ஐதரசன் எதிர்மின் அயனி
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
ஐதரைடு[1] | |
இனங்காட்டிகள் | |
12184-88-2 | |
ChEBI | CHEBI:29239 |
ChemSpider | 145831 ![]() |
Gmelin Reference
|
14911 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166653 |
| |
பண்புகள் | |
H− | |
வாய்ப்பாட்டு எடை | 1.01 g·mol−1 |
வெப்பவேதியியல் | |
நியம மோலார் எந்திரோப்பி S |
108.96 யூ கெ−1 மோல்−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐதரசன் எதிர்மின் அயனி (Hydrogen anion) என்பது H− என்ற குறியீட்டைக் கொண்ட ஓர் எதிர்மின் அயனியாகும். ஐதரசன் அணுவின் எதிர்மின் சுமை கொண்ட அயனியான இது விண்மீன்களின் சுற்றுச்சூழலில் பகுதிப்பொருளாக உள்ளது. வேதியியலில் ஐதரசன் எதிர்மின் அயனியை ஐதரைடு என்பர். ஒரு புரோட்டானைக் கொண்டுள்ள உட்கருவைச் சுற்றி இரண்டு எலக்ட்ரான்கள் மின்னியக்கு விசையால் பிணைக்கப்பட்டு இந்த அயனி உருவாகியுள்ளது.
தோற்றம்
[தொகு]சூரியனின் ஒளிமண்டலத்தில் ஐதரசன் எதிர்மின் அயனி ஒரு முக்கியமான வேதி இனமாகக் கருதப்படுகிறது. சூரியனின் ஆற்றலை 0.75–4.0 வீச்சு எலக்ட்ரான் வோல்ட்டு அளவிற்கு ஐதரசன் எதிர்மின் அயனி ஈர்த்துக் கொள்கிறது. இந்த அளவை அகச்சிகப்பு ஒளிக்கற்றை முதல் கட்புலனாகும் எல்லைவரையில் இந்த வீச்சை அறியமுடியும். (இராவ்1999, சீனுவாசன் 1999) புவியின் அயனமண்டலத்திலும் (இராவ்1999) ஐதரசன் எதிர்மின் அயனி தோன்றுகிறது. துகள் முடுக்கிகளாலும் இவற்றை உற்பத்தி செய்யமுடியும்.
அன்சு பெத்தி முதன்முதலில் ஐதரசன் எதிர்மின் அயனியின் இருப்பை 1929 ஆம் ஆண்டு கோட்பாடுகளின் படி நிருபித்தார்.(பெத்தி1929). H− தனித்தநிலையில் ஒரு நிலைப்புத் தன்மையற்ற அயனியாகும். ஏனெனில் இதில் கட்டுண்ட கிளர்வுநிலை ஏதுமில்லை என்று இறுதியாக 1977 ஆம் ஆண்டு இல் என்பவர் நிருபித்தார். இவருடைய முடிவுகள் துகள் முடுக்கிகள் மூலமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன (பிரையாண்டு 1977)). வேதியியலில் ஐதரைடு எதிர்மின் அயனி என்பது ஐதரசன் அயனியானது முறையாக ஆக்சிசனேற்ற நிலை −1 .என இருப்பதைக் குறிக்கிறது.
பொதுவாக ஐதரசன் பிற தனிமங்களுடன் சேர்ந்து உருவாகும் சேர்மங்கள் ஐதரைடுகள் எனப்படுகின்றன. இச்சேர்மங்களின் ஆக்சிசனேற்ற நிலை -1 ஆகவே இருக்கின்றது. இதுபோன்ற பெரும்பாலான சேர்மங்களில் ஐதரசனும் அதற்கு வெகு அருகில் உள்ள தனிமமும் சேர்கின்ற பிணைப்புகள் சகபிணைப்புகளாகக் கருதப்படுகின்றன. போரோ ஐதரைடு எதிர்மின் அயனியை (BH−) உதாரணமாகக் கூறலாம்.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hydride - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.