ஐசோபுரோப்பைல் நைட்ரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசோபுரோப்பைல் நைட்ரைட்டு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
2-புரோப்பைல் நைட்ரைட்டு
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 541-42-4 Y
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 10929
ChemSpider 10466 Y
UNII 2T3Y2PS0ZE Y
ஒத்தசொல்s ஐசோபுரோப்பைல் ஆல்ககால் நைட்ரைட்டு; நைட்ரசு அமிலம், ஐசோபுரோப்பைல் எசுத்தர்; 1-மெத்திலெத்தில் நைட்ரைட்டு; 2-புரோப்பைல் நைட்ரைட்டு
வேதியியல் தரவு
வாய்பாடு C3

H7 Br{{{Br}}} N O2  

மூலக்கூற்று நிறை 89.09
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C3H7NO2/c1-3(2)6-4-5/h3H,1-2H3 Y
    Key:SKRDXYBATCVEMS-UHFFFAOYSA-N Y
இயற்பியல் தரவு
அடர்த்தி 0.8684 g/cm?
கொதி நிலை 40 °C (104 °F)

ஐசோபுரோப்பைல் நைட்ரைட்டு (Isoxazole) என்பது C3H7NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-புரோப்பைல் நைட்ரைட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். ஆல்கைல் நைட்ரைட்டு சேர்மமான இதை ஐசோபுரோப்பனால் சேர்மத்திலிருந்து தயாரிக்கலாம். தெளிவான வெளிர் மஞ்சள் நிறத்தில் எண்ணெயாக இது காணப்படுகிறது. [1]

பயன்கள்[தொகு]

ஐசோபுரோப்பைல் நைட்ரைட்டு என்பது போப்பர்கள் எனப்படும் உள்ளிழுக்கும் மருந்துகளாகப் பயன்படுத்தப்படும் சேர்மங்களில் ஒன்றாகும். ஓர் உற்சாகத்தைத் தூண்டும் ஒரு உள்ளிழுக்கும் மருந்தாக ஐசோபுரோப்பைல் நைட்ரைட்டு கருதப்படுகிறது. பெரும்பாலும் ஐசோபியூட்டைல் நைட்ரைட்டுக்கு மாற்றாகவும் கருதப்படுகிறது.

பாதுகாப்பு[தொகு]

விழித்திரையின் மையப்பகுதி பாதிப்புடன் ஐசோபிரைல் நைட்ரைட்டு தொடர்புடையது ஆகும். விழித்திரை மையத்தில் பார்வைக் குறைபாடு, மஞ்சள் புள்ளிகள் மற்றும் உள் பிரிவு மற்றும் வெளிப்புற பிரிவு சந்திப்பில் சீர்குலைவு போன்ற குறைபாடுகள் இதனால் உருவாகலாம். [2] இக்குறைபாடுகள் மீளக்கூடியதாகவும் இருக்கலாம். [3] பொதுவாக ஐசோபுரோப்பைல் நைட்ரைட்டு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வேதிப்பொருளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Handbook of Chemistry and Physics, CRC Press, 85th edition
  2. "Adverse ophthalmic reaction in poppers users: case series of 'poppers maculopathy'". Eye 26 (11): 1479–86. November 2012. doi:10.1038/eye.2012.191. பப்மெட்:23079752. 
  3. Inserm. "Des pertes visuelles chez les consommateurs de poppers". www.inserm.fr (in பிரெஞ்சு). Archived from the original on 2012-06-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-23.