ஐத்தாம் பின் தாரிக் அல் சயீது
ஐத்தாம் பின் தாரிக் அல் சயீது Haitham bin Tariq Al Said | |
---|---|
ஓமான் சுல்தான் | |
ஆட்சிக்காலம் | 11 சனவரி 2020 – இன்று |
முன்னையவர் | காபூசு பின் சயீது அல் சயீது |
பிறப்பு | 13 அக்டோபர் 1954 மஸ்கத், ஓமான் |
துணைவர் | அகாது பின்ட் அப்துல்லா பின் அமாது அல்-புசைதியா[1] |
குழந்தைகளின் பெயர்கள் | தெயாசின் பின் ஐத்தாம் அல்-சயீது பிலராப் பின் ஐத்தாம் அல்-சயீது துரயா பின்ட் ஐத்தாம் அல்-சயீது ஒமைமா பின்ட் அல்-சயீது |
மரபு | அல் சயீது |
தந்தை | தாரிக் பின் தைமூர் |
தாய் | சவானா பின்ட் அமூது பின் அகுமது அல்-புசைதியா[2] |
மதம் | இபாதி இசுலாம் |
ஐத்தாம் பின் தாரிக் அல் சயீது ('Haitham bin Tariq Al Said, அரபு மொழி: هيثم بن طارق آل سعيد; பிறப்பு: 13 அக்டோபர் 1954)[3] ஓமானின் சுல்தான் ஆவார். இவர் 2020 சனவரி 11 இல் சுல்தான் காபூசு பின் சயீதின் இறப்பிற்குப் பின்னர் பதவியேற்றார்[4] இவர் முன்னதாக ஓமானின் மரபு மற்றும் கலாச்சார அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.[5][6]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ஐத்தாம் பின் தாரிக் ஓமானின் அல் சயீது அரச குடும்ப உறுப்பினர் ஆவார். 1979 ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் வெளியுறவு சேவைத் திட்டத்தில் பட்டம் பெற்றார்.[7] இவரின் தந்தை தாரிக் அல் சயீது சுல்தான் தைமூர் பின் பைசலின் மகன் ஆவார். ஐத்தாமின் சகோதரர் அசாத் பின் தாரிக் பின் தைமூர் அல் சயீது ஓமானின் துணைப் பிரதமர் ஆவார்.
பணிகள்
[தொகு]விளையாட்டு ஆர்வலராக அடையாளம் காணப்படும் இவர் 1980களில் ஓமான் காற்பந்துக் கழகத்தின் முதல் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.[8] 1986 முதல் 1994 வரை அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவு அமைச்சகத்தின் துணை செயலாளராக பணியாற்றினார், பின்னர் வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் நாயகமாக (1994-2002) நியமிக்கப்பட்டார்.[9][10] பின்னர் 1990களின் நடுப்பகுதியில் மரபு மற்றும் கலாச்சார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5] வெளிநாடுகளில் இவர் வழக்கமாக ஓமானை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[11]
"ஓமான் 2040" என்ற எதிர்கால பார்வைக்கான குழுவின் தலைவராகவும், ஊனமுற்றோருக்கான ஓமான் கழகத்தின் கௌரவத் தலைவராகவும் உள்ளார்.[12]
ஓமான் சுல்தான்
[தொகு]இவரது முதலாவது உடன்பிறவா சகோதரரும் சுல்தானுமாகிய காபூசு பின் சயீது அல் சயீது 2020 சனவரி 10 இல் வாரிசில்லாமல் இறந்ததை அடுத்து, காபூசு எழுதிய உயிலின் படி, ஐத்தாம் பின் தாரிக் புதிய சுல்தானாக சனவரி 11 இல் அறிவிக்கப்பட்டு, ஓமான் பேரவையில் முடிசூடினார்.[13][14]
விருதுகள்
[தொகு]- தேசிய விருதுகள்
- அல்-ரிசோக் விருது (23 நவம்பர் 2010).
- வெளிநாட்டு விருதுகள்
- ஆசுத்திரியக் குடியரசின் விருது (31 மார்ச் 2001).
- அப்துலசீசு மன்னர் விருது (24 திசம்பர் 2006).
வம்சாவளி
[தொகு]16. துர்க்கி பின் சயீது | |||||||||||||||||||
8. பைசல் பின் துர்க்கி | |||||||||||||||||||
17. எத்தியோப்பிய சூரி | |||||||||||||||||||
4. தைமூர் பின் பைசல் | |||||||||||||||||||
18. துவைனி பின் சயீது | |||||||||||||||||||
9. அலியா பின்ட் துவைனி அல் சயீது | |||||||||||||||||||
19. காலியா பின்ட் சலிம் அல் புசைதி | |||||||||||||||||||
2. தாரிக் பின் தைமூர் | |||||||||||||||||||
5. மேடம் கமீல் இல்கிராய் | |||||||||||||||||||
1. ஐத்தாம் பின் தாரிக் அல் சயீது[1] | |||||||||||||||||||
12. அகுமது அல்-புசைதி | |||||||||||||||||||
6. அமுது பின் அகுமது அல்-புசைதி | |||||||||||||||||||
3. சவானா பின்ட் அமுது அல்-புசைதியா | |||||||||||||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Royal Ark
- ↑ Royal Ark
- ↑ Rulers
- ↑ "Oman's new ruler Haitham bin Tariq takes oath: newspapers" (in en). Reuters. 11 January 2020. https://www.reuters.com/article/us-oman-sultan-successor-media/omans-new-ruler-haitham-bin-tariq-takes-oath-newspapers-idUSKCN1ZA078. பார்த்த நாள்: 11 January 2020.
- ↑ 5.0 5.1 "Cabinet of Ministers". Oman News Agency. Archived from the original on 31 March 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
- ↑ Appointing a Minister of Heritage and Culture, Royal Decree No11/2002, issued on 14 February 2002, published in issue 713 of the Official Gazette
- ↑ "Haitham bin Tariq appointed new ruler of Oman". Arab News. 11 January 2020.
- ↑ "New Oman ruler chosen by agreement, or secret letter" (in en). France 24. 11 January 2020. https://www.france24.com/en/20200111-new-oman-ruler-chosen-by-agreement-or-secret-letter. பார்த்த நாள்: 11 January 2020.
- ↑ Oman, Ministry of Legal Affairs (1986). Royal Decree No. 2/86. Official Gazette.
- ↑ Oman, Ministry of Legal Affairs (1994). Royal Decree No. 110/94. Official Gazette.
- ↑ "Haitham bin Tariq appointed new ruler of Oman". Arab News (in ஆங்கிலம்). 11 January 2020. பார்க்கப்பட்ட நாள் 11 January 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The New Sultan of Oman: Haitham Bin Tariq Al Said". gulfnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 January 2020.
- ↑ "Sultan Haitham Bin Tariq Al Said succeeds Sultan Qaboos of Oman" (in en). gulfnews.com. https://gulfnews.com/world/gulf/sultan-haitham-bin-tariq-al-said-succeeds-sultan-qaboos-of-oman-1.1578723371083. பார்த்த நாள்: 11 January 2020.
- ↑ "Oman names culture minister as successor to Sultan Qaboos". AP NEWS. 11 January 2020. பார்க்கப்பட்ட நாள் 11 January 2020.