ஐசையா பெர்லின்
ஐசையா பெர்லின் | |
|---|---|
1983 இல் பெர்லின் | |
| பிறப்பு | 6 சூன் 1909 ரீகா, லிவோனியா ஆளுநரகம், உருசியப் பேரரசு |
| இறப்பு | 5 நவம்பர் 1997 (அகவை 88) ஆக்சுபோர்டு, இங்கிலாந்து |
| படித்த கல்வி நிறுவனங்கள் | கார்பஸ் கிறிஸ்டி கல்லூரி, ஆக்ஸ்போர்டு |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | "Two Concepts of Liberty" |
| வாழ்க்கைத் துணை | அலீன் டி கன்ஸ்பர்க் (தி. 1956) |
| காலம் | தற்கால மெய்யியல் |
| பகுதி | மேற்குலக மெய்யியல் |
| பள்ளி | |
| கல்விக்கழகங்கள் |
|
| முனைவர்-பட்ட மாணவர்கள் |
|
| ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
|
முக்கிய ஆர்வங்கள் |
|
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | |
சர் ஐசையா பெர்லின் (Isaiah Berlin, 6 சூன் 1909[1] – 5 நவம்பர் 1997) என்பவர் ஒரு உருசிய-பிரித்தானிய சமூக மற்றும் அரசியல் கோட்பாட்டாளர், மெய்யியலாளர் மற்றும் புலமைத்துவ வரலாற்றாசிரியர் ஆவார். வெளியிடுவதற்காக எழுதுவதில் இவருக்கு நாளுக்கு நாள் ஆர்வம் குறைந்து வந்தபோதிலும், இவரது இயல்பான பாணியிலான விரிவுரைகளும், உரையாடல்களும் சில சமயங்களில் பதிவு செய்யப்பட்டு எழுத்து வடிவம் பெற்றன. மேலும், இவர் பேசிய பல கருத்துக்கள், இவராலும், 1974 முதல் இவரது முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய ஹென்றி ஹார்டி உள்ளிட்ட பிறராலும் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
அன்றைய உருசியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த ரீகாவில் பிறந்த இவர், ஆறு வயதில் பெட்ரோகிராட் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் உருசியப் புரட்சியை நேரில் கண்டார். 1921 இல், இவரது குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. அங்கு இலண்டனில் உள்ள செயின்ட் பால்ஸ் பள்ளியிலும், ஆக்ஸ்போர்டில் உள்ள கார்பஸ் கிறிஸ்டி கல்லூரியிலும் கல்வி பயின்றார். 1932 ஆம் ஆண்டில், தனது 23 வயதில், பெர்லின் ஆக்ஸ்போர்டில் உள்ள ஆல் சோல்ஸ் கல்லூரியில் பரிசு நல்கைக்கான உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது சொந்த படைப்புகளுக்கு மேலதிகமாக, இவர் இவான் துர்கனேவின் படைப்புகளை உருசிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். இரண்டாம் உலகப் போரின் போது இவர் பிரிட்டிஷ் தூதரக சேவையில் பணியாற்றினார்.
1957 முதல் 1967 வரை பெர்லின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமூக மற்றும் அரசியல் கோட்பாட்டின் சிச்செல் பேராசிரியராக இருந்தார். இவர் 1963 முதல் 1964 வரை அரிஸ்டாட்டில் சங்கத்தின் தலைவராக இருந்தார். 1966 இல் ஆக்ஸ்போர்டில் வுல்ஃப்சன் கல்லூரியை உருவாக்கப்படுவதில் முக்கியப் பங்காற்றிய இவர், அக்கல்வியின் நிறுவனத் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1946 இல் சி.பி.ஈ விருது கொடுத்து கௌரவிக்கபட்ட பெர்லின், 1957 இல் நைட் பட்டம் பெற்றார். 1971 இல் ஆர்டர் ஆஃப் மெரிட் ஆகவும் நியமிக்கப்பட்டார். இவர் 1974 முதல் 1978 வரை பிரிட்டிஷ் அகாதமியின் தலைவராக பணியாற்றினார். குடிமை உரிமைகளைத் தன் வாழ்நாள் முழுவதும் உறுதியாகப் பாதுகாத்து வந்தமைக்காக, 1979-ஆம் ஆண்டில் அவருக்கு ஜெருசலேம் பரிசு வழங்கப்பட்டது. மேலும் 1994 இல் தொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார். அந்தப் பட்டமளிப்பு விழாவில் தன் சார்பாக வாசிக்கப்படுவதற்காக, இவர் ஒரு "சிறிய நம்பிக்கை அறிக்கை"யைத் (ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் இவர் குறிப்பிட்டது போல) தயாரித்திருந்தார்; அதுவே தற்போது "இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான ஒரு செய்தி" என்ற பெயரில் அறியப்படுகிறது. [2]
ஆண்டுதோறும் நடைபெறும் ஐசையா பெர்லின் விரிவுரைகள், ஆக்ஸ்போர்டில் உள்ள ஹாம்ப்ஸ்டெட் யூத ஜெபக் கூடம் மற்றும் வுல்ஃப்சன் கல்லூரி ஆகிய இடங்களிலும், டெய்லர் நிறுவனத்திலும் (ஆக்ஸ்போர்டின் இத்தாலிய ஆய்வுகள் துறையால் ஏற்பாடு செய்யப்படுவது), பிரித்தானிய அகாதமியிலும், அத்துடன் ரிகாவிலும் நடத்தப்படுகின்றன. தாராளவாதக் கோட்பாடு மற்றும் விழுமியப் பன்மைத்துவம் குறித்த பெர்லினின் ஆய்வுகளும், மார்க்சியம் மற்றும் பொதுவுடைமைக்கு எதிரான அவரது நிலைப்பாடும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ His date of birth was officially registered as 24 May, according to the Julian calendar then in force in the Russian Empire. Latvian State Historical Archive, Rīgas rabināts, 4346. fonds, 2. apraksts, 58. lieta, 71. lp. o. p., 72. lp.
- ↑ The New York Review of Books, 23 October 2014, "A Message to the 21st Century", http://www.sjpcommunications.org/images/uploads/documents/Isaiah_Berlin.pdf பரணிடப்பட்டது 9 சனவரி 2021 at the வந்தவழி இயந்திரம்