உள்ளடக்கத்துக்குச் செல்

ஐசாத் குல்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசாத் குல்பா
பிறப்பு17 மார்ச்சு 1982 (1982-03-17) (அகவை 42)
மாலே, மாலைத்தீவுகள்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்போது வரை

ஐசாத் குல்பா (Aishath Gulfa) மாலைத்தீவைச் சேர்ந்த திரைப்பட நடிகையாவார். 1999இல் "நல நல தன்வரு பெனி" என்ற காணொலி மூலம் திரையில் அறிமுகமானார். அதன்பிறகு, கைவீனிகே புரதாமா ரே (1999), அஜாயிப் (2000), ஹைய் எதீனி (2001) , கினிஹிலா (2003) உள்ளிட்ட பல படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்தார். நடிப்பிலிருந்து சிறுது காலம் ஓய்வு எடுத்துக் கொண்ட இவர் டார்க் ரெயின் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் எம்மே பாஹு விந்தா ஜெஹந்தன் (2015) என்ற படத்தில் மருத்துவர் ஆயிஷாவாக திரையில் மீண்டும் தோன்றினார். பின்னர், வாஷே மஷா ஏகி (2016), மீ லோய்பகீ (2017) ஆகிய இரண்டு படங்களில் மீண்டும் நடித்தார்.

தொழில்[தொகு]

இவர், 1999 இல், ஆசிம் தௌபீக்கின் இயக்கத்தின் வெளியான "நல நல தன்வரு பெனி" என்ற காணொளியில் இஸ்மாயில் வஜீ என்பவருடன் இணைந்து திரையில் அறிமுகமானார்.[1] பாலியல் வன்கொடுமை பற்றியும், பாலியல் பலாத்காரத்தை எப்படி கையாள்வது என்பது குறித்தும் பார்வையாளர்களுக்கு தெரிவித்த கைவீனிகே புரதாமா ரே என்ற படத்தில் இவர் ஒரு கலகத்தனமான மகளாக தோன்றினார்.[2] அடுத்த ஆண்டு, அஜாரா அப்துல் கரீம் இயக்கிய "அஜாய்ப்" என்ற திரைப்படத்தில் அகமது அசிம், மரியம் நஜிமா, கொய்யா அசன் மாணிக் , வலீதா வலீத் ஆகியோருடன் நடித்தார். இப்படம் சமுதாய விதிமுறைகளை பொருட்படுத்தாமல் இருக்கும் இரண்டு முன்மாதிரியான மனைவிகள் பற்றியும், அந்தந்த குடும்பங்களின் உறவை பற்றியும் சித்தரிக்கிறது.[3] பின்னர் இவர் ஐஷத் அலி மாணிக்குடன் "ஐய் எதேனி" (2001) என்ற படத்திற்காக பணியாற்றினார். இது தர்மேஷ் தர்ஷனின் காதல் படமான "தட்கன்" (2000) படத்தின் அதிகாரப்பூர்வமற்ற மறு ஆக்கமாகும்.இதில் இவர் ஒரு பொல்லாத சகோதரியாக நடித்தார்.[4][5]

2003 ஆம் ஆண்டில், "கினிஹிலா" என்ற திகில் படத்தில் இவர் ஈசா செரீப் உடன் இணைந்து பணியாற்றினார். இதில் அலி சீசன், நியுமா முகமது, மரியம் நிஷா , ரீகோ மூசா மாணிக் ஆகியோருடன், ஒரு துணை நண்பராக நடித்திருந்தார்.[6][7] சிதைந்து போகும் திருமணத்தை காப்பாற்ற காதலைக் கொண்டு இடைவெளியை குறைக்க முடிவு செய்த ஒரு இளம் தம்பதியினரின் கதையை விவரிக்கிறது.[6] இந்த படம் விக்ரம் பட்டின் இந்திய திகில் திரைப்படமான ராஸின் (2002) என்ற படத்தின் அதிகாரப்பூர்வமற்ற தழுவலாகும்.[8]

சிறுது காலம் திரையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட இவர், 2015 இல் அலி சிபாவ் இயக்கிய காதல் திரைப்படமான எம்மே பாஹு விந்தா ஜெஹந்தன் என்ற படத்தில் முகமது ஜுமாயில் மரியம் மஜூதா ஆகியோருடன் ஒரு மருத்துவராக தோன்றினார்.[9] மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் போராட்டத்தைப் பற்றியும், அவர்களின் சவால்களையும் விவரிக்கும் படமான இது மாலத்தீவில் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படமாகும். மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது.[10][11] டார்க் ரெயின் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அலி சிபாவ் இயக்கிய காதல் நகைச்சுவைத் திரைப்படமான வாஷே மஷா ஏகி (2016) என்ற படத்தில் முகமது ஜுமாயில், மரியம் மஜூதா ஆகியோருடன் இவர் நடித்தார். மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் வாழ்க்கை பற்றியும், தனது மனைவியின் கர்ப்பத்தின் மீதான கணவனின் பயம் குறித்தும் இப்படம் விவரிக்கிறது.[12][13]

மேற்கோள்கள்[தொகு]

 1. Abdulla, Sajid (3 November 2019). "Star of the Week: Aishath Gulfa" (in Divehi). MuniAvas இம் மூலத்தில் இருந்து 29 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201030111038/https://www.muniavas.com/18596. பார்த்த நாள்: 29 October 2020. 
 2. Adhushan, Ahmed (26 May 2016). "The fall and rise of Sajna" (in Divehi). Mihaaru இம் மூலத்தில் இருந்து 4 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201022133426/https://mihaaru.com/entertainment/142. பார்த்த நாள்: 4 January 2019. 
 3. Nadheem, Ahmed (16 February 2012). "Top 10 Actors in Maldives" (in Divehi). Haveeru இம் மூலத்தில் இருந்து 5 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140219100014/http://www.haveeru.com.mv/dhivehi/entertainment/117146. பார்த்த நாள்: 26 November 2018. 
 4. Nair, Padmaraj (August 2000). "Dhadkan: The good ol' 60s revisited". Screen. Archived from the original on 7 February 2001. பார்க்கப்பட்ட நாள் 14 November 2018.
 5. Abdulla, Fareeha (29 April 2016). "Maldivians like copied products; our own style is not accepted: Seezan" (in Divehi). Vaguthu இம் மூலத்தில் இருந்து 28 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160628081830/https://www.vaguthu.mv/evaguthu/410071/. பார்த்த நாள்: 28 June 2016. 
 6. 6.0 6.1 Maaha, Aishath (15 March 2018). "Wish these actors will return" (in Divehi). Dho? இம் மூலத்தில் இருந்து 14 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181214091805/https://dho.mv/entertainment/32682. பார்த்த நாள்: 12 December 2018. 
 7. Ifraz, Ali (18 January 2018). "Easa Shareef returns with a Lhen Foiy" (in Divehi). Avas இம் மூலத்தில் இருந்து 3 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181203125554/https://avas.mv/43170. பார்த்த நாள்: 3 December 2018. 
 8. "Bollywood plays the aping game". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 17 April 2005. பார்க்கப்பட்ட நாள் 27 April 2011.
 9. Naail, Ismail (7 April 2015). ""Emme Fahu Vindhaa Jehendhen": A big success with repeat audience" (in Divehi). Vaguthu இம் மூலத்தில் இருந்து 10 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160610083108/http://www.vaguthu.mv/evaguthu/maldives-film-industry/254622/. பார்த்த நாள்: 10 June 2016. 
 10. Naail, Ismail (10 April 2015). "Unlimited compliments for 'Emme Fahu Vindhaa Jehendhen'" (in Divehi). Vaguthu இம் மூலத்தில் இருந்து 10 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160610083616/http://www.vaguthu.mv/evaguthu/maldives-film-industry/255964/. பார்த்த நாள்: 10 June 2016. 
 11. Naail, Ismail (5 April 2015). "Pre-premiere Review: "Emme Fahu Vindhaa Jehendhen" A new benchmark to romantic films" (in Divehi). Vaguthu இம் மூலத்தில் இருந்து 10 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160610083407/http://www.vaguthu.mv/evaguthu/review/253783/. பார்த்த நாள்: 10 June 2016. 
 12. Nadheem, Ahmed (8 January 2016). "A new Film, A new Lover, A new Jumayyil" (in Divehi). Avas இம் மூலத்தில் இருந்து 9 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160609164655/https://www.avas.mv/12504. பார்த்த நாள்: 9 June 2016. 
 13. Nasheem, Ahmed (6 April 2016). "Vaashey Mashaa Ekee: Unlimited praise" (in Divehi). Avas இம் மூலத்தில் இருந்து 6 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160606080851/https://avas.mv/15516. பார்த்த நாள்: 6 June 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசாத்_குல்பா&oldid=3315577" இலிருந்து மீள்விக்கப்பட்டது