ஐசீனியா பெட்டிடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசீனியா பெட்டிடா
Redwiggler1.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: வளைதசைப்புழுக்கள்
வகுப்பு: கிளைடெல்லாட்டா
வரிசை: ஹாப்லோடாக்சிடா
குடும்பம்: லும்பிரிசிடே
பேரினம்: ஐசீனியா
இனம்: ஐ. பெட்டிடா
இருசொற் பெயரீடு
ஐசீனியா பெட்டிடா
(சேவிங்னி, 1826) [1]

ஐசீனியா பெட்டிடா (Eisenia fetida) எனும் மண்புழுவானது பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. இதன் பொதுவான பெயர்களாக சிவப்பு புழு, மீன் புழு, புலி புழு, தூண்டி புழு என்பதாகும். இந்த மண்புழு இனம் மக்குகின்ற கரிம பொருளை உண்ணும் தன்மையுடையது. இந்த புழுக்கள் அழுகும் தாவரங்கள், உரம் மற்றும் உரம் ஆகியவற்றில் செழித்து வளர்கின்றன. இவை மேல்மட்ட வகைப் புழுக்களாகும். இந்த புழுக்கள் பண்பில் லும்ப்ரிகஸ் ரூபெல்லஸை ஒத்திருக்கின்றன.

புழுக்கள் தங்களை முன்னோக்கி அல்லது பின்னோக்கி தள்ளுவதற்காகத் தசைகளைச் சுருக்கி, அருகிலுள்ள பரப்புகளைப் பிடித்து நகர்ந்து செல்லும். இதற்கு உடலில் காணப்படும் சீட்டாக்கள் எனும் முள்முடிகள் உதவிபுரிகின்றன.

உயிரியல்[தொகு]

ஐ பெட்டிடா புழுக்கள் வீடு மற்றும் தொழிலக கரிம கழிவுகளை மண்புழு உரமாகத் தயாரிக்கப் பயன்படுகின்றன.[2][3][4] ஐரோப்பாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்புழுக்கள் அண்டார்டிக்காவைத் தவிர மற்ற எல்லா கண்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்தியா, உகாண்டா மற்றும் மியான்மாரில் சோதனை அடிப்படையில் கழிப்பறை கழிவுகளை உரமாக்கும் தொழில்நுட்பத்தில் இப்புழுக்கல் பயன்படுத்தப்படுகிறது.[5]

ஐ பெட்டிடா இயற்கையான பாதுகாப்பினை பெற்றுள்ளன. உடற்குழித் திரவத்தில் காணப்படும் உடற்குழிச் செல்கள் லைசெனின் எனும் புரதம் ஒன்றினைச் சுரக்கின்றன. இந்த புரதம் உயிரியின் உள்ளே நுழையும் எதிரி செல்களை துளைக்கும் தன்மையுடையது. அந்நிய செல்களில் காணப்படும் ஸ்பிங்கோமைலினை அடையாளம்கண்டு அச்செல்களில் துளை ஏற்படுத்தி அழிக்கின்றன. (லைசெனின் பி. மெகாட்டேரியம் உள்ளிட்ட செல் சுவர்களில் ஸ்பிங்கோமைலின் இல்லாத உயிரினங்களிலும் பாதிப்பு ஏற்படுத்தவல்லது. இருப்பினும் நச்சினை செயல் இழக்கும் செயல் முறை அறியப்படவில்லை).[6]

சுயபாதுகாப்பு[தொகு]

இந்தப் புழுவினைக் கவனமின்றி கையாளும்போது, மூக்கைத் துளைக்கும் மனம் வெளியேறும். இதுவே இந்த இனத்திற்குப் பெயர் வரக் காரணமாக அமைந்தது. பெட்டிட்டா என்பது “துர்நாற்றமுடைய" எனப் பொருள்படும். இது மறைமுகமாக எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் தன்மையினை அளிக்கின்றது.

புலப்படும் முட்கள் கொண்ட ஐ பெட்டிடா

தொடர்புடைய இனங்கள்[தொகு]

ஐ பெட்டிடா என்பது ஐ ஆண்ட்ரியுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. இது ஐ. ஆண்டெரி என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டு இனங்களையும் வேறுபடுத்தி அரிய எளிய வழியாக பெட்டிடா சில நேரங்களில் வெளிறிய நிறத்தில் இருக்கும். இவை இரண்டும் தனித் தனி இனங்கள் என்பதை மூலக்கூறு பகுப்பாய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் இனப்பெருக்க சோதனைகள் மூலம் கலப்பினங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.[7]

இனப்பெருக்கம்[தொகு]

மற்ற மண்புழு இனங்களைப் போலவே, ஐ பெட்டிடாவும் இருபால் உயிரியாகும். இருபுழுக்கள் இணைந்து இனப்பெருக்கம் மேற்கொள்வதைச் சாத்தியமாக்குகின்றன.[8] இரண்டு புழுக்கள் கிளைடெல்லம் எனப்படும் புணர்வளைத் தடுப்பு பகுதியில் இணைகின்றன. இப்பகுதியில் புழுக்களின் இனப்பெருக்க உறுப்புகள் காணப்படும். தடித்த வெளிறிய வண்ணமுடையப் பகுதிகளாக உள்ளன. இணையும் இரண்டு புழுக்களும் விந்தணுக்களை ஒன்றுக்கு ஒன்று பரிமாறிக்கொள்கின்றன. இப் புழுக்கள் ஒவ்வொன்றும் பல முட்டைகளைக் கொண்ட புழுக்கூடுகளைச் சுரக்கின்றன. இந்த புழுக்கூடுகள் எலுமிச்சை வடிவில், வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இவை, முதிர்ச்சியடையும் போது பழுப்பு நிறமாக மாறும். இந்த புழுக்கூடுகளை நாம் வெறும் கண்களாலே காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Eisenia foetida". Fauna Europaea. 2004.
  2. Albanell, E.; Plaixats, J.; Cabrero, T. (1988). "Chemical changes during vermicomposting (Eisenia fetida) of sheep manure mixed with cotton industrial wastes". Biology and Fertility of Soils 6 (3). doi:10.1007/BF00260823. பன்னாட்டுத் தர தொடர் எண்:0178-2762. 
  3. Orozco, F. H.; Cegarra, J.; Trujillo, L. M.; Roig, A. (1996). "Vermicomposting of coffee pulp using the earthworm Eisenia fetida: Effects on C and N contents and the availability of nutrients". Biology and Fertility of Soils 22 (1–2): 162–166. doi:10.1007/BF00384449. பன்னாட்டுத் தர தொடர் எண்:0178-2762. 
  4. Maboeta, M.S.; Rensburg, L.van (2003). "Vermicomposting of industrially produced woodchips and sewage sludge utilizing Eisenia fetida". Ecotoxicology and Environmental Safety 56 (2): 265–270. doi:10.1016/S0147-6513(02)00101-X. பன்னாட்டுத் தர தொடர் எண்:0147-6513. பப்மெட்:12927558. 
  5. "Testing the "Tiger Toilet"". US AID. May 26, 2016. அக்டோபர் 29, 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. செப்டம்பர் 28, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  6. Bruhn, Heike; Winkelmann, Julia; Andersen, Christian; Andrä, Jörg; Leippe, Matthias (2006-01-01). "Dissection of the mechanisms of cytolytic and antibacterial activity of lysenin, a defence protein of the annelid Eisenia fetida" (in en). Developmental & Comparative Immunology 30 (7): 597–606. doi:10.1016/j.dci.2005.09.002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0145-305X. பப்மெட்:16386304. http://www.sciencedirect.com/science/article/pii/S0145305X05001734. 
  7. Plytycz, Barbara; Bigaj, Janusz; Panz, Tomasz; Grzmil, Paweł (2018-09-21). "Asymmetrical hybridization and gene flow between Eisenia andrei and E. fetida lumbricid earthworms" (in en). PLOS ONE 13 (9): e0204469. doi:10.1371/journal.pone.0204469. பப்மெட்:30240427. Bibcode: 2018PLoSO..1304469P. 
  8. Domínguez, Jorge; Velando, Alberto; Aira, Manuel; Monroy, Fernando (2003-01-01). "Uniparental reproduction of Eisenia fetida and E. andrei (Oligochaeta: Lumbricidae): evidence of self-insemination: The 7th international symposium on earthworm ecology · Cardiff · Wales · 2002" (in en). Pedobiologia 47 (5): 530–534. doi:10.1078/0031-4056-00224. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-4056. http://www.sciencedirect.com/science/article/pii/S0031405604702334. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசீனியா_பெட்டிடா&oldid=3593973" இருந்து மீள்விக்கப்பட்டது