ஐதராபாத்து புத்தர் சிலை
| ஐதராபாத்து புத்தர் சிலை Buddha Statue of Hyderabad | |
|---|---|
அபய முத்திரையில் நிற்கும் புத்தர் | |
![]() | |
| அமைவிடம் | உசேன் சாகர், ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
| ஆள்கூற்றுகள் | 17°24′56″N 78°28′30″E / 17.41556°N 78.47500°E |
| உயரம் | 58 அடிகள் (18 மீட்டர்கள்) |
| Dedicated | 1 திசம்பர் 1992 |
| நிறுவப்பட்டது | என். டி. ராமராவ் |
| சிற்பி | எசு.எம். கணபதி |
| நிர்வகிக்கும் அமைப்பு | புத்த பூர்ணிமா திட்ட அமைப்பு, ஐதராபாத்து பெருநகர மேம்பாட்டு ஆணையம் |
உசேன் சாகர் ஏரியில் அமைவிடம் | |
ஐதராபாத்து புத்தர் சிலை (Buddha Statue of Hyderabad) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஐதராபாத்து நகரத்தில் அமைந்துள்ள ஓர் ஒற்றைக்கல் சிலையாகும். உசேன் சாகர் ஏரியின் நடுவில் உள்ள சிப்ரால்டர் பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான கௌதம புத்தர் ஒற்றைக்கல் சிலையாகவும் கருதப்படுகிறது. 17°15′29.64″வடக்கு 78°40′47.51″கிழக்கு என்ற புவியியல் ஆள்கூறுகளில் இச்சிலை அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]1983 மற்றும் 1989 ஆமாண்டுகளுக்கு இடையில், என்.டி.ராமராவ் ஆந்திராவின் முதலமைச்சராகப் பணியாற்றினார். அவரது பதவிக் காலத்தில், அந்தப் பிராந்தியத்தின் அரசியல் மற்றும் மத வரலாற்றைச் சேர்ந்த பலரின் சிலைகளை நிறுவ பெரும் தொகையைச் செலவிட்டார். நியூயார்க்கிற்கு சென்றபோது, அவர் சுதந்திர தேவி சிலையைப் பார்த்தார். அதை மீட்டெடுக்கும் முயற்சிகளால் ஈர்க்கப்பட்டார். அந்த அருமையான இடத்தைப் போன்ற ஒன்றைப் பார்க்க நான் விரும்பினேன்... அதுதான் சமூகத்திற்கு எனது பங்களிப்பாக இருந்திருக்கும்" என்று இச்சிலை நிறுவுதல் குறித்து அவர் கூறினார்.[1]
"மக்களுக்கு முழு உண்மையையும் சொன்ன மனிதாபிமானி என்பதால் இராமராவ் கௌதம புத்தரை சித்தரிக்கத் தேர்ந்தெடுத்தார். அது தங்கள் பெருமை என்றும் கருதினார்.[1] நீண்ட தேடலுக்குப் பிறகு, ஐதராபாத்திற்கு வெளியே 46 கி.மீ தொலைவில் உள்ள ஒரு மலைப்பகுதியில், புவனகிரி (யாதாத்ரி புவனகிரி மாவட்டம்) ராய்கிரி அருகே ஒரு திடமான வெள்ளை கருங்கற் பாறையைக் கண்டுபிடித்தார். 1985 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இராமராவ் கட்டமைப்புப் பணிகளைத் தொடங்கி வைத்தார். ஓர் ஆண்டுக்கும் மேலாக, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கோயில் கட்டிடக் கலைஞரும், கட்டுமானப் பணியாளருமான எசு.எம்.கணபதி சிதபதிக்கு சிலையை உருவாக்க உதவினார்கள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், புத்தர் சிலை 58 அடி (18 மீ) உயரமும் 350 டன் எடையும் கொண்டதாக சிலை உலகின் மிக உயரமான ஒற்றைக்கல் புத்தர் சிலையாக உருவானது.[2] சிலையை நிறுவுவதற்கு உதவுவதற்காக, உசேன் சாகரின் நடுவில், தற்போது "சிப்ரால்டர் பாறை" என்று அழைக்கப்படும் 15 அடி (4.6 மீ) அளவிலான ஒரு கருங்கற்பாறை தளம் கட்டப்பட்டது.[3] நகரத்தின் சாலைகளும் இதற்காக அகலப்படுத்தப்பட்டன.[1]
ஐதராபாத்து புத்தர் சிலை லும்பினி பூங்காவில் உசேன் சாகர் தீவில் அமைந்துள்ளது. படகு மூலம் 15 நிமிடங்களில் இந்த இடத்தை அடையலாம்.[4] லக்டி-கா-புல், கைரதாபாத் மற்றும் அசெம்பிளி ஐதராபாத்து மெட்ரோ இரயில் நிலையங்கள் அருகில் உள்ளன.
விபத்து
[தொகு]1989 ஆம் ஆண்டு என்.டி.ராமராவ் தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு, சிலை அமைக்கத் தயாராக இருந்தது. உள்ளூர் நிறுவனமான ஏபிசி லிமிடெட்டு நிறுவனத்திற்கு சிலையை கருங்கற் தளத்திற்கு மாற்றும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஒரு இழுவை வாகனத்தைப் பயன்படுத்தி, சிலை உசேன் சாகர் கரைக்கு கொண்டு வரப்பட்டது. 1990 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் நாளன்று, நிறுவன ஊழியர்கள் சிலையை ஒரு படகு மீது மாற்றினர். 300 அடிகள் (91 மீ) மட்டுமே பயணித்த பிறகு, சிலை கவிழ்ந்து ஏரியில் விழுந்தது.[1][5] இந்த விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்.[6]
இரண்டு ஆண்டு மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, சிலை ஏரியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 1 அன்று, சிலை மேடையில் வெற்றிகரமாக நிறுவப்பட்டது. 2006 ஆம் ஆண்டில், தலாய் லாமா ஒரு சடங்கு செய்த பிறகு சிலையை மக்களுக்கு அர்ப்பணித்தார்.[7]
படக்காட்சியகம்
[தொகு]- அபய முத்திரையில் நிற்கும் புத்தர்
- நெருக்கக் காட்சி
- புத்தர் சிலையில் சூரியன் மறைவு , உசேன் சாகர்
- மாலை நேரக் காட்சி
- நிலவொளியில் புத்தர் சிலை
- புத்தர் சிலையின் அடித்தளத்தில் ஒரு சிற்பம்.
- உசேன் சாகரில் புத்தர் சிலை
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 Coll, Steve (9 April 1990). "Buddha of the Lake Bottom". The Washington Post இம் மூலத்தில் இருந்து 24 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924183547/http://www.highbeam.com/doc/1P2-1120243.html. பார்த்த நாள்: 9 September 2012.
- ↑ "Up from the bottom". The Boston Globe (Boston, MA). 19 April 1992 இம் மூலத்தில் இருந்து 24 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924201708/http://www.highbeam.com/doc/1P2-8738705.html. பார்த்த நாள்: 9 September 2012.
- ↑ Raje, Abhishek (23 January 2012). "Ram Charan Teja shoots at iconic Buddha statue". The Times of India. Times News Network (Hyderabad) இம் மூலத்தில் இருந்து 3 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103125928/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-23/news-interviews/30659786_1_buddha-statue-ram-charan-teja-iconic. பார்த்த நாள்: 9 September 2012.
- ↑ Goldberg, Kory., Décary, Michelle.(2012), "The South: Hydrabad", Along the Path: The Meditator's Companion to the Buddha's Land, Pariyatti Publisher, p.372. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1938754034, 9781938754036
- ↑ "10 drown as the statue of Buddha takes a dip". New Straits Times (New Delhi). 11 March 1990. https://news.google.com/newspapers?id=5mxPAAAAIBAJ&sjid=gpADAAAAIBAJ&dq=buddha%20statue%20hyderabad&pg=6894%2C2782063. பார்த்த நாள்: 9 September 2012.
- ↑ "Buddha Statue Sinks Barge, Drowning 10". St. Louis Post-Dispatch. Associated Press (New Delhi): pp. 13A. 11 March 1990.
- ↑ "Buddha statue consecrated". தி இந்து (Hyderabad). 3 January 2006 இம் மூலத்தில் இருந்து 18 October 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071018170440/http://hindu.com/2006/01/03/stories/2006010317670300.htm. பார்த்த நாள்: 9 September 2012.
