உள்ளடக்கத்துக்குச் செல்

ஐசோபிரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசோபிரீன்
Skeletal formula
Skeletal formula
Space-filling model
Space-filling model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-methyl-1,3-butadiene
இனங்காட்டிகள்
78-79-5 Y
ChEBI CHEBI:35194 Y
ChemSpider 6309 Y
InChI
  • InChI=1S/C5H8/c1-4-5(2)3/h4H,1-2H2,3H3 Y
    Key: RRHGJUQNOFWUDK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H8/c1-4-5(2)3/h4H,1-2H2,3H3
    Key: RRHGJUQNOFWUDK-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C16521 Y
பப்கெம் 6557
  • CC(=C)C=C
UNII 0A62964IBU Y
பண்புகள்
C5H8
வாய்ப்பாட்டு எடை 68.12 g/mol
அடர்த்தி 0.681 g/cm³
உருகுநிலை −143.95 °C
கொதிநிலை 34.067 °C
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

CH2=C(CH3)CH=CH2 என்ற மூலக்கூற்றுச் சூத்திரத்தையுடைய ஒரு சேதனச் சேர்மமே ஐசோபிரீன் ஆகும். இது தாவரங்களால் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இலகுவாக ஆவியாகக்கூடிய ஒரு திரவமாகும். இது தனியே ஐதரசனையும் கரிமத்தையும் மாத்திரம் கொண்டிருப்பதால் இது ஒரு ஐதரோகார்பனுமாகும்.

இயற்கையில் ஐசோபிரீன்

[தொகு]

இறப்பரின் (பொலி ஐசோபிரீன்) ஒருபகுதியம் ஐசோபிரீனாகும். ஐசோபிரீன் பல தாவரங்களாலும் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் 600 மில்லியன் தொன் ஐசோபிரீன் தாவரங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றது. வளிமண்டலத்துக்குள் வெளியிடப்படும் ஐதரோகார்பன் அளவில் மூன்றிலொரு பகுதி ஐசோபிரீனிலிருந்து வருகின்றது. வளிமண்டலத்தில் ஐசோபிரீன் இலகுவாகப் பிரிகையடைந்து விடும். ஐசோபிரீன் வளியில் தாக்கமடையும் போது வளியில் புகைமூட்டமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. யூக்கலிப்டஸ் போன்ற தாவரங்களால் ஐசோபிரீன் அதிகம் உருவாக்கப்படுகின்றது. வளியில் ஓசோன் வாயுவின் செறிவை ஐசோபிரீன் பாதிக்கும் தன்மையுடையது. எனினும் இது படை மண்டல ஓசோனில் தாக்கம் செலுத்தாது. சாதாரண வளியில் ஐசோபிரீன் கலக்கப்பட்டால் ஓசோனின் அளவை இது குறைக்கின்றது. நைதரசனின் ஒக்சைட்டுகள் (NOx) வளியில் காணப்பட்டால் ஐசோபிரீன் அதனோடு தாக்கமடைந்து ஓசோனை விடுவிக்கின்றது. எனினும் ஐசோபிரீன் இயற்கையான பொருளாகையால் அது ஒரு வளி மாசாகக் கருதப்படுவதில்லை. எனினும் NOx ஒரு வளி மாசாகும்.

தாவரங்களில் ஐசோபிரீன்

[தொகு]

தாவரங்கள் தமது பச்சையுருமணிகள் மூலம் ஐசோபிரீனை உற்பத்தி செய்கின்றன. இது MEP வழிமுறை மூலம் உற்பத்தியாக்கப்படுகின்றன. பச்சையுருமணியில் ஐசோபிரீன் தொகுப்பி மூலம் இது உருவாக்கப்படுவதுடன் ஃபொஸிமிடோமைசின் மூலம் இவ்வுற்பத்தி நிறுத்தப்படுகின்றது. ஐசோபிரீன் 40 °C வெப்பநிலையிலேயே வினைத்திறனுடன் உற்பத்தி செய்யப்படுகின்றது. இத்தொழிற்பாடே ஐசோபிரீன் தாவரங்களை அதிக வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கின்றது என்ற அனுமானத்துக்குக் காரணமாகும்.

தாவரங்களுக்குப் பயன்படும் விதம்

[தொகு]

அதிக வெப்பநிலையிலிருந்து தம்மைப் பாதுகாக்கத் தாவரங்கள் ஐசோபிரீனை உருவாக்குகின்றன. எனினும் 40 °Cக்கு மேற்பட்ட வெப்பநிலையிலிருந்து ஐசோபிரீனால் வினைத்திறனாக தாவரங்களினைப் பாதுகாக்க இயலாது. தாவரத்தினுள் அதிக வெப்பநிலை வீச்சை ஐசோபிரீன் தடுக்கின்றது. அணு ஒக்சிசன், ஓசோன் போன்ற அதிக தாக்குதிறனுடைய ஒக்சிசன் வகைகளிலிருந்து இது தாவரங்களைப் இரசாயன ரீதியில் பாதுகாப்பதாக அறியப்பட்டுள்ளது.

தொழிற்சாலை உற்பத்தி

[தொகு]
இறப்பர்-பொலி ஐசோபிரீனின் இரசாயன கட்டமைப்பு.

இறப்பரிலிருந்தே முதன் முதலாகப் பிரித்தெடுக்கப்பட்டது. இறப்பரை ஒக்சிசனற்ற சூழ்நிலையில் அதிக வெப்பநிலைக்குட்படுத்துவதன் மூலம் ஐசோபிரீனைப் பிரித்தெடுக்கலாம். எத்திலீன் உற்பத்தியில் பக்க விளைபொருளாக ஐசோபிரீன் உருவாகின்றது. ஒவ்வொரு வருடமும் 800000 தொன் ஐசோபிரீன் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஐசோபிரீன் பிரதானமாக செயற்கை இறப்பரை உருவாக்கவே பயன்படுத்தப்படுகின்றது. இறப்பரானது ஒரு இலட்சம் தொடக்கம் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மூலக்கூற்றுத் திணிவுடைய ஐசோபிரீனாலான மிகப் பெரும் நீண்ட பல்பகுதியமாகும். இரசாயன ரீதியாக இறப்பர் ஒரு பொலி-ஐசோபிரீனாகும்.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசோபிரீன்&oldid=3826757" இலிருந்து மீள்விக்கப்பட்டது