ஐசிடிபி இராமானுஜன் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வளரும் நாடுகளைச் சேர்ந்த இளம் கணிதவியலாளர்களுக்கான ஐசிடிபி இராமானுஜன் பரிசு (ICTP Ramanujan Prize for Young Mathematicians from Developing Countries) என்பது இந்தியாவின் கணிதமேதையான சீனிவாச ராமானுஜனின் பெயரில் வழங்கப்படும் ஒரு கணிதவியல் பரிசுகளாகும். இவை உலகளவில் இரு கணிதப் பரிசுகளும், ஒரு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு வருகின்றன. வளரும் நாடுகளில் மிகச்சிறப்பான கணித ஆய்வைப் புரிபவருக்கு இத்தாலி நாட்டில் உள்ள கோட்பாட்டு இயற்பியலுக்கான சர்வதேச மையம் (International council for theoretical Physics (ICTP)) என்ற அமைப்பு ராமானுஜன் பெயரில் உயரிய கணிதப் பரிசை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இது 2004 இல் நிறுவப்பட்டது.[1] 2005-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இப்பரிசுகள் வழங்கப்பட்டுவருகிறன.

இப்பரிசு வளரும் நாட்டைச் சேர்ந்த 45 ஆண்டுகளுக்கும் குறைவான வயதுக்குட்பட்ட ஆராய்ச்சியாளருக்கு வழங்கப்படுகிறது.[2] இது இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், நார்வாஜியன் அகாடமி ஆஃப் சைன்ஸ், ஏபெல் பரிசு ஆகியவற்றின் துணையுடன் பன்னாட்டு கணித ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Abdus Salam International Centre for Theoretical Physics Full Technical Report 2012, p. 182
  2. Alladi, Krishnaswami (2012), "Niels Henrik Abel: Norwegian Mathematical Genius", Ramanujan's Place in the World of Mathematics: Essays Providing a Comparative Study, Springer, pp. 81–88, doi:10.1007/978-81-322-0767-2_13, ISBN 9788132207672. See in particular p. 87. Reprint of an article originally published in The Hindu, December 2004.