ஐசோடோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Nuclide halflives colorcoded.

இரண்டு அணுக்கருக்கள் ஒரே நியூத்திரன் எண்ணையும், ஆனால், வெவ்வேறு அணு எண்ணையும் கொண்டிருக்குமானால், அவை சமப்போக்கு (Isotones) அல்லது ஐசடோன்கள் என அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக அணுக்கள் போரான்-12 இனையும் கார்பன்-13 இனையும் எடுத்துக் கொண்டால், போரானில் 5 புரோத்தன்களும், 7 நியூத்திரன்களும் உள்ளன, கார்பனில் 6 புரோத்தன்களும், 7 நியூத்திரன்களும் உள்ளன. எனவே போரான்-12 உம் கார்பன்-13 உம் ஐசோடோன்களாகும். மேலும் குளோரின்-37, ஆர்கான்-38, பொட்டாசியம்-39, கால்சியம்-40 முதலிய அணுக்களும் ஐசோடோன்களாகும் இவைகளில் முறையே 20 நியூட்ரான்களுள்ளன.

செருமானிய இயற்பியலாளர் கே. கூகன்கெய்மர் சமதானியில் உள்ள புரோத்தனை அகற்றிவிட்டு நியூத்திரனைச் சேர்த்து ஐசோடோன் என முதலில் குறித்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசோடோன்&oldid=1470150" இருந்து மீள்விக்கப்பட்டது