ஐதராபாத் கோட்டம்
ஐதராபாத் கோட்டம்
حیدر آباد ڈویژن حيدرآباد ڊويزن | |
|---|---|
கோட்டம் | |
பாகிஸ்தானின் சிந்து மாகாணததில் ஐதராபாத் கோட்டத்தின் வரைபடம் | |
| நாடு | |
| மாகாணம் | சிந்து மாகாணம் |
| தலைமையிடம் | ஐதராபாத் |
| நிறுவிய ஆண்டு | 1 சூலை 1970 |
| மாவட்டங்கள் | |
| அரசு | |
| • வகை | கோட்டம் (கோட்ட நிர்வாகி-ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • கோட்டம் | 64,963 km2 (25,082 sq mi) |
| ஏற்றம் | 13 m (43 ft) |
| மக்கள்தொகை (2023) | |
| • கோட்டம் | 1,16,57,249 |
| • அடர்த்தி | 180/km2 (460/sq mi) |
| • நகர்ப்புறம் | 43,46,036 (37.28%) |
| • நாட்டுப்புறம் | 73,13,210 |
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
ஐதரபாத் கோட்டம் (Hyderabad Division), பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் 6 கோட்டங்களில் ஒன்றாகும். ஐதராபாத் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஐதராபாத் நகரம் ஆகும். இக்கோட்டத்தில் 9 மாவட்டங்களும், 37 வருவாய் வட்டங்களும் உள்ளது. 1 சூலை 1970 அன்று நிறுவப்பட்ட இக்கோட்டத்தில் தட்டா மாவட்டம், படின் மாவட்டம், தாது மாவட்டம், ஐதராபாத் மாவட்டம், ஜாம்சோரோ மாவட்டம், மட்டியாரி மாவட்டம், சுஜாவால் மாவட்டம், தண்டோ அல்லாயார் மாவட்டம் மற்றும் தண்டோ முகமது கான் மாவட்டங்கள் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஐத்ராபாத் கோட்டத்தின் மக்கள் தொகை 11,657,249 (10.16 (மில்லியன்) ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 60,30,741 மற்றும் பெண்கள் 5,625,967 உள்ளனர்.
மொழிகள்
[தொகு]இக்கோட்டத்தில் சிந்தி மொழியை 83.36% மக்களும், உருது மொழியை 11.06% மக்களும், பஞ்சாபி மொழியை 1.71 மக்களும்,பஷ்தூ மொழியை 1.07% மக்களும், சராய்கி மொழியை 0.41% மக்களும், பலூச்சி மொழியை 0.67% மக்களும், இந்த்கோ மொழியை 0.70% மக்களும் மற்றும் பிற மொழிகளை 0.98% மக்களும் பேசுகின்றனர்.[1]
சமயங்கள்
[தொகு]இக்கோட்டத்தில் இசுலாம் சமயத்தை 90.67% மக்களும், இந்து சம்யத்தை 8.32% மக்களும், கிறித்துவம் உள்ளிட்ட பிற சமயங்களை 1.01% மக்களும் பின்பற்றுகின்றனர்.
மாவட்டங்களின் விவரம்
[தொகு]| # | மாவட்டங்கள் | தலைமையிடம் | பரப்பளவு
(km²)[2] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள் தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[3] |
|---|---|---|---|---|---|---|
| 1 | ஜாம்சோரோ மாவட்டம் | ஜாம்சோரா | 11,204 | 1,117,308 | 99.7 | 49.63% |
| 2 | ஐதராபாத் மாவட்டம் | ஐதராபாத் | 993 | 2,432,540 | 2,448.7 | 67.21% |
| 3 | படின் மாவட்டம் | படின் | 6,858 | 1,947,081 | 284.6 | 36.65% |
| 4 | தாது மாவட்டம் | தாது | 7,866 | 1,742,320 | 221.8 | 47.13% |
| 5 | மட்டியாரி மாவட்டம் | மட்டியாரி | 1,417 | 849,383 | 599.0 | 45.88% |
| 6 | சுஜாவால் மாவட்டம் | சுஜாவால் | 8,785 | 839,292 | 95.5 | 27.02% |
| 7 | தண்டோ அல்லாயார் மாவட்டம் | தண்டோ அல்லாயார் | 1,554 | 922,012 | 592.8 | 39.80% |
| 8 | தண்டோ முகமது கான் மாவட்டம் | தண்டோ முகமது கான் | 1,423 | 726,119 | 509.1 | 34.02% |
| 9 | தட்டா மாவட்டம் | தட்டா | 8,570 | 1,083,191 | 126.8 | 26.88% |
வருவாய் வட்டங்களின் பட்டியல்
[தொகு]| # | வருவாய் வட்டம் | பரப்பளவு
(km²)[2] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[3] |
மாவட்டம் |
|---|---|---|---|---|---|---|
| 1 | படின் வட்டம் | 1,816 | 490,386 | 270.04 | படின் மாவட்டம் | |
| 2 | கோஸ்கி வட்டம் | |||||
| 3 | மால்தி வட்டம் | 1,143 | 471,100 | 412.16 | ||
| 4 | சாகீத் பாசில் ரகு வட்டம் | 1,642 | 374,854 | 228.29 | ||
| 5 | தல்ஹார் வட்டம் | 569 | 184,206 | 323.74 | ||
| 6 | தண்டோ பாகோ வட்டம் | 1,688 | 426,535 | 252.69 | ||
| 7 | ஜாதி வட்டம் | 3,489 | 214,710 | 61.54 | சுஜாவால் மாவட்டம் | |
| 8 | காரோ சான் வட்டம் | 778 | 11,403 | 14.66 | ||
| 9 | மிர்பூர் பாத்ரோ வட்டம் | 698 | 231,735 | 332 | ||
| 10 | ஷா பந்தார் வட்டம் | 3,074 | 168,911 | 54.95 | ||
| 11 | சுஜாவால் வட்டம் | 746 | 212,533 | 284.9 | ||
| 12 | கோராபாரி வட்டம் | 1,018 | 198,920 | 195.4 | தட்டா மாவட்டம் | |
| 13 | கேத்தி பந்தர் வட்டம் | 771 | 63,217 | 81.99 | ||
| 14 | மிர்பூர் சக்ரோ வட்டம் | 2,958 | 376,078 | 127.14 | ||
| 15 | தட்டா வட்டம் | 3,823 | 444,976 | 116.39 | ||
| 16 | தாது வட்டம் | 846 | 508,607 | 601.19 | தாது மாவட்டம் | |
| 17 | ஜோகி வடடம் | 3,509 | 333,179 | 94.95 | ||
| 18 | கைர்பூர் நாதன் ஷா வட்டம் | 2,583 | 379,975 | 147.11 | ||
| 19 | மெஹர் வட்டம் | 928 | 520,559 | 560.95 | ||
| 20 | ஐதராபாத் நகர வட்டம் | 43 | 778,132 | 18,096.09 | ஐதராபாத் மாவட்டம் | |
| 21 | ஐதராபாத் ஊரக வட்டம் | 711 | 511,265 | 719.08 | ||
| 22 | லத்திபாபாத் வட்டம் | 204 | 800,983 | 3,926.39 | ||
| 23 | காசிமாபாத் வட்டம் | 35 | 342,160 | 9,776.00 | ||
| 24 | கோத்திரி வட்டம் | 1,051 | 472,003 | 244,105 | ஜாம்சோரோ மாவட்டம் | |
| 25 | சேவான் வட்டம் | 2,160 | 322,011 | 165,837 | ||
| 26 | மஞ்ச்ஹந்த் வட்டம் | 2,303 | 161,794 | 84,442 | ||
| 27 | தானா புல்லா கான் வட்டம் | 5,690 | 161,500 | 83,652 | ||
| 28 | ஹலா வட்டம் | 488 | 286,155 | 586.38 | மட்டியாரி மாவட்டம் | |
| 29 | மத்தியாரி வட்டம் | 568 | 377,945 | 665.4 | ||
| 30 | சாகீதாபாத் வட்டம் | 361 | 185,283 | 513.25 | ||
| 31 | சாம்பெர் வட்டம் | 483 | 233,424 | 483.28 | தண்டோ அல்லாயார் மாவட்டம் | |
| 32 | ஜாந்தோ மாரி வட்டம் | 626 | 266,665 | 425.98 | ||
| 33 | தண்டோ அல்லாயார் வட்டம் | 445 | 421,923 | 948.14 | ||
| 34 | நசர்புர் வட்டம் | |||||
| 35 | பூல்ரி ஷா கரீம் வட்டம் | 770 | 247,027 | 320.81 | தண்டோ முகமது கான் மாவட்டம் | |
| 36 | தண்டோ குலாம் ஐதர் வட்டம் | 390 | 206,665 | 529.91 | ||
| 37 | தண்டோ முகமது கான் வட்டம் | 263 | 272,427 | 1,035.84 |
தொகுதிகள்
[தொகு]ஐதராபாத் கோட்டத்தில் சிந்து மாகாணச் சட்டமன்றத்திற்கு 29 தொகுதிகளும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 13 தொகுதிகளும் கொண்டுள்ளது.
| சிந்து மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள் (PS) | பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் (NA) | மாவட்டம் |
|---|---|---|
| PS--56 மட்டியாரி-I | NA-216 மட்டியாரி | மட்டியாரி மாவட்டம் |
| PS-57 மட்டியாரி-II | ||
| PS-58 தண்டோ அல்லாயார்-I | NA-217 தண்டோ அல்லாயார் | தண்டோ அல்லாயார் மாவட்டம் |
| PS-59 தண்டோ அல்லாயார்-II | ||
| PS-60 ஐதராபாத்-I | NA-218 ஐதராபாத்-I | ஐதராபாத் மாவட்டம் |
| PS-61 ஐதராபாத்-II | ||
| PS-62 ஐதராபாத்-III | NA-219 ஐதராபாத்-II | |
| PS-63 ஐதராபாத்-IV | ||
| PS-64 ஐதராபாத்-V | NA-220 ஐதராபாத்-III | |
| PS-65 ஐதராபாத்-VI | ||
| PS-66 தண்டோ முகமது கான்-I | NA-221 தண்டோ முகமது கான்1 | தண்டோ முகமது கான் மாவட்டம் |
| PS-67 தண்டோ முகமது கான்-II | ||
| PS-77 ஜாம்சோரோ-I | NA-226 ஜாம்சோரோ | ஜாம்சோரோ மாவட்டம் |
| PS-78 ஜாம்சோரோ-II | ||
| PS-79 ஜாம்சோரோ-III | ||
| PS-80 தாது-I | NA-227 தாது-I | தாது மாவட்டம் |
| PS-81 தாது-II | ||
| PS-82 தாது-III | NA-228 தாது-II | |
| PS-83 தாது-IV | ||
| PS-68 படின்-I | NA-222 படின்-I | படின் மாவட்டம் |
| PS-69 படின்-II | ||
| PS-70 படின்-III | ||
| NA-223 படின்-II | ||
| PS-71 படின்-IV | ||
| PS-72 படின்-V | ||
| PS-73 சுஜாவால்-I | NA-224 சுஜாவால் | சுஜாவால் மாவட்டம் |
| PS-74 சுஜாவால்-II | ||
| PS-75 தட்டா-I | NA-225 தட்டா | தட்டா மாவட்டம் |
| PS-76 தட்டா-II |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TABLE 11 – POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/ URBAN" (PDF). Pakistan Bureau of Statistics. Retrieved 20 July 2024.
- ↑ 2.0 2.1 "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, SINDH" (PDF).
- ↑ 3.0 3.1 "TABLE 12 : LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, SINDH" (PDF).