ஐந்தாண்டுத் திட்டங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1947-2017 வரையில் இந்தியப் பொருளாதாரமானது திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஐந்தாண்டுத் திட்டங்களாகப் பகுக்கப்பட்டு திட்டக் குழு (இந்தியா) (1947-2014) மற்றும் நிதி ஆயோக் (2014-2017) மூலம் வடிவமைக்கப்பட்டும், செயல்படுத்தப்பட்டும், மேற்பார்வையிடப்பட்டும் வருகிறது.
பொருளடக்கம்
- 1 முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் (1951-56)
- 2 இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (1956-60)
- 3 மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் (1961-65)
- 4 நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் (1968-73)
- 5 ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (1974-79)
- 6 ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் (1980-85)
- 7 ஏழாவது ஐந்தாண்டுத்திட்டம் (1985-90)
- 8 எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (1992-97)
- 9 ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002)
- 10 பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (2002-2007)
- 11 பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் (2007-2012)
- 12 பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (2012-2017)
- 13 உசாத்துணைகள்
முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் (1951-56)[தொகு]
1.நாட்டின் பிரிவினை மற்றும் இரண்டாம் உலக போர் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட நிலைமைகளை சீர்செய்தல்
2.நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை தூண்டுதல்
ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டது முதலாம் ஐந்தாண்டு திட்டம்
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (1956-60)[தொகு]
1.நாட்டு வருமானத்தை 25% வரை அதிகரிக்க செய்தல்
2.வேலைவாய்ப்புகளை பேரளவில் பெருக்குதல்
3.வருமானம் மற்றும் செல்வத்தை மையமாக வைத்து சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்
இதன் நோக்கமாக இருந்தது
மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் (1961-65)[தொகு]
1.தொழில் மற்றும் ஏற்றுமதி தேவைகளை பூர்த்தி செய்தல்
2.அடிப்படை தொழில்களை பெருக்குதல்
3.மனிதவளங்களை முறையாகவும் திறமையாகவும் பயன்படுத்துதல்
4.தேசிய வருமானத்தை ஆண்டிற்கு 5% க்கும் மேல் அதிகரிக்க செய்தல்
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் (1968-73)[தொகு]
1.சமவாய்ப்பு
2.சமூக நீதி
3.வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்
4.கல்வியின் தரத்தை பெருக்குதல்
ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (1974-79)[தொகு]
1.நுகர்வோர் பொருட்களின் தரங்களை உயர்த்துதல்
2.வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் (1980-85)[தொகு]
1.கிராமப்புற மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல்
2.வேலை வாய்ப்பை அதிகரித்தல்
3.ஏற்றுமதி வளர்ச்சிக்கு தேவையான சூழலை ஏற்படுத்தி கொடுத்தல்
ஏழாவது ஐந்தாண்டுத்திட்டம் (1985-90)[தொகு]
1. உணவு தானியங்கள் உற்பத்தி
2.வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித்தன்மை ஆகியவற்றில் தீவிர வளர்ச்சியை கொண்டுவருதல்
3.இந்திய பொருளாதாரத்தில் பன்னாட்டு போட்டியை அதிகரித்தல்
எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (1992-97)[தொகு]
1.மனித மேம்பாடு என்பதே இதன் இறுதி இலக்காக இருந்தது
2.இந்த நூற்றாண்டு முடிவதற்குள் ஏறக்குறைய முழு வேலைவாய்ப்பை அளித்தல்
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002)[தொகு]
1. மின்சாரம், தொலைத்தொடர்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, எஃகு மற்றும் ஏனைய கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்தல்