ஐடா பாகுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாயேசர் 1 எடுத்த அமால்தியா படம். ஐடா பாகுலா ஒரு பிரகாசமான புள்ளியாக மேலே தெரிகிறது

ஐடா பாகுலா (Ida Facula) என்பது வியாழன் கோளின் மிகச்சிறிய நிலவுகளில் ஒன்றான அமால்தியாவில் காணப்படும் பிரகாசமான மலையாகும். 15 கிலோமீட்டர் நீளம் கொண்ட மலையாக ஐடா பாகுலா அறியப்படுகிறது. இதனை அடுத்துள்ள மலையான லைக்டாசு பாகுலா மலையைக் காட்டிலும் இது சிறியதாகும்[1]. 1979 ஆம் ஆண்டு வாயேசர் 1 ஐடா பாகுலாவை கண்டறிந்த்து. கிரேக்கத் தீவுகளில் பெரியதும் மிகுந்த மக்கள்தொகை கொண்டதுமான தீவான கிரீட் தீவில் வானம் மற்றும் இடியின் கடவுளாகக் கருதப்படும் சியுசு கடவுள் குழந்தையாக விளையாடிய புனித மலை ஐடாவின் நினைவாக அமால்தியாவில் காணப்பட்ட மலைக்கு ஐடா பாகுலா என்று பெயரிடப்பட்டது[2]. முதலில் இம்மலையை எளிமையாக ஐடா என்றே அழைத்தார்கள்[1][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Thomas, P. C.; Burns, J. A.; Rossier, L.; Simonelli, D.; Veverka, J.; Chapman, C. R.; Klaasen, K.; Johnson, T. V. et al. (September 1998). "The Small Inner Satellites of Jupiter". Icarus 135 (1): 360–371. doi:10.1006/icar.1998.5976. Bibcode: 1998Icar..135..360T. 
  2. USGS/IAU (October 1, 2006). "Planetary Names: Crater, craters: Ida Facula on Amalthea". Gazetteer of Planetary Nomenclature (USGS Astrogeology). http://planetarynames.wr.usgs.gov/Feature/2646. பார்த்த நாள்: 2012-03-28. 
  3. Ververka J.; Thomas P.; Davies M. E.; Morrison D. (September 1981). "Amalthea: Voyager imaging results". Journal of Geophysical Research 86 (A10): 8675–8682. doi:10.1029/JA086iA10p08675. Bibcode: 1981JGR....86.8675V. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடா_பாகுலா&oldid=2634380" இருந்து மீள்விக்கப்பட்டது