ஐக்கிய இராச்சியத்தில் தொலைபேசி எண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய இராச்சியம் தொலைபேசி எண்கள்
அமைவிடம்
நாடுஐக்கிய இராச்சியம்
கண்டம்ஐரோப்பா
அணுக்க குறியெண்கள்
நாட்டை அழைக்க+44
பன்னாட்டு அழைப்பு முன்னொட்டு00
வெளியூர் முன்னொட்டு0
அழைப்பு திட்டம்
கட்டுப்பாடு அமைப்புஓஃப்காம்
வகைதிறந்தநிலை
NSN நீளம்7, 9, 10[notes 1]
வழமையான வடிவம்பல்வேறு, உரையைக் காண்க
எண்வழங்கு திட்டம்தேசிய தொலைபேசி எண்வழங்குத் திட்டம்
இற்றைப்படுத்திய நாள்20 திசம்பர் 2012

ஐக்கிய இராச்சியத்தில் தொலைபேசி எண்கள் அல்லது தேசிய தொலைபேசி எண்வழங்குத் திட்டம் (National Telephone Numbering Plan) என்பது ஐக்கிய இராச்சியத்தில் மற்றும் குடியேற்றப் பகுதிகளில் தொலைபேசி எண்களை வழங்குவதற்கான முறைமையாகும். இவ்வழங்கலை தொலைத்தொடர்புக்கு பொறுப்பேற்கும் ஐக்கிய இராச்சிய அரசின் தொடர்பியல் அலுவலகம் (ஓஃப்காம்) கட்டுப்படுத்தி மேலாண்மை செய்கிறது.

தொலைபேசி வழங்கல் திட்டம்[தொகு]

முன்னொட்டுக்கள்[தொகு]

01 மற்றும் 02 - புவியியல்சார் எண்கள்[தொகு]

01 அல்லது 02இல் துவங்கும் எண்கள் பொதுவான வீட்டு, அலுவலக தொலைபேசி எண்களாகும். இந்த எண்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும்:

 • நாட்டின் குறிப்பிட்ட நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்ட பரப்புக் குறியீடு முதலில் வருவதாகும். காட்டாக, 020 பரப்புக் குறியீடு இலண்டனுக்கானது, 0121 குறியீடு பர்மிங்ஹாமிற்கானது. ஒரே பரப்புக் குறியீடு உள்ள இரு தொலைபேசிகளுக்குள் அழைக்கும்போது இந்தப் பகுதியை உள்ளிடுவதும் இடாததும் விருப்பத் தேர்வாகும். இவை சிலநேரங்களில் அடைப்புக் குறிகளுக்குள் தரப்படுகின்றன. பரப்புக் குறியீடு இரண்டு முதல் ஐந்து இலக்கங்கள் வரை இருக்கலாம்.
 • வழமையாக முதல் குறியீட்டிலிருந்து ஒரு வெற்றிடம் மூலம் பிரிக்கப்பட்டிருக்கும், இந்த எண்களின் இரண்டாம் பகுதி 'உள்ளூர் எண்' அல்லது 'சந்தாதாரர் எண்' எனப்படும். இது வழக்கமாக 6, 7 அல்லது 8 இலக்கங்கள் நீளமாக இருக்கும்; சில நேரங்களில் 4 அல்லது 5 இலக்கங்கள் நீளமே இருக்கலாம். இது ஒரு பரப்புக் குறியீட்டினுள் தனித்தன்மை பெற்றதாக இருக்கும். காட்டாக, மான்செஸ்டரில் ஒருவருக்கு மட்டுமே 9460018 என்ற எண் உரித்தாக இருக்கும்.

எடுத்துக்காட்டுக்கள்: (020) 7946 0018, (0117) 504 1102, (01632) 402881, (015394) 52749.

03 - ஐக்கிய இராச்சியம் முழுவதற்குமான எண்கள்[தொகு]

03 எனத் துவங்கும் எண்கள், நாட்டின் எந்தவொரு குறிப்பிட்டப் பகுதிக்கும் இணைக்கபட வேண்டியிராத வணிக, அரசு மற்றும் பிற அமைப்புக்களுக்கானவை ஆகும். இவற்றிற்கான கட்டணம் 01, 02 எண்களுள்ள நிலைத்த அல்லது நகர்பேசிகளுக்கான கட்டணம் போன்றே ஒரே அளவில் இருக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

05 - வணிக மற்றும் இணைய தொலைபேசிகள்[தொகு]

 • 055 எண்கள் தங்களுக்கென தனிப்பட்ட தொலைபேசி பிணையங்கள் வைத்திருப்பதால் மிகுந்த எண்கள் தேவைப்படும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
 • 056 எண்கள் இணைய தொலைபேசி சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இணைய தொலைபேசிகள் மற்றவகை எண்களையும் கொண்டிருக்கலாம்.
 • 0500 எண்கள் நிலைத்த தொலைபேசிகளிடமிருந்து அழைக்க கட்டணம் தேவையில்லாத சேவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

07 - நகர்பேசி மற்றும் தனிநபர் எண்கள்[தொகு]

இந்த எண்கள் நகர்பேசிகளுக்கும் அதேபோன்ற பிற நகர்சேவைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன:

 • 070 எண்கள் 'தனிநபர் எண்கள்' எனப்படும்; தனிநபர்களும் வணிக நிறுவனத்தினரும் பல தொலைபேசிகளுக்கு மாறும்போதும் அழைப்புக்களை குறிப்பிட்ட தொலைபேசிக்கு செலுத்தக்கூடிய வசதி உள்ளவை. இவற்றிற்கான அழைப்புக் கட்டணம் மிக கூடுதலாக இருக்கும்.
 • 076 எண்கள் தொலை அழைப்பான்களுக்கானவை (07624 மட்டும் விலக்காக நகர்பேசிகளுக்கு)
 • 07 இல் துவங்கும் அனைத்து பிற எண்களும் நகர்பேசிகளுக்கானவை.

08 - சிறப்புக் கட்டணம்[தொகு]

இந்தவகை எண்கள் வழக்கமான தொலைபேசி கட்டணங்களைவிட வெவ்வேறு வீதங்களில் கட்டணத்தைக் கொண்டிருக்கும்.

 • 0800 மற்றும் 0808 எண்கள் நிலைத்த தொலைபேசிகளிடமிருந்து கட்டணமின்றி அழைக்கக் கூடியவை. சில குறிப்பிட்ட ஈகை மற்றும் உதவி எண்களைத் தவிர, நகர்பேசி அழைப்புக்களுக்கு கட்டண விலக்கில்லை.
 • 084 இல் துவங்கும் எண்கள் குறைந்த வீத சிறப்பு எண்களாகும்; நிலைத்த பேசிகளிடமிருந்து நிமிடத்திற்கு 5 முதல் 15 பென்சு வரை கட்டணமிருக்கலாம்
 • 087இல் துவங்கும் எண்கள் உயர்ந்தவீத சிறப்பு எண்களாகும்; நிலைத்த பேசிகளிடமிருந்து நிமிடத்திற்கு 10 முதல் 20 பென்சு வரை கட்டணமிருக்கலாம்
 • நகர்பேசிகளிடமிருந்து இவற்றிற்கு நிமிடத்திற்கு 42 பென்சு வரை கட்டணமிருக்கலாம்; இவை கட்டணத் தொகுதிகளில் சேர்க்கப்படுவதில்லை.

09 - மிகைமதிப்பு கட்டணம்[தொகு]

09இல் துவங்கும் எண்கள் நிமிடத்திற்கு £1.50 வரையிலான மிகுந்த கட்டணம் உள்ளவை. இந்த எண்கள் பதியப்பட்ட தகவல்கள், தோழர்/தோழி சந்திப்புகள், போட்டிகளில் வாக்களித்தல் போன்ற கட்டண சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட எண்கள்[தொகு]

இயக்குபவர்: 100

தற்போதைய நேரம்: 123 (சில நகர்பேசிகளிலிருந்து கிடைப்பதில்லை)

அவசரகால அழைப்புக்கள்: 999 அல்லது 112

வெளிநாடுகளிலுள்ள ஆட்சிப்பகுதிகளுக்கான எண்கள்[தொகு]

கடல்கடந்த பிரித்தானிய ஆட்சிப்பகுதிகளுக்கான எண்கள் ஐக்கிய இராச்சிய தொலைபேசி எண்வழங்கல் திட்டத்திற்குட்பட்டவை அல்ல. இவை பன்னாட்டு அழைப்புக்களைப் போன்றே நடத்தப்படுகின்றன. இவற்றிற்கான அணுக்க குறியீடுகள் கீழே தரப்பட்டுள்ளன:

வட அமெரிக்க எண்வழங்கல் திட்டம்[தொகு]

மற்றவை[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

 1. இரு சிறப்பு 08xx எண்களுக்காக 7; சில 01xxx பகுதிகளிலும் 01xxxx பகுதியில் ஒன்றும், அனைத்து 0500 எண்களுக்கும் சில 0800 எண்களுக்கும் 9; அனைத்து பகுதிகளிலும் 10

சான்றுகோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]