ஐதரசன் நிறமாலை வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐதரசன் அணுவின் நிறமாலை வரிசை

இலத்திரன் ஏதாவது ஒரு உயரிய ஆற்றல் மட்டத்திலிருந்து சிறிய ஆற்றல் மட்டத்திற்கு குதிக்கும் போது அவ்விரு ஆற்றல் மட்டங்களின் ஆற்றல் வித்தியாசம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட அலையாக வெளிப்படும். இது அனைத்து அணுக்களுக்களும் பொருந்தும். இதை முதன் முதலில் நீல் போர் அணுக்களின் அமைப்பு பற்றிய அவரின் கோட்பாடுகளில் கூறியிருந்தார். ஐதரசன் (hydrogen) அணுவின் ஆரத்தையும் கணக்கிட்டார். மேலும் ஐதரசன் அணுவின் ஆற்றலைக் கணக்கிடுவதற்கான ஒரு சமன்பாட்டையும் கொடுத்தார்.


இந்த ஐதரசன் அணுவின் நிறமாலை வரிசை (Hydrogen spectral series) பல வகை படும். அவற்றுள் ஐந்து பின்வருமாறு:

  • லைமன் வரிசை -ஏதாவது ஒருஆற்றல் மட்டத்திலிருந்து முதல் ஆற்றல் மட்டத்திற்கு குதித்தல்
  • பாமர் வரிசை -ஏதாவது ஒரு ஆற்றல் மட்டத்திலிருந்து இரண்டாம் ஆற்றல் மட்டத்திற்கு குதித்தல்
  • பஸ்டன் வரிசை -ஏதாவது ஒரு ஆற்றல் மட்டத்திலிருந்து மூன்றாம் ஆற்றல் மட்டத்திற்கு குதித்தல்
  • ப்ரகட் வரிசை -ஏதாவது ஒரு ஆற்றல் மட்டத்திலிருந்து நான்காம் ஆற்றல் மட்டத்திற்கு குதித்தல்
  • ப-புந்து (fபண்ட்) வரிசை -ஏதாவது ஒரு ஆற்றல் மட்டத்திலிருந்து ஐந்தாம் ஆற்றல் மட்டத்திற்கு குதித்தல்


அனைத்து வரிசைகளும் ரிட்பெர்க் சமன்பாட்டை (Rydberg formula) பின்பற்றும்.

ரீட்பெர்க் சமன்பாடு[தொகு]

v = R * [ (1/n12) -(1/n22) ]

_

v = அலையெண்:::::
R =ர்ய்ட்பெர்க் மாறிலி( 1.094*107/metre):::::
n=1 எடுத்துக்கொண்ட சிறிய ஆற்றல் மட்ட எண்:::::
n=2 எடுத்துக்கொண்ட பெரிய ஆற்றல் மட்ட எண்::::

பின் குறிப்பு: அலையெண் = அலைநீளம்-1::::::: ஒளியின் வேகம் =அலைநீளம் * அதிர்வெண்::::::: ஒளியின் வேகம் = 3*108ms-1::::::::::

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசன்_நிறமாலை_வரிசை&oldid=2586419" இருந்து மீள்விக்கப்பட்டது