ஐந்தாவது மருத்துவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐந்தாவது மருத்துவர் (ஃபிப்த் டாக்டர் Fifth Doctor) என்பது பிபிசி தொலைக்காட்சியில் வெளியான அறிவியல் புனைகதை தொலைக்காட்சித் தொடரான டாக்டர் ஹூவில் உள்ள கதைமாந்தரின் பெயர் ஆகும். பீட்டர் டேவிசன் என்பவர் இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.[1]

கண்ணோட்டம்[தொகு]

இதற்கு முந்தைய மருத்துவராக நடித்த டாம் பேக்கர், நான்காவது மருத்துவர் தொடரில் இருந்து விலகுவதாக பிபிசி தெரிவித்தது. பின்னர், நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் அடுத்த தொடரில் நடிக்கும் இந்தக் கதாப்பத்திரம் முந்தைய நடிகரின் தோற்றத்தில் இருந்து வேறுபட்டிருக்க வேண்டும் அதே சமயத்தில் அவர் மக்களில்டம் ஏற்கனவே சற்று அறிமுகம் கொண்டவராக இருத்தல் வேண்டும் எனவும் நினைத்தது. பிபிசியின் மற்றொரு தொடரான ஆல் கிரியேச்சர்ஸ் கிரேட் அண்ட் ஸ்மால் என்பதில் டிரிஸ்டன் பார்னன் எனும் கதாப்பத்திரத்தில் நடித்த பீட்டர் டேவிசன் என்பவர் பரவலாக கவனம் பெற்றார். அதனால் அவரை இந்தக் கதாப்பத்திரத்தில் நடிக்க தயாரிப்பாளர்களான ஜான் நாதன் -டர்னர் வரி ஆகிய இரு தயாரிப்பாளர்களும் தீர்மானித்தனர்.[2] ஃபிப்த் டாக்டரின் சகாப்தம் என்பது "அடிப்படைகளுக்குத் திரும்பு" எனும் அணுகுமுறையால் பரவலாக அறியப்பட்டது.மேலும் சில நகைச்சுவை மற்றும் சில நேரங்களில் வரும் திகில் மற்றும் அறிவியல் துல்லியத் தன்மை ஆகியவை இந்தத் தொடரில் இருக்க வேண்டும் என இதன் தயாரிப்பாளர்களான ஜான் நாதன்-டர்னர் ஆகியோர் ஊக்குவித்தனர்.

தோற்றங்கள்[தொகு]

ஃபிப்த் டாக்டர் கதாப்பத்திரம் முதன்முதலில் தொலைக்காட்சியில் லோகோபோலிஸின் கடைசி அத்தியாயத்தில் 21 மார்ச் 1981 இல் ஒளிபரப்பப்பட்டது. 20 வது ஆண்டின் சிறப்பு தி ஃபிப்த் டாக்டர் உட்பட டாக்டர் ஹூவின் 19 மற்றும் 20 பருவங்களில் டேவிசன் இந்த பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் தொடரின் இரண்டாவது டக்டராக நடித்த பேட்ரிக் டிரொட்டன் இவரிடம் தொடர்ந்து இதே கதாப்பத்திரத்தில் நடிக்காது வேறு சில தொடர்களிலும் ஈடுபடுமாறு அறிவுரை கூறினார். அவரின் ஆலோசனையின் படி 21 ஆவது பருவத்தில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். ஐந்தாவது டாக்டராக இவர் மார்ச் 16, 1984 இல் வெளியான தொ கேவ்ஸ் ஆஃப் ஆண்ட்ரோசானியன் எனும் தொடரில் நடித்திருந்தார். 1999 ஆம் ஆண்டின் துவக்கத்தில் பிக் பினிஷ் தயாரிப்பு நிறுவனத்திற்காக இவர் டாக்டர் தொடரினை பதிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டார். 2007 ஆம் ஆண்டில் தனது 56 ஆவது வயதில் முதன் முதலாக திரையில் தோன்றினார். டாக்டர் ஹூ தொடரின் பத்தாவது டாக்டரான டேவிட் டெண்னடுடன் இணைந்து சில்ட்ரன் இன் நீட் எனும் திரைப்படத்தில் நடித்தார்.[3]

தொலைக்காட்சி தவிர்த்து[தொகு]

சிறுகதைகள்[தொகு]

டாக்டர் ஹூவின் இருபதாம் ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் எரிக் சவார்டு என்பவர் எழுதிய பெர்த் ஆஃப் ரெனெகெட் எனும் நூலில் இந்தக் கதாப்பத்திரம் இடம்பெற்றது. டேவிட் ஜெ. ஹோவ் என்பவர் எழுதிய பெர்த் ஃபேசினேசன் எனும் சிறுகதை, பால் கார்னல் என்பவர் எழுதிய டிகலாக் எனும் சிறுகதை, டேனியல் பிலித் என்பவர் எழுதிய டிகலாக் 2எனும் சிறுகதை, கிரெய்க் ஹின்டன் என்பவர் எழுதிய டிகலாக் 3 எனும் சிறுகதை,ஜேக்கி மார்ஷல் என்பவர் எழுதிய பெர்த் டிகலாக் 3 எனும் சிறுகதையில் இந்தக் கதாப்பத்திரம் இடம்பெற்றுள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. McAlpine, Fraser (May 2013). "'Doctor Who: A Companion To The Fifth Doctor".
  2. "Interview with Peter Davison" (April 2009). மூல முகவரியிலிருந்து 2017-10-12 அன்று பரணிடப்பட்டது.
  3. "Dr Peter is back in the Tardis". 21 August 2007. Archived from the original on 23 ஆகஸ்ட் 2007. https://web.archive.org/web/20070823170005/http://www.thesun.co.uk/article/0,,2001320029-2007380654,00.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாவது_மருத்துவர்&oldid=3263601" இருந்து மீள்விக்கப்பட்டது