உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதரோ ஆல்கைலேற்றநீக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐதரோ ஆல்கைலேற்றநீக்கம் (Hydrodealkylation) என்பது ஓர் அரோமாட்டிக் ஐதரோ கார்பனிலிருந்து ஐதரசன் முன்னிலையில் ஆல்க்கைல் குழுக்களை நீக்கும் வினையைக் குறிக்கும். பெரும்பாலும் தொலுயீன் போன்ற அரோமாட்டிக் ஐதரோகார்பன்கள் ஐதரசன் முன்னிலையில் இவ்வினையில் ஈடுபட்டு வேதி வினைக்குழுக்கள் ஏதுமில்லாத எளிய ஐதரோகார்பன்கள் உருவாகின்றன. 1,2,4-டிரைமெத்தில்பென்சீனிலிருந்து சைலீன் உருவாகும் வினையை இதற்கு உதாரணமாகக் கூறலாம் [1]. வழக்கமாக இச்செயல்முறை உயர்வெப்பநிலை மற்றும் உயர் அழுத்தத்தில் அல்லது ஒரு வினையூக்கியின் முன்னிலையில் நிகழ்கிறது. இவை முதன்மையாக குரோமியம் அல்லது மாலிப்டினம் போன்ற இடைநிலை உலோகங்களாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரோ_ஆல்கைலேற்றநீக்கம்&oldid=2940511" இலிருந்து மீள்விக்கப்பட்டது