ஐதரசனாக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐதரசன் ஆக்சலேட்டு அயனியின் மாதிரி

ஐதரசனாக்சலேட்டு அல்லது ஐதரசன் ஆக்சலேட்டு (Hydrogenoxalate or hydrogen oxalate) என்பது ஆக்சாலிக் அமிலத்தில் இருந்து வருவிக்கப்படும் ஒரு எதிர்மின் அயனியாகும். இவ்வயனியின் மூலக்கூற்று வாய்ப்பாடு HC2O4− அல்லது HO2C–CO2 ஆகும். ஆக்சாலிக் அமிலம் ஒரு புரோட்டானை இழப்பதால் இவ்வயனி உண்டாகிறது. அல்லது, மாறாக ஆக்சலேட்டு எதிர்மின் அயனி C2O42 ஒரு புரோட்டானை ஏற்பதால் இவ்வயனி உண்டாகிறது.

NaHC2O4, KHC2O4, அல்லது NH3HC2O4 போல இவ்வெதிர்மின் அயனியைப் பெற்றுள்ள எந்தச் சேர்மத்திற்கும் இப்பெயர் சூட்டப்படுகிறது. பண்டைய நூல்களில் ஐதரசனாக்சலேட்டுகள் பைனாக்சலேட்டுகள், அமில ஆக்சலேட்டுகள் மற்றும் ஒரு கார ஆக்சலேடுகள் என்ற பலவிதமான பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  • Roland Tellgren and Ivar Olovsson (1971) The crystal structures of normal and deuterated sodium hydrogen oxalate monohydrate NaHC2O4·H2O and NaDC2O4·D2O. Hydrogen bond studies. XXXXVI. The Journal of chemical physics pp. 234–238.
  • R. G. Delaplane, R. Tellgren and I. Olovsson (1984) Neutron diffraction study of sodium hydrogen oxalate monohydrate, NaHC2O4·H2O, at 120 K. Acta Crystallographica, volume C40, 1800–1803 எஆசு:10.1107/S0108270184009616
  • M. Hamadène, H. Kherfi, A. Guehria-Laidoudi (2006), The polymeric anhydrous rubidium hydrogen oxalate. Acta Crystallographica volume A62, p. s280
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசனாக்சலேட்டு&oldid=2222271" இருந்து மீள்விக்கப்பட்டது