ஐந்திறம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐந்திறம் என்பது குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் என்பவர் எழுதிய கட்டிடக்கலை நூலாக காட்டப்படுகிறது. அதே சமயம் இந்நூல் எழுதப்பட்ட காலம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு இது ஒரு போலி நூல் எனவும் கூறப்படுகிறது. இதை கணபதி (சிற்பி) என்றவர் மீளுருவாக்கி 1986ல் வெளியிட்டார். இதை சடைச்சங்க காலமான கி.மு. 5,000த்தின் போது எழுதியிருக்கலாம்.

பெயர்க்காரணம்[தொகு]

ஐந்திரம் = ஐந்து கூறுகளை மூலமாக கொண்ட நூல். அந்த ஐந்து கூறுகள்,

 1. மூலம்
 2. சீலம்
 3. காலம்
 4. கோலம்
 5. ஞாலம்

31 கொள்கைகள்[தொகு]

மூலக்கட்டுரை : மய அறிவியல்

 1. பரவெளியில் எப்பொருளும் படைக்கப்படவில்லை. அனைத்தும் ஒரு மூலப்பொருளின் தோற்ற வெளிப்பாடே.
 2. அம்மூல சக்தியே சில நேரங்களில் ஆதிமூலம் எனவும், பிரம்மன் (குவையப் புலக்கோட்பாடு) எனவும் அழைக்கப்படுகிறது.
 3. இம்மூல சக்தியே தன்னை வெளிப்படு தோற்ற இயல்புக்கேற்ப அழகாக தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது. இச்சக்தி தான் வெளிப்படும் இடம், தோற்றம், காரணம் மற்றும் இயல்புக்கேற்ப தன்னை வெவ்வேறு பொருட்களாக தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது.
 4. இந்த தோற்ற ஆதாரமே மூலமென்றும், மையமென்றும், புள்ளியென்றும் அறியப்படுகிறது.
 5. இயற்கையில் உள்ள பொருடகள் அனைத்தும் சக்தியும் பொருட்களும் ஒன்றிணைந்த தோற்றமே.
 6. கட்டற்ற அண்டவெளி என்பது சக்தியும் பொருளும் இணைந்த களத்தோற்றமாகவும், அண்டத்திலுள்ள அனைத்து பொருட்களுக்கும் மூலமாய் அமைகிறது.
 7. ஒம் என்ற பிரணவமே பார்வையில் ஒளியாகவும், செவிப்புலன்களில் ஒலியாகவும் பரிணமிக்கிறது.
 8. இவ்வண்டத்தின் பொருள் தோற்றம் அனைத்தும் இசையின் தோற்றமாகவோ, மாதிரியாகவோ, உருவமாகவோ அல்லது இசையின் அளவுகோளில் உள்ள வேறு வெளிப்பாடுகளினாலோ ஆனவை.
 9. காலமே தான் படைத்தவற்றை ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறது.
 10. உருவமற்ற பிரம்மத்தின் முதல் தோற்ற வெளிப்பாடு சதுரமாகும்.
 11. இந்த ஆதி சதுர தோற்றமே உள்ளார்ந்த ஆற்றலின் வரைபடமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதையே வாஸ்து புருச மண்டலம் என்கின்றனர்.
 12. பரவெளி கனசதுர அணுசக்திகளால் ஆனது. அவையே இவ்வண்டத்தின் கட்டடக்கண்டமாகும்.
 13. அந்த கனசதுரமே சிற்றவை(சிற்றம்பலம்) எனப்படும்.
 14. இச்சிற்றவையில் உள்ள செங்குத்தான ஒளிவீசும் பகுதியே ஒளி நூல் ஆகும். இதையே வடமொழியில் பிரம்மசூத்திரம் என்கின்றனர்.
 15. இவ்வொளிநூலே மூலத்தூண் எனவும் மூலஸ்தம்பம் எனவும் கொள்ளப்படுகிறது.
 16. இவ்வொளி நூல் ஒரு குறிப்பிட்ட தாளத்தில் அதிர்கிறது. இவ்வதிர்வுகளே இயற்கையின் ஒழுங்காக அமைகிறது.
 17. இவ்வதிர்வுகளையே சிவ தாண்டவம் இவ்வண்டத்தில் வெளிப்படுத்துகிறது.
 18. கனசதுர அனுக்களின் மூலக்கூறான சிற்றாகாசமே விண்வேளியின் கருவாகும்.
 19. சிற்றாகாசம் என்பது ஒலிக்கும் ஒளிக்கும் உண்டான கலப்பு.
 20. பரவெளி என்பதே ஒளியாகவும், அவ்வொளியே அண்டப்பொருட்களுக்கு மூலமாகவும் இருக்கிறது. இவ்வொளியை நுண்பொருள் என தமிழிலும் பிரம்மம் என வடமொழியிலும் கூறுகின்றனர்.
 21. இந்நுண்பொருளே ஆற்றல் என்னும் பிரம்மமாகவும், இப்பிரம்மமே மூடப்பட்ட வெளிகளில் உயிர் சக்தியாகவும் இருக்கிறது.(இம்மூடப்பட்ட வெளி என்பது உயிரினம், கட்டிடம், அண்டம் என அனைத்து இயங்கு பொருட்களுக்கும் பொருந்தும்)
 22. கட்டிடக்கலையே கணக்கியலின் உச்சம்.
 23. கட்டற்ற காலத்தின் இயக்கமே கணக்கியலின் மூலம்.
 24. பரவெளியின் அதிர்வே காலம்.
 25. பரவெளியும் காலமும் ஒன்றே.
 26. காலம் என்பது பரவெளியின் ஒரு நுட்பமான வெளிப்பாடு.
 27. காலமே அண்டப்பொருட்கள் அனைத்துக்கும் மூலக்கூறு.
 28. சிற்றாகாசமே பேராகாசத்தின் முழு அடையாளம்.
 29. பரவெளி தன்னை பெளிப்படுத்த ஒவ்வொரு கணமும் துடிக்கிறது.
 30. ஒரு சிற்பியானவன் தன் உள்மன சக்தியை கொண்டு ஒம் என்ற பிரணவத்தை சிற்றாகாசத்திலும் பேராகாசத்திலும் ஒலியாகவும் ஒளியாகவும் உணரத்தெரிந்திருக்க வேண்டும்.
 31. தன் அகயியக்கத்தை அறியாமல் எவராலும் புறவெளியின் இயக்கத்தை அறிய முடியாது.


மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

 • The Aintiram and,
 • Pranava Veda, www.aumscience.com
 • Free Space in Mayonic Science: A Tradition of Free Knowledge - Dr. V. Sivanandan Achari

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்திறம்&oldid=2542964" இருந்து மீள்விக்கப்பட்டது