உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய நாடுகள் அவையின் அலுவல் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய நாடுகள் அவையின் (ஐ.நா) கூட்டங்களில் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஐ.நா அதன் அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் இந்த மொழிகளில் எழுதி வெளியிடுகிறது. [1] 1946 ஆம் ஆண்டில், ஆங்கிலம், பிரஞ்சு, உருசியம், எசுப்பானியம் , சீனம் ஆகிய ஐந்து மொழிகள் ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. [2] 1971-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையில் பயன்பாட்டிலிருந்த மரபுவழிச் சீன எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1973 ஆம் ஆண்டில், அரபு மொழியானது ஒரு கூடுதல் அதிகாரப்பூர்வ மொழியாகச் சேர்க்கப்படுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. [3] ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரப்பூர்வ மொழிகள்:

ஐ.நா. சாசனத்தின்படி இந்த ஆறு மொழிகளும் சமமான அதிகாரத்தைக் கொண்டுள்ளன. [10] இருப்பினும் ஆங்கிலம், பிரஞ்சு மொழிகள் பாரம்பரியமாக முன்னுரிமை அந்தஸ்தைப் பெற்றுள்ளன, மேலும் அவை ஐ.நா. செயலகத்தின் இரண்டு அதிகாரப்பூர்வ மற்றும் பணிமொழிகளாகும் (அல்லது நடைமுறை மொழி). [11] ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் பிற உயர்நிலை அதிகாரிகள், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகள் இரண்டிலும் குறைந்தது 'C1' (மொழிகளுக்கான பொது ஐரோப்பியக் குறிப்புச் சட்டகத்தின் / CEFRL படி, மேம்பட்ட சரள நிலை) அளவிற்காவது சரளமாகப் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாகும். இக்கால தகவல் யுகத்தில் ஆங்கில மொழியே உலகின் ஆதிக்க மொழியாக உருவெடுத்துள்ளதால், ஐக்கிய நாடுகள் அவை தனது ஆறு அலுவல் மொழிகளுக்கும் சமமான அந்தஸ்தை வழங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது.

கோபி அன்னான், பான் கி மூன் , அந்தோனியோ குத்தேரசு உள்ளிட்ட பல ஐ.நா. பொதுச்செயலாளர்கள், ஐ.நா.விற்குள் பன்மொழித்தன்மையை மேம்படுத்த உழைத்துள்ளனர். இந்தப் பணியின் விளைவாக, ஐ.நா. மொழிபெயர்ப்பு சேவைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, பன்மொழித்தன்மைக்கான ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கம், ஐ.நா. தாய்மொழி நாள், மற்றும் 2018 முதல், அதிகாரப்பூர்வ மொழிகளுடன் கூடுதலாக போர்த்துகீசியம், சுவாகிலி, இந்தி , உருது போன்ற அதிகாரப்பூர்வமற்ற மொழிகளில் மொழிபெயர்ப்புகளை வழங்கும் ஐ.நா. செய்தி இணையதளம் ஆகியவை உருவாகியுள்ளன. [12] ஐக்கிய நாடுகள் அவையால் பயன்படுத்தப்படும் இவையும் மற்றும் பல அதிகாரப்பூர்வமற்ற மொழிகளும் பெரும்பாலும் உலகளாவிய தெற்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. விதி 57, பொதுச் சபை அல்லது எந்தவொரு துணைக்குழுவும் அவையின் மொழிகளைத் தவிர வேறு எந்த மொழியையும் பயன்படுத்த அனுமதிக்கிறது. [13] 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஐக்கிய நாடுகள் அவையும் யுனெஸ்கோவும் மொழியியல் உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை. [14]

விளக்கம்

[தொகு]

இந்த மொழிகள் ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களில், குறிப்பாகப் பொதுச் சபை (அதன் செயல்முறை விதிகளின் 51-வது பிரிவு), பொருளாதார மற்றும் சமூக அவை , பாதுகாப்பு அவை (அதன் செயல்முறை விதிகளின் 41-வது பிரிவு) ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நாட்டின் ஒவ்வொரு பிரதிநிதியும் இந்த ஆறு மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பேசலாம் அல்லது ஏதேனும் ஒரு மொழியில் பேசிவிட்டு, ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றில் மொழிபெயர்ப்பை வழங்கலாம். ஐ.நா., ஐக்கிய நாடுகள் மொழிபெயர்ப்புச் சேவை வழியாக, எந்தவொரு அதிகாரப்பூர்வ மொழியிலிருந்தும் மற்ற ஐந்து அதிகாரப்பூர்வ மொழிகளுக்கும் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பை வழங்குகிறது.

அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் வெளியிடுவதற்கும் அந்த ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளே பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, அந்த ஆறு மொழிகளிலும் உள்ள மூலங்கள் சமமான அதிகாரத்தன்மை கொண்டவையாகும்.

பணி மொழிகள்

[தொகு]

ஐக்கிய நாடுகள் அவையின் பெரும்பாலான சபைகள், அதன் ஆறு மொழிகள் அனைத்தையும் அலுவல் மற்றும் பணி மொழிகளாகப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஐக்கிய நாடுகள் செயலகம் ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய இரண்டு பணி மொழிகளை மட்டுமே பயன்படுத்துகிறது. [15] இவை இரண்டும் சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ பணி மொழிகளாகும்.

ஆரம்பத்தில், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகள் மட்டுமே அலுவல் மொழிகளாக இருந்தன. மேலும் அதிகாரப்பூர்வ மொழிகளில் (அலுவல் அல்லது அலுவல் அல்லாத) உரைகள் அலுவல் மொழிகளில் மட்டுமே மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று நடைமுறை விதிகள் கூறின. ஒரு நாடு அதிகாரப்பூர்வமற்ற மொழியில் ஒரு உரையை நிகழ்த்தி மொழிபெயர்ப்பை வழங்க விரும்பினால், அந்த மொழிபெயர்ப்பு ஏதாவது ஒரு அலுவல் மொழியில் இருக்க வேண்டும். கூட்டத்தின் எழுத்துப்படிவங்கள் அலுவல் மொழிகளில் வழங்கப்பட வேண்டும், மேலும் அதிகாரப்பூர்வ அலுவல் அல்லாத மொழிகளில் மொழிபெயர்ப்புகள் கோரிக்கையின் பேரில் வழங்கப்படும். தீர்மானங்கள் மற்றும் கூட்டச் சுருக்கங்கள் அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். [16] மேலும் பல அதிகாரப்பூர்வ மொழிகள் அலுவல் மொழிகளாக மாறியபோதும் இந்த வேறுபாடு தொடர்ந்தது. [17] அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் அலுவல் மொழிகளாக மாறிய பிறகு இந்த வேறுபாடு நீக்கப்பட்டது.

மொழி அணுகல்

[தொகு]

ஐக்கிய நாடுகள் அவையில் பேசப்படும் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள், உலக மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவான, அதாவது 280 கோடி மக்களின் முதல் அல்லது இரண்டாம் மொழியாகும். இந்த ஆறு மொழிகளும் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளில் (120க்கும் மேற்பட்ட நாடுகள்) கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. [ சான்று தேவை ]

ஐக்கிய நாடுகள் அவையின் அலுவல் மொழிகள், எத்னோலாக், 2026

[தொகு]
மொழி[18] முதல் மொழியாக பேசுவோர் (L1) மில்லியன் எண்ணிக்கையில் இரண்டாம் மொழியாக பேசுவோர் (L2) மில்லியன் எண்ணிக்கையில் இரண்டையும் பேசுபவர்கள் (L1 + L2) பேசப்படும் நாடுகளின் எண்ணிக்கை ஐ.நாவில் நிலை ஐ.நா பொதுச் அவையில் நிலை ஐக்கிய நாடுகள் செயலகத்தில் நிலை முறையான மொழிநடை குடும்பம் கிளை ISO 639-3 குளோட்டோலாக் மொழியுலகம் முக்கிய ஒழுங்குமுறை அமைப்பு
ஆங்கிலம் 390 1,138 1,528 90 அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் பிரித்தானிய ஆங்கிலம் இந்திய-ஐரோப்பிய மொழிகள் செருமானிய மொழிகள் eng stan1293 52-ABA NA
பிரான்சியம் 74 238 312 50 அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் பெருநகர பிரெஞ்சு இந்திய-ஐரோப்பிய மொழிகள் உரோமானியம் fra stan1290 51-AAA பிரான்சிய அகாதமி
எசுப்பானியம் 498 74 572 22 அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் அதிகாரப்பூர்வ எசுப்பானியம் / காஸ்டிலியன் இந்திய-ஐரோப்பிய மொழி உரோமானியம் spa stan1288 51-AAA-b அரச எசுபானிய அகாதமி
உருசியம் 145 65 210 5 அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் அதிகாரப்பூர்வம் மத்திய உருசியம் இந்திய-ஐரோப்பிய மொழி சிலாவிக் rus russ1263 53-AAA-e உருசிய மொழி நிறுவனம்
அரபு 20 335 355 23 அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் அதிகாரப்பூர்வம் நவீனத் தரநிலை அரபு ஆபிரிக்க-ஆசிய செமித்திக் ara / arz stan1318 / arab1395 12-AAC அரபு மொழி அகாதமி
சீனம் 990 194 1,184 3 அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் அதிகாரப்பூர்வ மற்றும் அலுவல் அதிகாரப்பூர்வம் மாண்டரின் சீனம் சீன-திபெத்தியம் Sinitic cnm / zho mand1415 79-AAA-b கல்வி அமைச்சு
மொத்தம் 2,117 2,088 4,204

வரலாறு

[தொகு]

1920 ஆம் ஆண்டில், முதலாம் உலகப் போரின் கொடூரங்களுக்குப் பிறகு, தகவல் தொடர்பை வளர்ப்பதற்கும் உலகளாவிய இராஜதந்திரத்தைத் ஊக்குவிப்பதற்கும் பன்னாட்டு அலுவல் மொழிகள் என்ற கருத்தை முன்னெடுத்த முதல் சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உலக நாடுகள் சங்கம் இருந்தது. உலக நாடுகளின் சங்கம் ஆங்கிலம், பிரஞ்சு, எசுபானியம் ஆகியவற்றை ஆட்சி மொழிகளாகத் தேர்ந்தெடுத்தது. இவற்றில் ஆங்கிலம், பிரஞ்சு ஆகியவை பணி மொழிகளாக இருந்தன. பிரித்தானியப் பேரரசு மற்றும் பிரெஞ்சு பேரரசின் உலகளாவிய பரவல் காரணமாக ஆங்கிலம், பிரஞ்சு ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன. எசுப்பானிய அமெரிக்கா மற்றும் முன்னாள் எசுப்பானியப் பேரரசில் அதிக எண்ணிக்கையிலான தாய்மொழி பேசுபவர்கள் இருந்ததால் எசுப்பானியம் தேர்ந்தெடுக்கப்பட்டது. சங்கத்தின் கூடுதல் மொழியாக எஸ்பெராண்டோவை தேர்ந்தெடுக்க ஒரு முயற்சி மேற்கொள்ளபட்டது, ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. [19]

1940-களில், இரண்டாம் உலகப் போரின் முடிவு நெருங்கிக்கொண்டிருந்தபோது, நேச நாடுகள் இலண்டன் பிரகடனம், ஆர்கேடியா மாநாடு, கெய்ரோ மாநாடு, தெஹ்ரான் மாநாடு, யால்ட்டா மாநாடு , போட்ஸ்டாம் மாநாடு உள்ளிட்ட பல மாநாடுகளை நடத்தின. போருக்குப் பிந்தைய உலகத்தை ஒருங்கிணைத்துத் திட்டமிடுவதே இந்த மாநாடுகளின் நோக்கமாக இருந்தது. போருக்குப் பிறகு உலக அமைதியை எவ்வாறு மேம்படுத்துவது, எஸ்பரான்டோ போன்ற ஒரு பன்னாட்டுத் துணை மொழி அல்லது ஏற்கனவே உள்ள மொழிக் குழுக்கள் வாயிலாக உலகளாவிய தகவல்தொடர்பை எவ்வாறு எளிதாக்குவது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் குடியேற்ற விலக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பனவும் இதில் அடங்கும். மேலும், இந்த மாநாடுகள் பன்னாட்டுச் சங்கத்தின் வாரிசு அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்படது.

1945 இல் இது சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஐ.நா. சாசனத்தில் அடிப்படை ஆவணமாகிய சாசனத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது; அந்த சாசனம் அதிகாரப்பூர்வ மொழிகளை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. அந்த சாசனம் ஆரம்பத்தில் ஐந்து மொழிகளில் (ஆங்கிலம், பிரஞ்சு, மாண்டரின், உருசியம், எசுப்பானியம்) இயற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை இந்த ஐந்து மொழிகளையும் தேர்ந்தெடுத்தற்கு காரணம், அவை உலக நாடுகள் சங்கத்தால் பயன்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், பிரித்தானியப் பேரரசு, அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் , சீனக் குடியரசு ஆகிய நான்கு பெரிய நாடுகள் மற்றும் பிரான்சு மற்றும் பிரெஞ்சு காலனிகளின் மொழியாக இருந்த பிரஞ்சு மொழி உட்பட, முக்கிய நேச நாடுகளின் நடைமுறை அதிகாரப்பூர்வ மொழிகளாகவும் இருந்தன. இந்த நாடுகள்: இங்கிலாந்து, அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், சீனக் குடியரசு, பிரான்ஸ், ஐ.நா. பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களாக மாறின. அதிகாரப்பூர்வமற்ற முறையில், ஐ.நா. தனது செயல்பாடுகளை ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் நடத்தியது; இருப்பினும், அந்த சாசனம் ( பிரிவு 111 இல்) ஐந்து மொழிகளும் சமமான அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியது. [20] [21]

1 பிப்ரவரி 1946 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் அமர்வு, " அனைத்துலக நீதிமன்றத்தைத் தவிர, ஐக்கிய நாடுகளின் அனைத்து உறுப்புகளுக்கும்" பொருந்தும் என்று கூறப்படும் மொழிகள் தொடர்பான நடைமுறை விதிகளை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் ஐந்து (5) அதிகாரப்பூர்வ மொழிகளையும் இரண்டு (2) பணி மொழிகளையும் (ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு) அது முறையாக நிருணயித்தது. [22] 24 ஜூன் 1946 அன்று, பாதுகாப்பு அவையும் ஐந்து அதிகாரப்பூர்வ மொழிகளையும் இரண்டு பணி மொழிகளையும் நிருணயித்தது. [3]

அடுத்த ஆண்டு, பொதுச் சபையின் இரண்டாவது அமர்வு நிரந்தர நடைமுறை விதிகளை, தீர்மானம் 173 (II) ஐ ஏற்றுக்கொண்டது. அந்த விதிகளின் மொழி தொடர்பான பகுதி, 1946 விதிகளை நெருக்கமாகப் பெரிதும் ஒத்திருந்தது. இருப்பினும், 1947-ஆம் ஆண்டின் விதிகள் ஐக்கிய நாடுகள் அவையின் பிற உறுப்புகளுக்குப் பொருந்தும் என்று கருதாமல், பொதுச் சபைக்கு மட்டுமே பொருந்தும் வகையில் அமைந்திருந்தன. [20] இதற்கிடையில், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளுடன் கூடுதலாக எசுப்பானிய மொழியை மூன்றாவது பணி மொழியாகச் சேர்ப்பதற்கான ஒரு முன்மொழிவு செயல்பாட்டில் இருந்தது.

1948 திசம்பர் 11 அன்று, பொதுச் சபை எசுப்பானிய மொழியை ஒரு பணி மொழியாகச் சேர்த்தது. [20] [23]

21 திசம்பர் 1968 அன்று, பொதுச் சபை உருசிய மொழியை பணி மொழியாகச் சேர்த்தது. [24] [25]

22 சனவரி 1969 அன்று, பாதுகாப்பு அவை எசுப்பானிய மற்றும் உருசிய மொழிகளை பணி மொழிகளாகச் சேர்த்தது. [3]

1973 திசம்பர் 18 அன்று, பொதுச் சபை மாண்டரின் மொழியை பணி மொழியாக ஆக்கியது. [26] அவர்கள் அரபு மொழியை பொதுச் சபையின் அலுவல் மொழியாகவும் பணி மொழியாகவும் சேர்த்தனர். இதனால் ஆறு அலுவல் மொழிகளும் பணி மொழிகளாக மாறின. அரபு மொழி "பொதுச் சபை மற்றும் அதன் முக்கியக் குழுக்களின்" அலுவல் மற்றும் பணி மொழியாக ஆக்கப்பட்டது. அதேசமயம் மற்ற ஐந்து மொழிகளும் (முக்கியக் குழுக்களில் மட்டுமல்லாமல்) அனைத்து பொதுச் சபைக் குழுக்கள் மற்றும் துணைக்குழுக்களிலும் அந்தஸ்து பெற்றிருந்தன. ஐ.நா.வின் அரபு உறுப்பு நாடுகள், இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செலவுகளை மூன்று ஆண்டுகளுக்கு ஏற்க ஒப்புக்கொண்டன. [27] [28] [29] 1980 திசம்பர் 17 அன்று, பொதுச் சபை இந்த இறுதி வேறுபாட்டை நீக்கி, 1982 ஜனவரி 1 முதல் அரபு மொழியை அதன் அனைத்துக் குழுக்கள் மற்றும் துணைக்குழுக்களின் அலுவல் மற்றும் பணி மொழியாக ஆக்கியது. அதே நேரத்தில், பொதுச் சபை, பாதுகாப்புக் குழுவை அதன் அலுவல் மற்றும் பணி மொழிகளில் அரபு மொழியையும், பொருளாதார மற்றும் சமூக சபையை அதன் அலுவல் மொழிகளில் அரபு மொழியையும் 1983 சனவரி 1-க்குள் சேர்க்குமாறு கோரியது. [30]

1974 சனவரி 17 அன்று, பாதுகாப்பு கவுன்சில் சீன மொழியை ஒரு பணி மொழியாகச் சேர்த்தது. [3]

21 திசம்பர் 1982 அன்று, பாதுகாப்பு கவுன்சில் அரபு மொழியை அதிகாரப்பூர்வ மற்றும் பணி மொழியாகச் சேர்த்தது. [3] [31]

ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபையில், 1992 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள் (அரபு, ஆங்கிலம், பிரஞ்சு, மாண்டரின், உருசியம், எசுப்பானியம்) இருந்தன, அவற்றில் மூன்று (ஆங்கிலம், பிரஞ்சு, எசுபானியம்) பணி மொழிகளாக இருந்தன. [32] அரபு மொழி 15 ஏப்ரல் 1982 அன்று அதிகாரப்பூர்வ மொழியாக சேர்க்கப்பட்டது [3] பின்னர், அரபு, மாண்டரின் , உருசியம் ஆகியவை பொருளாதார மற்றும் சமூக மன்றத்தில் பணி மொழிகளாக சேர்க்கப்பட்டன. [33]

2001 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவை ஆங்கிலத்தை மிகவும் அதிகமாகச் சார்ந்திருப்பதாகவும், மற்ற ஐந்து அதிகாரப்பூர்வ மொழிகளைப் போதுமான அளவு பயன்படுத்தவில்லை என்றும் விமர்சனங்களை எதிர்கொண்டது. மேலும், எசுபானியம் பேசும் உறுப்பு நாடுகள் இதை முறையாகப் பொதுச்செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்தன. கூடுதலாக, அதிகாரப்பூர்வ மொழிகளைச் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ள அல்லது 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசுபவர்களைக் கொண்ட மொழிகளுக்காக, அதிகாரப்பூர்வ மொழிகளைச் சேர்ப்பது அல்லது பகுதி-அதிகாரப்பூர்வ மொழிகளின் குழுவை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க ஒரு இயக்கம் இருந்தது. இது நடக்கவில்லை. தற்போதைய வரவுசெலவுத் திட்டக் கட்டுப்பாடுகளுக்குள் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளுக்கும் முழுமையான சமநிலையை அடைவது சாத்தியமில்லை என்று பொதுச்செயலாளர் கோபி அன்னான் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்தார். இருப்பினும் அவர் மொழியியல் சமநிலையை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தற்போதுள்ள 6 அதிகாரப்பூர்வ மொழிகளுக்கு இடையில் சமநிலையை அதிகரிக்க பணியாற்றினார். [34]

பன்மொழி பயன்பாடு குறித்த பொதுச்செயலாளரின் மிக அண்மைய அறிக்கை, 2010 அக்டோபர் 4 அன்று வெளியிடப்பட்டது. [35] இதற்குப் பதிலளிக்கும் விதமாக, 19 ஜூலை 2011 அன்று, பொதுச் சபை பன்மொழித்தன்மை குறித்த தீர்மானம் எண் A/RES/65/311-ஐ ஏற்றுக்கொண்டது. இது, ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளுக்கும் சமமான சாதகமான பணிச்சூழல்களும் வளங்களும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு பொதுச்செயலாளரை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியது. ஐ.நா வலைத்தளத்தின் பன்மொழி மேம்பாடு எதிர்பார்த்ததை விட மிக மெதுவான விகிதத்தில் முன்னேறியுள்ளது என்பதை அந்தத் தீர்மானம் கவலையுடன் குறிப்பிட்டது. [36] சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் பன்மொழித்தன்மையில் கவனம் செலுத்துவதற்குமான இந்த முயற்சி 2010-கள் முழுவதும் தொடர்ந்தது. இதன் விளைவாக, ஐக்கிய நாடுகள் அவையின் செய்தி மற்றும் ஊடக வலைத்தளம் ( https://news.un.org/en/ ) 2018-இல் அதன் உள்ளடக்கத்தை இந்தி, போர்த்துக்கேயம் , வாகிலி மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடத் தொடங்கியது..

ஐ.நா.வின் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வ ஐ.நா. மொழி தினங்கள் இருந்தாலும், சில ஐ.நா. அமைப்புகள் மற்ற மொழி தினங்களையும் கொண்டாடுகின்றன. 2019 ஆம் ஆண்டில், உலக போர்த்துகீசிய மொழி தினம் யுனெஸ்கோவால் நிறுவப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் மே 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. [37] இது போர்த்துகீசிய மொழி பேசும் நாடுகளின் சமூகத்தின் (சி.பி.எல்.சி) பண்பாட்டு நாளின் தேதியாகும், இது 2005 இல் சி.பி.எல்.சி இன் பண்பாட்டு அமைச்சர்களின் முதல் கூட்டத்தைக் குறிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. [38] போர்த்துகீசிய மொழி பேசும் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த நாளில் உரையாற்றினார். 2021 ஆம் ஆண்டில், ஐ.நா. தலைமையகத்தில் உள்ள ஜெர்மன் மொழிபெயர்ப்புப் பிரிவு (ஜி.டி.எஸ்), 1975 இல் ஜெர்மன் மொழிபெயர்ப்புச் சேவை தனது செயல்பாடுகளைத் தொடங்கிய நாளுடன் ஒத்துப்போகும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமற்ற "ஐ.நா.வில் ஜெர்மன் மொழி தினம்" கொண்டாடத் தொடங்கியது. [39] இது ஒரு அதிகாரப்பூர்வ யுனெஸ்கோ உலக மொழி தினம் அல்ல, மாறாக ஜி.டி.எஸ் க்கு நிதியளிக்கும் ஐ.நா.வில் உள்ள ஜெர்மன் மொழி பேசும் தூதரகங்களால் நடத்தப்படுகிறது. ஜூலை 2022 இல், யுனெஸ்கோ உலக சுவாஹிலி மொழி தினத்தை நிறுவியது, இது 1954 இல் டாங்கானிகா ஆப்பிரிக்க தேசிய ஒன்றியத்திற்கான ஒருங்கிணைப்பு மொழியாக கிஸ்வாஹிலி ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், 2000 ஆம் ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்க சமூகம் மீண்டும் நிறுவப்பட்டதையும் கௌரவிக்கும் வகையில் ஜூலை 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது [40]

2022 ஜூனில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, கோஃபி அன்னான் மற்றும் பான் கி மூன் ஆகியோருக்கு முன்மொழியப்பட்ட அரை-அதிகாரப்பூர்வ கொள்கைகளைப் போலவே, ஐ.நா. அமைப்புகள் முக்கியமான தகவல்தொடர்புகளையும் செய்திகளையும் அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற மொழிகளிலும் பரப்ப ஊக்குவிக்கும் பன்மொழித்தன்மை குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இந்த மொழிகளில் பெங்காலி, இந்தி, பாரசீகம், போர்த்துகீசியம், சுவாகிலி , உருது ஆகியவை அடங்கும். மேலும் அதிகாரப்பூர்வமற்ற மொழிகளையும் பயன்படுத்துவதற்கான ஐ.நா.வின் முயற்சிகளை பொதுச் சபை அங்கீகரிக்கிறது. [41]

அதிகாரப்பூர்வ மொழிகளின் காலவரிசை

[தொகு]
German languageUrdu languageHindi languageSwahili languagePortuguese languageModern Standard ArabicMandarin Chinese languageRussian languageSpanish languageFrench languageEnglish language

ஐ.நா செய்திகள்

[தொகு]

மற்றொரு அதிகாரப்பூர்வ மொழியைச் சேர்ப்பதற்கான முறையான முன்மொழிவுகள் பொதுச் சபையின் முன் இல்லை என்றாலும், [42] உலகின் அதிக மக்கள்தொகைக்கு இடமளிக்கும் வகையில் ஒரு புதிய அதிகாரப்பூர்வ மொழியைச் சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை பல்வேறு தனிமனிதர்களும் நாடுகளும் முறைசாரா முறையில் எழுப்பியுள்ளனர். அரபு மொழி அதிகாரப்பூர்வ மொழியாக மாறுவதற்கு அரபு நாடுகள் ஐ.நா. மொழிபெயர்ப்பின் முதல் சில ஆண்டுகளுக்குப் பணம் செலுத்தியதைப் போலவே, ஐ.நா. மொழிபெயர்ப்புச் செலவுகளை ஏற்பதற்கு முன்பு, உறுப்பு நாடுகள் (அதாவது போர்த்துகீசுக்கு பிரேசில், இந்திக்கு இந்தியா, சுவாகிலிக்கு தன்சானியா , கென்யா போன்றவை) முதல் சில ஆண்டுகளுக்கு மொழிபெயர்ப்புக்குப் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஐக்கிய நாடுகள் அவையின் ஊடகப் பிரிவான ஐ.நா. செய்திகள் ( https://news.un.org/ ), [43] போர்த்துகீசியம், சுவாகிலி, இந்தி மொழிகளில் மொழிபெயர்ப்புகளைச் சேர்த்தது, மேலும் 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி ஏற்கனவே உள்ள 6 அதிகாரப்பூர்வ மொழிகளுடன் கூடுதலாக உருது மொழியிலும் மொழிபெயர்ப்புகளைச் சேர்த்தது. [44] துருக்கியம், பாரசீகம் , எஸ்பெராண்டோ போன்ற பிற மொழிகள் கடந்த காலத்தில் முறையாகவோ அல்லது முறைசாராமலோ முன்மொழியப்பட்டிருந்தபோதிலும், அவை அலுவல் மொழிகளாகச் சேர்க்கப்படவில்லை. உலகளாவிய ஐ.நா. செய்தி தளத்தில் அவற்றின் மொழிபெயர்ப்புகள் கிடைப்பதாலும், யுனெஸ்கோவால் 'உலகப் போர்த்துகீசிய மொழி நாள்' மற்றும் 'உலகச் சுவாகிலி மொழி நாள்' ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளதாலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளுக்குள் இம்மொழிகளின் பயன்பாடு பொதுவாக அதிகரித்துள்ளதாலும், பின்வரும் மொழிகள் ஐ.நா-வின் அலுவல் மொழிகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியமான அல்லது எதிர்காலத் தேர்வுகளாகக் கருதப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் அவையின் சாத்தியமான கூடுதல் அதிகாரப்பூர்வ மொழிகள், எத்னோலாக், 2025

[தொகு]
மொழி[18] முதல் மொழியாக பேசுவோர் (L1) மில்லியன் எண்ணிக்கையில் மொத்தப் பேசுவோர் எண்ணிக்கை (மில்லியன்களில்) பேசப்படும் நாடுகளின் எண்ணிக்கை ஐ.நா. மொழி நிலை ஐ.நா. செய்தி இணையதள மொழிபெயர்ப்பு உலக மொழி தினம் கொண்டாடப்படுவது முறையான மொழிநடை மொழிக் குடும்பம் கிளை ISO 639-3 குளோட்டோலாக் மொழியுலகம் முக்கிய ஒழுங்குமுறை அமைப்பு பிற ஒழுங்குமுறை அமைப்புகள்
போர்த்துக்கேயம் 250 17 267 10 அலுவல்மொழி அல்ல Yes Yes போர்த்துக்கேயம் இந்திய-ஐரோப்பியம் உரோமானியம் por port1283 51-AAA-a பிரேசிலிய இலக்கிய அகாடமி லிஸ்பன் அகாடமி, அகோலானா அகாடமி
ஜெர்மன் 76 58 134 7 அலுவல்மொழி அல்ல No அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஜெர்மன் இந்திய-ஐரோப்பியம் செருமானிம் deu stan1295 52-ACB–dl ஜெர்மானிய எழுத்துமுறை மன்றம்
Swahili 5.3 92 99 7 அலுவல்மொழி அல்ல Yes Yes செந்தர சுவாஹிலி (கியுங்குஜா)[45] நைகர்-கொங்கோ பண்டு swa swah1254 99-AUS-m BAKITA CHAKITA, EAKC
இந்தி 345 264 610 3 அலுவல்மொழி அல்ல Yes No இந்தி (हिन्दी) in தேவநாகரி இந்திய-ஐரோப்பிய மொழி இந்திய-ஈரானிய மொழி hin hind1269 59-AAF-qf மத்திய இந்தி இயக்குநரகம்
உருது 78 168 246 2 அலுவல்மொழி அல்ல Yes No Urdu (اُردُو) in நஸ்தலீகு இந்திய-ஐரோப்பிய மொழி இந்திய-ஈரானிய மொழி urd urdu1245 59-AAF-q தேசிய மொழி மேம்பாடு உருதுக்கான தேசிய மன்றம்
வங்கமொழி 242 43 284 2 அலுவல்மொழி அல்ல No No பங்காளா (বাংলা) நாகிரியில் இந்திய-ஐரோப்பிய மொழி இந்திய-ஈரானிய மொழி ben beng1280 59-AAF-u பங்காளா அகாடமி பங்காளா அகாடமி
இந்தோனேசியம் 75 177 252 2 அலுவல்மொழி அல்ல No No பாசா இந்தோனேசியா / பாக்கு ஆஸ்திரோனீசியன் மலாய-பொலினீசிய மொழி ind indo1316 33-AFA-ac மொழி மேம்பாட்டு முகமை
துருக்கியம் 84 6 90 2 அலுவல்மொழி அல்ல No No Turkish (Türkçe) துருக்கி Oghuz tur nucl1301 44-AAB-a துருக்கிய மொழிச் சங்கம்
பாரசீக்கம் 91 35 127 3 அலுவல்மொழி அல்ல No No ஈரானிய பாரசீகம் (ஃபார்சி) இந்திய-ஐரோப்பிய மொழி இந்திய-ஈரானிய மொழி fas / pes fars1254 58-AAC-c பாரசீக மொழி அகாதமி

முன்மொழியப்பட்ட மொழிகளில் பெரும்பாலானவை உலக மொழிகளாகும். உலகளாவிய மொழி அமைப்பு கோட்பாட்டின்படி, அவை தத்தம் பிராந்தியங்களில் தற்போதைய அல்லது முன்னாள் பொது மொழிகளாக இருந்து, பிராந்தியத்திற்கு அப்பாற்பட்டவையாகவோ அல்லது மையத்திற்கு அப்பாற்பட்டவையாகவோ இருக்கின்றன.

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Union Nation Official Languages". Archived from the original on 18 May 2018. Retrieved 9 May 2018.
  2. Universal Declaration of Human Rights: translation into Chinese. Title Universal Declaration of Human Rights: translation into Chinese {...} Language(s) 中文 (Chinese){...}Alternate names: Beifang Fangyan, Guanhua, Guoyu, Hanyu, Huayu, Mandarin, Northern Chinese, Putonghua, Standard Chinese, Zhongguohua, Zhongwen
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "What are the official languages of the United Nations? - Ask DAG!". ask.un.org. Retrieved 2026-02-03.
  4. "Spelling (United Nations Editorial Manual Online)". Department for General Assembly and Conference Management. Retrieved 29 July 2023. The Concise Oxford English Dictionary, twelfth edition, is the current authority for spelling in the United Nations.
  5. "Note on the Introduction of Russian as an Official Language of the Executive Committee EC/SC.2/80". United Nations. Archived from the original on 26 February 2019. Retrieved 2025-05-16.
  6. "UN Chinese Language Day". Retrieved 16 May 2025.
  7. "ISO 639-3". SIL Global. Retrieved 24 May 2025.
  8. "UN to drop traditional Chinese characters: report". Pinyin News. 24 March 2006. Retrieved 24 May 2025.
  9. "World Arabic Language Day". United Nations. Retrieved 24 May 2025.
  10. "Official languages of the United Nations". Retrieved 23 May 2025.
  11. "Official languages of the United Nations". Retrieved 23 May 2025.
  12. "Minimum standards of multilingualism for United Nations websites".
  13. "Official languages of the United Nations". Retrieved 23 May 2025.
  14. "The Universal Declaration of Linguistic Rights – twenty years on".
  15. "Multilingualism". United Nations. Archived from the original on 26 February 2019. Retrieved 2019-02-25.
  16. "Rules of procedure concerning languages : resolution / adopted by the General Assembly". United Nations Digital Library. 1946-02-01. Retrieved 2026-02-01.
  17. "Rules of procedure of the General Assembly, embodying amendments and additions adopted by the General Assembly up to 31 December 1969". United Nations Digital Library. Aug 1970. Retrieved 2026-02-04.
  18. 18.0 18.1 "What are the top 200 most spoken languages?". Ethnologue. 2024. Retrieved 2024-08-15.
  19. "League of Nations". United Nations Secretary-General. 2010-10-04. UN Doc ID A/65/488. Archived from the original on 16 April 2024. Retrieved 2024-07-27.
  20. 20.0 20.1 20.2 "Preparation of Multilingual Treaties: Memorandum by the Secretariat" (PDF). 1966. p. 4. Archived from the original (PDF) on 17 October 2013. Retrieved 2013-10-21.
  21. [1] பரணிடப்பட்டது 9 சனவரி 2015 at the வந்தவழி இயந்திரம்
  22. General Assembly Resolution 2 (I) பரணிடப்பட்டது 9 சனவரி 2015 at the வந்தவழி இயந்திரம் Rules of Procedure Concerning Languages, 1 February 1946.
  23. Resolution 262 (III) பரணிடப்பட்டது 9 சனவரி 2015 at the வந்தவழி இயந்திரம்
  24. Robert Reford (1968-12-18). "Russian to be included as UN working language". Ottawa Citizen. Archived from the original on 30 January 2016. Retrieved 2010-01-25.
  25. Resolution 2479 (XXIII) பரணிடப்பட்டது 13 சூலை 2015 at the வந்தவழி இயந்திரம் Inclusion of Russian among the working languages of the General Assembly (amendment to rule 51 of the rules of procedure of the General Assembly) and question of including Russian and Spanish among the working languages of the Security Council (21 December 1968)
  26. [2]பரணிடப்பட்டது மார்ச் 30, 2012 at the வந்தவழி இயந்திரம்
  27. Resolution 3189 (XXVIII) பரணிடப்பட்டது 13 சூலை 2015 at the வந்தவழி இயந்திரம் Inclusion of Mandarin among the working languages of the General Assembly and the Security Council (18 December 1973)
  28. Resolution 3190 (XXVIII) பரணிடப்பட்டது 13 சூலை 2015 at the வந்தவழி இயந்திரம் Inclusion of Arabic among the official and the working languages of the General Assembly and its Main Committees (18 December 1973)
  29. Resolution 3191 (XXVIII) பரணிடப்பட்டது 13 சூலை 2015 at the வந்தவழி இயந்திரம் Inclusion of Mandarin among the working languages of the General Assembly, its committees and its subcommittees and inclusion of Arabic among the official and the working languages of the General Assembly and its Main Committees: amendments to rules 51 to 59 of the rules of procedure of the Assembly
  30. Resolution 35/219 பரணிடப்பட்டது 4 மார்ச் 2016 at the வந்தவழி இயந்திரம் Use of Arabic in the subsidiary organs of the General Assembly, in the Security Council and in the Economic and Social Council: amendments to rules 51, 52, 54 and 56 of the rules of procedure of the Assembly (17 December 1980).
  31. Provisional Rules of Procedure of the Security Council பரணிடப்பட்டது 10 மே 2012 at the வந்தவழி இயந்திரம் Rules 41 to 47.
  32. Rules of Procedure of the Economic and Social Council பரணிடப்பட்டது 31 மார்ச் 2012 at the வந்தவழி இயந்திரம் rules 32 to 35.
  33. [3] பரணிடப்பட்டது 14 பெப்ரவரி 2015 at the வந்தவழி இயந்திரம்
  34. "Letter dated 18 June 2001" (PDF). 2001-06-18. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 2010-01-26.
  35. "Multilingualism". United Nations Secretary-General. 2010-10-04. UN Doc ID A/65/488. Archived from the original on 27 February 2020. Retrieved 2011-07-26.
  36. UN Department of Public Information(2011-07-19). "Adopting Resolution on Multilingualism, General Assembly Emphasises Importance of Equality Among Six Official United Nations Languages". செய்திக் குறிப்பு.
  37. "World Portuguese Language Day". unesco.org (in ஆங்கிலம்). Archived from the original on 7 May 2020. Retrieved 2020-05-05.
  38. "XIV REUNIÃO ORDINÁRIA DO CONSELHO DE MINISTROS DA COMUNIDADE DOS PAÍSES DE LÍNGUA PORTUGUESA" (PDF). www.cplp.org. Archived from the original (PDF) on 2021-05-05. Retrieved 2026-03-14.
  39. Nations, United. "Let's celebrate the German language with DGACM!". United Nations (in ஆங்கிலம்). Retrieved 2026-03-14.
  40. "World Kiswahili Language Day". unesco.org (in ஆங்கிலம்). Archived from the original on 7 July 2022. Retrieved 2022-08-09. Alt URL
  41. [4] பரணிடப்பட்டது 14 பெப்ரவரி 2015 at the வந்தவழி இயந்திரம்
  42. "Department for General Assembly and Conference Management: Frequently Asked Questions (FAQs)". United Nations. Archived from the original on 26 February 2019. Retrieved 2019-02-25.
  43. "Front | UN News". Archived from the original on 8 June 2018. Retrieved 13 June 2018.
  44. "Top UN official stresses need for Internet multilingualism to bridge digital divide". 14 December 2009. Archived from the original on 21 August 2020. Retrieved 13 June 2018.
  45. "Swahili dialects".