ஐடா இசுகடர் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐடா இசுகடர் பள்ளி
முகவரி
எண்.1 கழிஞ்சூர் முதன்மைச் சாலை
வேலூர், தமிழ்நாடு
இந்தியா
அமைவிடம்12°56′43″N 79°08′05″E / 12.945237°N 79.13469°E / 12.945237; 79.13469ஆள்கூறுகள்: 12°56′43″N 79°08′05″E / 12.945237°N 79.13469°E / 12.945237; 79.13469
தகவல்
வகைதனியார் நிறுவனப் பள்ளி, தங்கும் வசதியில்லா, இருபாலரும் பயிலும் பள்ளி
குறிக்கோள்ஒளியேற்றச் செய்வது
பள்ளி அவைஇந்திய இடைநிலை கல்வி பள்ளி சான்றிதழ் / இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை
Chairmanடாக்டர்.செ.வி.பீட்டர்,தலைவர்.கிருத்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
அதிபர்டேனியல் குணபாலன்
இணைப்புகள்இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை
பள்ளி தாளாளர்டாக்டர்.வினு மோசசு
இணையம்

ஐடா இசுகடர் பள்ளி (Ida Scudder School) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் கழிஞ்சூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள பள்ளியாகும்.[1] இப்பள்ளி ஒர் தனியார் நிறுவன, தங்கும் வசதியில்லா, இருபாலரும் பயிலும் பள்ளியாகும். இப்பள்ளி தேசிய அளவிலான, தனியார் இந்திய கல்வி வாரியம் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை கல்வியுடன் இணைந்த பள்ளி ஆகும். இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் மேல் நிலைக்கல்வி வகுப்புகள் வரையுள்ள பள்ளியாகும்.[2]

வரலாறு[தொகு]

இப்பள்ளி அமெரிக்க மருத்துவ மதபோதகரான டாக்டர்.ஐடா இசுகடர் அவர்களின் நினைவாக அவரின் பெயர் சூட்டப்பட்டது. வேலூரில் உள்ள கிருத்துவ மருத்துவக் கல்லூரி ஆரம்பித்து வைத்தவராவார். அக்காலகட்டத்தில் வேலூரில் ஒருசில பள்ளிகளே இருந்தது. அதனால் கிருத்துவ மருத்துவக் கல்லூரியின் ஆசிரியக் குழுவினர் சேர்ந்து 1969 ஆம் ஆண்டு சூன் 13 ஆம் தேதி தொடங்கி வைத்தனர்.[2] பள்ளியைத் தொடங்க தேவையான பணத்தை ஆசிரியக் குழுவினர் தங்களது ஒருமாத ஊதியத்தை அளித்தனர். மேலும் ஆரம்ப காலங்களில் பள்ளியின் ஊழியர்களுக்கு ஊதியம் சில பெற்றோர்களால் வழங்கப்பட்டது.

பள்ளி தொடர்புகள்[தொகு]

இப்பள்ளி இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை புதுடெல்லியுடன் இணைந்த கல்விமுறையாகும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்திய இடைநிலைக் கல்வி பள்ளி சான்றிதழ் தேர்வுக்கு தயாராகிறார்கள்.மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபையின் சார்பாக தேர்வுகள் எழுதுகின்றனர்.[2]

ஆண்டு நிகழ்வுகள்[தொகு]

ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் பள்ளியில் நடைபெறுகின்றன. அவற்றில் ஆண்டு விளையாட்டு விழா, மாணவர்கள் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் திறன் போட்டிகள், பிரிவு உபச்சாரவிழா,பள்ளி மாணவ அணிகளுக்கு இடையே போட்டிகள், மற்றும் கிறித்து பிறப்புப் பெருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.[3]

கல்வி சார்ந்த மற்றும் கலைத்திட்ட பங்களிப்புகள்[தொகு]

பள்ளி மாணவர்கள் மாநில அளவிலும் மற்றும் தேசிய அளவிலும் பங்களித்து பல்வேறு பரிசுகளை வென்றுவந்தனர். 2008 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கல்வி அமைப்பின் கீழ் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான அறிவியல் திறமைசார் தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர்.[4] 2011 ஆம் ஆண்டு வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடத்திய கணிதவியல் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த அணிக் கோப்பையை வென்றனர். இப் போட்டியில் 25 பள்ளியில் இருந்து சுமார் 810 மாணவர்கள் பங்கு பெற்றனர்.[5] 2007-2008 ஆம் கல்வியாண்டில் இந்திய மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாநில கோப்பையை கால்பந்து, தடகளப் போட்டிகளில் வென்றனர். மேலும் இந்திய பள்ளிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டியில் பங்குபெற்று அரையிறுதிச் சுற்றில் வென்றது. சமீபத்தில் பள்ளி கூடைப்பந்து அணி ASISC போட்டியில் கலந்து கொண்டு தேசிய கூடைப்பந்து போட்டியில் வென்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ContactUs". Ida Scudder School. மூல முகவரியிலிருந்து 2013-08-01 அன்று பரணிடப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 "History". Ida Scudder School. மூல முகவரியிலிருந்து 2012-07-30 அன்று பரணிடப்பட்டது.
  3. "Highlights Of the Academic Year 2005 - 2006". Ida Scudder School.
  4. "Vellore student tops in talent exam". The Hindu. 9 June 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/vellore-student-tops-in-talent-exam/article1273744.ece. பார்த்த நாள்: 22 July 2013. 
  5. "Mathematical contest organised for school students". The Hindu. 25 January 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mathematical-contest-organised-for-school-students/article1123309.ece. பார்த்த நாள்: 22 July 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடா_இசுகடர்_பள்ளி&oldid=2733034" இருந்து மீள்விக்கப்பட்டது