ஐதராபாத் உயர்வு விரைவுப்பாதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தகவல்
வகைஉயர்ந்த விரைவுவழி
தடவழிகள்2
தடவழி பெயர்கள்பி.வி.நரசிம்மராவ் உயர்வு விரைவுப்பாதை, ராசீவ் உயர்வு விரைவுப்பாதை
இயக்கம்
நுட்பம்
தொலைவு11.6 கிலோமீட்டர் (7 மை) ( பி.வி.நரசிம்மராவ் )
20 கிலோமீட்டர் (12 மை) ( ராசீவ்)
வழிப்பாதை4
திசைஇருவழிப் போக்குவரத்து
அக்டோபர் 2009 [PVNR]

ஐதராபாத் உயர்வு விரைவுப்பாதைகள்(Hyderabad Elevated Expressway) ஆந்திர மாநிலத் தலைநகர் ஐதராபாத் நகரில் கட்டப்பட்டுவரும் இரண்டு மேலே செல்லும் விரைவுப்பாதைகளைக் குறிக்கும்.

திட்டப்பணி விவரங்கள்[தொகு]

பி.வி. நரசிம்மராவ் உயர்வு விரைவுப்பாதை: மேதிப்பட்டணம் — ஆராம்கர் சந்திப்பு [11.6 கிமீ][தொகு]

இது ஐதராபாத் நகரத்தை பன்னாட்டு விமானநிலையத்தை இணைக்கும் 11.6கிமீ நீளமுள்ள உயர்ந்த நிலையில் உள்ள விரைவுப்பாதை யாகும்.இதனை இரண்டு கட்டங்களாக ஐதராபாத் ஊரக மேம்பாட்டு ஆணையம் கட்டமைத்து வருகிறது.

கட்டம் 1:

மேதிப்பட்டணத்திலிருந்து ஐதர்குடா வரை 5.1கிமீ தொலைவிற்கு கட்டப்படும்.வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்னர் இறங்கும்.

கட்டம் 2:

ஐதர்குடாவிலிருந்து ஆராம்கர் சந்திப்பு வரை 6.5கிமீ தொலைவிற்கு கட்டப்படும்.

2007ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பணித்திட்டம் பல இயற்கை மற்றும் நிர்வாக தடங்கல்களால் திட்டமிட்ட நாட்களில் முடிக்கப்பட வியவிலை. 2009 அக்டோபர் 2 அன்று மறைந்த முதல்வர் வை.எஸ்.ஆரால் திறக்கப்பட விருந்தது. அவரது மறைவிற்குப் பிறகு, முதல்வர் கே ரோசையாவினால் அக்டோபர் 19,2009 அன்று பொதுமக்கள் சேவைக்கு திறக்கப்பட்டது. [1] இதன்பின்னர் 30 கிமீ தொலைவில் சம்சதாபாத்தில் உள்ள பன்னாட்டு விமானநிலையத்தை அடைய 45 நிமிடங்களே எடுக்கின்றது.

இந்தியாவின் மிக நீளமான 17.2 மீட்டர் அகலமுள்ள இந்த நான்குவழிப்பாதையைக் கட்டுவதற்கு இந்திய ரூபாய் 6 மில்லியன் செலவாகியுள்ளது.


ராசீவ் உயர்வு விரைவுப்பாதை: பரேட் மைதானம் — சாமீர்பேட்டை [20 கிமீ][தொகு]

இது அணிவகுப்பு மைதானத்திலிருந்து (பரேட் கிரௌண்ட்ஸ்)சாமீர்பேட்டை வரை அமைக்கப்படும் 20 கிமீ நீளமுள்ள உயர்ந்த நிலையில் அமைந்த விரைவுப்பாதை யாகும்.[2]

திட்டப்பணி நிகழ்நிலை

செப் 2008 அன்று இத்திட்டப்பணி ஆந்திர அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது கட்டு,இயக்கு,மாற்று அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]