ஐஜென் மலை
ஐஜென் மலை | |
---|---|
Mount Ijen Gunung Ijen | |
![]() ஐஜென் எரிமலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,769 m (9,085 அடி) |
புடைப்பு | [1] |
பட்டியல்கள் | ரீபு மலைகள் |
ஆள்கூறு | 8°03′29″S 114°14′31″E / 8.058°S 114.242°E |
புவியியல் | |
பன்யுவாங்கி பிராந்தியம், போண்டோவோசோ பிராந்தியம், கிழக்கு ஜாவா, இந்தோனேசியா | |
நிலவியல் | |
மலையின் வகை | சுழல் வடிவ எரிமலை |
கடைசி வெடிப்பு | 1999 [1] |

ஐஜென் மலை (ஆங்கிலம்: Mount Ijen இந்தோனேசியம்: Gunung Ijen) என்பது இந்தோனேசியா, ஜாவா தீவு, கிழக்கு ஜாவா, பன்யுவாங்கி பிராந்தியம் (Banyuwangi Regency), போண்டோவோசோ பிராந்தியம், (Bondowoso Regency) பிராந்தியங்களில் அமைந்துள்ள சுழல் வடிவ எரிமலை ஆகும்.
நீலத் தீப்பிழம்பு, அமில ஏரி; மற்றும் கந்தகச் சுரங்கத்திற்கு இந்த மலை பெயர் பெற்றது. சுமார் 20 கிலோமீட்டர் (12 மைல்) அகலமுள்ள ஐஜென் எரிமலைத் தொடரின் ஒரு பகுதியாக ஐஜென் மலை உள்ளது.
ஐஜென் எரிமலை வளாகத்தில் மிக உயரமான இடம் குனோங் மெராப்பி சுழல் வடிவ எரிமலை ஆகும். "குனோங் மெராப்பி" என்ற பெயருக்கு இந்தோனேசிய மொழியில் 'நெருப்பு மலை' என்று பொருள்படும். மத்திய ஜாவாவில் உள்ள மெராபி எரிமலையும், சுமாத்திராவில் உள்ள மெராப்பி மலையும் ஒரே சொற்பிறப்பியல் அமைப்பைக் கொண்டுள்ளன.
ஐஜென் புவிப்பூங்கா, ஐஜென் மலைப்பகுதி, புலாவ் மேரா கடற்கரை மற்றும் ஆலாஸ் பூர்வோ தேசிய பூங்கா (Alas Purwo National Park) ஆகியவை பன்யுவாங்கி பிராந்தியம், போண்டோவோசோ பிராந்தியம் ஆகிய இரு பிராந்தியங்கள் முழுவதும் நீண்டுள்ளன.
ஆலாஸ் பூர்வோ தேசிய பூங்கா; பல்வேறு புவியியல், உயிரியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பூங்கா 2023-இல் யுனெஸ்கோ உலகளாவிய புவிசார் பூங்காக்களின் (UNESCO Global Geoparks) ஒரு பகுதியாக மாறியது.
ஐஜென் எரிமலை ஏரி
[தொகு]குனோங் மெராபியின் மேற்கே ஐஜென் எரிமலை உள்ளது. ஐஜென் எரிமலை ஒரு கிலோமீட்டர் அகலம் (0.62 மைல்) கொண்ட பசுநீல நிற அமில ஏரியைக் கொண்டுள்ளது. இந்த ஏரி ஒரு கந்தகச் சுரங்க நடவடிக்கைகளின் தளமாகும். கந்தகம் நிறைந்த கூடைகள் ஏரிப் பள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து கையால் கொண்டு மேலே வரப்படுகின்றன.[2][3]
ஐஜென் எரிமலையின் மேலே உள்ள ஐஜென் கவா பள்ளம் 722 மீட்டர் (2,369 அடி) விட்டம்; மற்றும் 0.41 சதுர கிமீ (0.16 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த ஏரி உலகின் மிகப்பெரிய அமிலத்தன்மை கொண்ட ஏரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[4] ஐஜென் அமில ஏரி உலகின் மிகப்பெரிய அமில ஏரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1]
காட்சியகம்
[தொகு]ஐஜென் மலையின் காட்சிப் படங்கள்:
-
ஐஜென் எரிமலை; ஐஜென் ஏரி
-
ஐஜென் கந்தக ஏரி
-
மெராபி மலை, ஐஜென் மலை
-
ஐஜென் கந்தகச் சுரங்கம்
-
ஐஜென் பள்ளத்தாக்கு
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Ijen". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம்.
- ↑ Lane, Megan (9 February 2011). "Sulphur mining in an active volcano". BBC News. https://www.bbc.com/news/world-asia-pacific-12301421.
- ↑ Harsaputra, Indra (19 December 2011). "Kawah Ijen: Between potential and threat". The Jakarta Post. http://www.thejakartapost.com/news/2011/12/19/kawah-ijen-between-potential-threat.html.
- ↑ "Photos from inside the volcanic sulphur mines of Indonesia". news.com.au. February 9, 2015. Archived from the original on November 11, 2016. Retrieved October 19, 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]
- Ijen Gallery
- Volcanological Survey of Indonesia
- Official website of Indonesian volcanoes at USGS
- The Adventures Behind Filming Ring of Fire
- Large photogallery from Kawah Ijen பரணிடப்பட்டது 1 ஆகத்து 2020 at the வந்தவழி இயந்திரம்
- Sulfur mining in Kawah Ijen (The Big Picture photo gallery at Boston.com)
- "Traditional sulfur mining in Kawah Ijen". Yahoo! News. 11 October 2013.
- More sulfur mining pictures at Ijen பரணிடப்பட்டது 24 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்
- Spectacular Neon Blue Lava Pours From Indonesia's Kawah Ijen Volcano At Night (PHOTOS)