ஐசான் (வால்வெள்ளி)
![]() 2013 ஏப்ரல் 10-11 இல் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியூடாக எடுக்கப்பட்ட சி/2012 எஸ்1 இன் படம் | |
கண்டுபிடிப்பு | |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்): | 04-மீ தெறிப்பியைக் கொண்டு வித்தாலி நெவ்ஸ்க்கி, அர்த்தியோம் நவிச்சோனக் (உருசியா) ஆகியோர்[1] |
கண்டுபிடித்த நாள்: | 21 செப்டம்பர் 2012 |
சுற்றுவட்ட இயல்புகள் A | |
ஊழி: | 14 டிசம்பர் 2013 (யூநா 2456640.5)[2] |
ஞாயிற்றண்மைத் தூரம்: | 0.01244 வாஅ (q)[2] |
மையப்பிறழ்ச்சி: | 1.0000020[2] |
சுற்றுக்காலம்: | வெளியேற்றப் பாதை (epoch 2050)[3] |
சாய்வு: | 62.39°[2] |
அடுத்த அண்மைப்புள்ளி: | 28 நவம்பர் 2013[2] |
சி/2012 எசு1 (C/2012 S1, ISON) அல்லது ஐசான் வால்வெள்ளி என்பது சூரியனைச் சுற்றிவரும் ஒரு வால்வெள்ளியாகும். இது 2012 செப்டம்பர் 21 அன்று பெலருசைச் சேர்ந்த வித்தாலி நெவ்ஸ்கி, உருசியாவைச் சேர்ந்த ஆர்த்தியோம் நோவிசோனக் ஆகியோரால் கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்கு பன்னாட்டு அறிவியல் ஓளிமப் பிணையத்தில் உள்ள 0.4 மீட்டர் (16") பிரதிபலிப்பு தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டது. இதன் உட்கரு 5 கிலோமீட்டர் (3.1 மைல்) விட்டமுடையது என கணிக்கப்பட்டுள்ளது.
பெயர்க் காரணம்[தொகு]
இவ் வால்வெள்ளிC/2012 S1, ISON என்று பெயர் பெற காரணம் உண்டு.[4]
பெயரின் பகுதி | காரணம் |
---|---|
C | காலமுறையரற்ற(non-periodic) வால்வெள்ளி |
2012 | கண்டுபிடிக்கபட்ட ஆண்டு |
S | செப்டம்பர் மாதம் இரண்டாவது பாதி (half-month) |
S1 | செப்டம்பர் மாதம் இரண்டாவது பாதியில் காணப்பட்ட முதல் வால்வெள்ளி |
ISON | சர்வதேச ஒளி ஊடகக் கூட்டமைப்பு (ஐசான்) - வால்வெள்ளி கண்டுபிடிக்க பட்ட இடம். |
சிறப்பம்சங்கள்[தொகு]
சூரிய மண்டலத்துக்கு அடுத்துள்ள ஊர்ட் எனும் மேகப் பகுதியில் இருந்து இவ்வால்வெள்ளி வருகிறது.கடந்த 200 ஆண்டுகளில் பூமி கண்ட வால்வெள்ளிகள் யாவும் மீண்டும் மீண்டும் சூரியனையே சுற்றி வருபவை ஆகும். ஆனால் முதன்முறையாக சூரியனை நோக்கி வருகிறது இவ்வால்வெள்ளி.. மேலும் 'ஊர்ட்' மேகப் பகுதியில் இருந்து வரும் இந்த வால்நட்சத்திரம் சூரிய குடும்பம் தோன்றியபோது உருவானது. அதனால் அது சூரியக் குடும்பம் தோன்றிய காலத்தில் உள்ள தகவல்களைப் பத்திரமாக வைத்திருக்கும். அதன் மூலம் உலகம் தோன்றியதைப் பற்றி மேலும் புதிய ஆய்வுகளை முன்னெடுக்க உதவும்.[5]
சூரியனை கடந்து செல்லுதல்[தொகு]
இது சூரியனை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல முயன்ற நிலையில், 28 நவம்பர் 2013 அன்று சூரிய ஈர்ப்பு விசையின் காரணமாக , கரு சிதைக்கப்பட்டு 2000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருகி ஆவியாகி நீரோடை போலச் சென்று மறைந்துவிட்டது. .[6][7][8] இருப்பினும் இதன் சில பாகங்கள் இன்னும் அழியாமல் இருக்கக்கூடும் எனவும் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்[9][10].[11] அமெரிக்காவின் நாசா ஆய்வுமையத்தின் சோஹோ லாஸ்கோ சி2 மற்றும் சி3 போன்ற தொலைநோக்கியில் பதிவான 76 படங்களில் உள்ளபடி ஐசானின் சிறிய தூசி மண்டலத் துண்டு சூரியனில் மோதியது போக மிச்சம் வளிமண்டலத்தில் மிதப்பதாக நம்பப்படுகிறது.[12]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Guido, Ernesto; Sostero, Giovanni; Howes, Nick (24 September 2012). "New Comet: C/2012 S1 (ISON)". Associazione Friulana di Astronomia e Meteorologia. 24 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "MPEC 2013-H38: Observations and Orbits of Comets". IAU Minor Planet Center. 23 April 2013. 28 April 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Horizons output. "Barycentric Osculating Orbital Elements for Comet C/2012 S1 (ISON)". NASA.gov. 25 November 2012 அன்று பார்க்கப்பட்டது. (Solution using the Solar System Barycenter and barycentric coordinates. Select Ephemeris Type:Elements and Center:@0)
- ↑ "Comet ISON - Latest Updates, FAQ and Viewing Guide". Nightskyinfo.com. 18 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "பூமியின் மீது ஐசான் வால் நட்சத்திரம் மோதுமா?". தி இந்து. 15 அக்டோபர் 2013. 15 அக்டோபர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Comet Ison destroyed in Sun passage". BBC. 29 நவம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Blow for stargazers as 'comet of the century Ison' destroyed by the Sun". independent. 29 நவம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "சூரியனை வேகமாக நெருங்கி அடுத்த சில நிமிடங்களில் ஐசான் வால் நட்சத்திரம் மாயமாது". தினகரன். 29 நவம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Battams, Karl (28 November 2013). "Schrödinger's Comet" பரணிடப்பட்டது 2019-05-19 at the வந்தவழி இயந்திரம். CIOC. Retrieved 28 November 2013.
- ↑ சூரியனை நெருங்கி மாயமான ஐசான்.. சிதறுண்டு போனது - சிறு துண்டு தப்பியதாகவும் தகவல்-ஒன் இந்தியா
- ↑ "சூரியனின் ஈர்ப்பு விசையில் ஆவியானது ஐசான் வால்நட்சத்திரம்". theekkathir. 2 திசம்பர் 2013. Archived from the original on 2014-01-18. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 2 திசம்பர் 2013.
- ↑ http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=69780
வெளி இணைப்புகள்[தொகு]
- The NASA Comet ISON Observing Campaign at Sungrazing Comets
- C/2012 S1 (ISON) at the JPL Small-Body Database Browser (interactive)
- C/2012 S1 (ISON) பரணிடப்பட்டது 2012-09-28 at the வந்தவழி இயந்திரம் at Cometography.com
- C/2012 S1 (ISON) at Aerith.net