
  2. "திரைக்கு வரும் ஞானராஜசேகரனின் ஐந்து உணர்வுகள் - எஸ். சம்பத்குமார்". 9 October 2021.
  3. "Ainthu Unarvugal Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos | eTimes". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.
  4. "IAS officer's movie portrays writer Chudamani's feminist themes". Inmathi. 17 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.
  5. "Doing a film in a language you know is a big plus point, says newbie Nayana Sai | Tamil Movie News - Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.
  6. "Author Chudamani's ladies come alive on celluloid in Aynthu Unarvugal". 20 September 2021.
  7. K Salil (15 December 2021). "A rarity in Tamil cinema: Two anthologies, both focusing on women". The Federal. பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.
  8. "ஐந்து உணர்வுகளின் கதை!".
  9. "Ainthu Unarvugal film review". Dailythanthi.com. 2020-04-17. பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்து_உணர்வுகள்&oldid=3651586" இலிருந்து மீள்விக்கப்பட்டது