ஐந்திரா கியாவ் சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐந்திரா கியாவ் சின் என்பவர் 1977 ஏப்ரல் 24 அன்று பிறந்த மியான்மரைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகையாவார். இவர் இரண்டு முறை மியான்மர் அகாதமி விருது பெற்றுள்ளார். மேலும் இவர் ஒரு தொலைக்காட்சி விளம்பர நடிகையுமாவார். இவர் ஒரு தொழில்முறை ஓவியரும் கூட. பர்மிய பொழுதுபோக்கு துறையின் முக்கிய நட்சத்திரங்களில் இவர் ஒருவர். இப்போது, அவருக்கு 40 வயதுக்கு மேலானலும் மியான்மரின் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மெயா தீடா மற்றும் கியாவ் சின் ஆகியோரின் இளைய குழந்தையாக யாங்கோனில் செழிப்பான ஒரு குடும்பத்தில் ஐந்திரா கியாவ் சின் பிறந்தார். இவர் நவீன பர்மிய இராணுவத்தை நிறுவிய முப்பது தோழர்களில் ஒருவரான போ சியாவின் பேத்தி மற்றும் தகோன் தயாவின் மருமகள் ஆவார். எழுத்தாளர் மற்றும் பாடகர் ஹேமா நே வின் உறவினரும் திரைப்பட நட்சத்திரமான யாசா நே வின் உறவினரும் ஆவார். கியாவ் சின் யாங்கோனின் தகோன் 1 உயர்நிலைப் பள்ளியில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

தி மியான்மர் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், கியாவ் சின் திரைப்படம் தனது தொழில் வாழ்க்கையின் முதல் தேர்வு அல்ல என்பதை ஒப்புக்கொண்டார். மாறாக அவர் தன்னை ஒரு சுயாதீன கலைஞராகவோ அல்லது மருத்துவராகவோ ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் பள்ளிப் படிப்பில் துணை தரங்களைப் பெற்றதனால் தனது விருப்பங்களை மறு மதிப்பீடு செய்துள்ளார். பொழுதுபோக்கு துறையில் அவரது முதல் பயணம் உள்ளூர் அழகு போட்டியின் மூலம் வந்தது. அவர் 1996 இல் மிஸ் கொக்கெய்ன் போட்டியில் வென்றார், பின்னர் அதே ஆண்டு மிஸ் கிறிஸ்மஸ் போட்டியிலும் வென்றார். இதற்குப் பிறகு, அவர் தொலைக்காட்சி தொடர்களான "லவ்விங் எடிட்டர்" மற்றும் "ஆக் கைன் மே" போன்ற படங்களில் நடிக்கத் தொடங்கினார். "ஆக் கைன் மே" என்ற தொலைக்காட்சித் தொடரில் "போ டே" என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமானார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பத்திரிகைகள் மற்றும் விளம்பரங்களில் தோன்றினார். 2000 ஆம் ஆண்டில், முன்னணி நடிகையாக "பியாவ் லை க்யா யா ஆங்" என்றப் படத்தில் ஒரு நடிகையாக தனது பெரிய வெற்றியைப் பெற்றார்.[1] "தா-மீ-சின்" திரைப்படத்தில் என்ற படத்தில் நடித்ததற்காக 2000 மாவது ஆண்டு அகாதமி விருதுக்கு சிறந்த முன்னணி நடிகையாக பரிந்துரைக்கப்பட்டார்.

ஐந்திரா கியாவ் சின் 2004 மியான்மர் அகாதமி விருதை வென்றார், அவர் தொடர்ந்து திரைப்படங்களிலும், விளம்பரங்களுக்கான நடிகையாகவும் நடித்து வருகிறார். "நைப் இன் தி ஹார்ட்" என்றத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 2017 மியான்மர் அகாதமி விருதையும் ஐந்திரா கியாவ் சின் வென்றார். அவர் 40 வயதைத் தாண்டினாலும், இளம் நட்சத்திரங்கள் நிறைந்த ஒரு துறையில் அவர் இன்னும் ஒரு சிறந்த நடிகையாகவெ இருக்கிறார்.

திருமணம்[தொகு]

அவர் 1 ஜனவரி 2011 அன்று நடிகர் இப்பியே தி ஓவை மணந்தார். அவர்களுக்கு முதல் மகள் 2011 அக்டோபர் 14 அன்று பிறந்தார் மற்றும் 2015 ஆகஸ்ட் 27 அன்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

சமூக பணி[தொகு]

ஐந்திரா கியாவ் சின் சமூகம் மற்றும் பல்வேறு பர்மிய தொண்டு நிறுவனங்களுடன் சமூக ரீதியாக ஈடுபட்டுள்ளார், மேலும் அவரது சகாக்களால் நாட்டின் இளம் பெண்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக கருதப்படுகிறார்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. Who is the real Eindra Kyaw Zin. 2007-11-12. http://www.mmtimes.com/no392/t001.htm. பார்த்த நாள்: 2019-11-21. 
  2. May Oo Moe (2007-11-12). "Who is the real Eindra Kyaw Zin". தி மயன்மார் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 2012-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120927224609/http://www.mmtimes.com/no392/t001.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்திரா_கியாவ்_சின்&oldid=3237085" இலிருந்து மீள்விக்கப்பட்டது