உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதராக்சிபியூட்ரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
α-hydroxybutyric acid structure
α-ஐதராக்சிபியூட்ரிக் அமிலத்தின் கரியணுத் தொடர் வாய்ப்பாடு
β-hydroxybutyric acid structure
β-ஐதராக்சிபியூட்ரிக் அமிலத்தின் கரியணுத் தொடர் வாய்ப்பாடு
γ-hydroxybutyric acid structure
γ-ஐதராக்சிபியூட்ரிக் அமிலத்தின் கரியணுத் தொடர் வாய்ப்பாடு

ஐதராக்சிபியூட்ரிக் அமிலம் (Hydroxybutyric acid) என்பது நான்கு கார்பன் அணுக்களைக் கொண்டதும், ஐதராக்சில் மற்றும் கார்பாக்சிலிக் அமில வேதி வினைக் குழுக்கள் இரண்டையும் கொண்டுள்ளதும் ஆன ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மமானது பியூட்ரிக் அமிலத்தின் வழிப்பொருள்களாக பார்க்கப்படலாம். ஐதராக்சிபியூட்ரிக் அமிலத்தின் கார்பாக்சிலேட்டு எதிரயனி மற்றும் எசுத்தர்கள் ஐதராக்சிபியூட்ரேட்டுகள் எனப்படுகின்றன.

இச்சேர்மத்திற்கு மூன்று மாற்றியங்கள் உள்ளன. அவை இரண்டு வேதி வினைக் குழுக்களுக்கு இடையிலான தூரத்தால் வேறுபடுகின்றன:

  • ஆல்பா -ஐதராக்சிபியூட்ரிக் அமிலம் (2-ஐதராக்சிபியூட்ரிக் அமிலம்)
  • பீட்டா -ஐதராக்சிபியூட்ரிக் அமிலம் (3-ஐதராக்சிபியூட்ரிக் அமிலம்)
  • காமா -ஐதராக்சிபியூட்ரிக் அமிலம் (4-ஐதராக்சிபியூட்ரிக் அமிலம், ஜி.எச்.பி )
Skeletal formula of butyric acid with the alpha, beta, and gamma carbons marked
ஆல்பா, பீட்டா மற்றும் காமா கார்பன்களுடன் குறிக்கப்பட்ட பியூட்ரிக் அமிலத்தின் கரியணுத்தொடர் வாய்ப்பாடு

மேலும் காண்க

[தொகு]
  • பீட்டா -ஐதராக்சி-பீட்டா-மெதில்பியூட்ரிக் அமிலம்
  • சோடியம் ஆக்ஸிபேட்

வெளி இணைப்புகள்

[தொகு]