ஐதரோசிங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐதரோசிங்கைட்டு
Hydrozincite
Hydrozincite-Smithsonite-210865.jpg
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுZn5(CO3)2(OH)6
இனங்காணல்
நிறம்வெண்மை மற்றும் சாம்பல், வெளிர் இளஞ்சிவப்பு சாயம், அல்லது வெளிர் மஞ்சள் அல்லது பழுப்பு; கடத்தப்பட்ட ஒளியில் நிறமற்றது.
படிக இயல்புமரச்சிரால் அல்லது கூர்மையான படிகங்கள், இழைமங்களாக, கசிந்து விழுந்த துளிகளாக, சிறுநீரக வடிவ சுண்ணாம்புப் பாறை படிவுகள்; மண்ணாக, வெளிறியதாக பெருத்ததாக
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
இரட்டைப் படிகமுறல்இரட்டைப்படிகமுறல் {100} இல்
பிளப்புதெளிவாக {100} இல்
முறிவுசீரற்று/சமமின்றி
விகுவுத் தன்மைஎளிதில் நொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2 - 2 12
மிளிர்வுமென்மையாக, முத்தாக, மங்கலாக, மண்ணாக
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் ஒளிகசியும்
ஒப்படர்த்தி3.5 - 4
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.630 nβ = 1.642 nγ = 1.750
இரட்டை ஒளிவிலகல்δ = 0.120
2V கோணம்அளவிடப்பட்டது: 40° , கணக்கிடப்பட்டது: 40°
நிறப்பிரிகைவலியது
புறவூதா ஒளிர்தல்புற ஊதா ஒளியில் இளஞ்சிவப்பு, வெளிர் நீலம் ஒளிர்வு.
கரைதிறன்அமிலங்களில் கரையும்.
மேற்கோள்கள்[1][2][3]

ஐதரோசிங்கைட்டு (Hydrozincite) என்பது Zn5(CO3)2(OH)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். துத்தநாகப் பூ அல்லது மாரியோனைட்டு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. வெண்மை நிற கார்பனேட்டு கனிமவகையான இக்கனிமம் படிகவடிவத்திற்கு மாறாக பெரும்படிவுகளாகக் காணப்படுகிறது.

துத்தநாக தாதுக்களின் ஆக்சிசனேற்றத் தயாரிப்பாக சுரங்கங்களின் மேலோடுகளில் இது இயற்கையில் தோன்றுகிறது. பெரும்பாலும் சிமித்சோனைட்டு, எமிமார்பைட்டு, வில்லெமைட்டு, செருசைட்டு, அரிச்சால்சைட், கால்சைட்டு, லிமோனைட்டு போன்ற கனிமங்களுடன் ஐதரோசிங்கைட்டு கலந்து காணப்படுகிறது[1].

ஐதரோசிங்கைட்டு முதன்முதலாக 1853 ஆம் ஆண்டில் ஆத்திரியா நாட்டின் காரிந்தியா மாநிலத்தில் அமைந்துள்ள பேடு பிளீபெர்க் என்ற வர்த்தக நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. இதன் வேதியியல் உள்ளடக்கத்தை மையமாகக் கொண்டு இதற்கு ஐதரோசிங்கைட்டு எனப் பெயரிடப்பட்டது[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரோசிங்கைட்டு&oldid=2573486" இருந்து மீள்விக்கப்பட்டது