ஐக்கிய அமெரிக்க அணுசக்திப் பொறுப்புக் குழு
ஐக்கிய அமெரிக்க அணுவாற்றல் பொறுப்புக் குழுவின் முத்திரை | |
தற்சார்பு முகமை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1946 |
கலைப்பு | 1975 |
பின்வந்த அமைப்பு |
|
தலைமையகம் | வாசிங்டன், டி. சி. (1947–1957) ஜெர்மன் டவுன், மேரிலாந்து (1958–1975)[1] |
ஐக்கிய அமெரிக்க அணுவாற்றல் பொறுப்புக் குழு (United States Atomic Energy Commission) என்பது இரண்டாம் உலகப் போருக்குப் போருக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்கப் பேரவையால் அணு அறிவியல், தொழில்நுட்பத்தின் அமைதிக்கால வளர்ச்சியைப் பேணுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிறுவப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு நிறுவனமாகும். இது அமெரிக்கப் பேராயச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது.[2] குடியரசுத்தலைவர்சாரி எசு. டுருமேன் 19461 ஆம் ஆண்டு அணு ஆற்றல் சட்டத்தில் 1946, ஆகத்து 1 இல் கையொப்பமிட்டார்.1947, சனவரி 1 இல் இச்சட்டத்தால் அணுவாற்றல் பொறுப்பு படைத்துறையில் இருந்து குடிமைத் துறைக்கு மாறியது. இம்மாற்றத்தால் நிலையங்கள், ஆய்வகங்கள், கருவிகள், பணியாளர்களை அணுவாற்றல் பொறுப்பு ஆணைய உறுப்பினர்களின் கட்டுபாட்டுக்கு வந்தது. இச்சட்டம் அணுக்கருப் படைக்கலங்களை (Nuclear Weapons) உருவாக்கிச் செய்தலையும் பேணுதலையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் இச்சட்டம் அணு ஆற்றலை அமைதிப் பணிகளுக்காகப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணிகள் பற்றிச் சுட்டிக் காட்டுகின்றது. 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள், அணுவாற்றல் பொறுப்புக் குழுவினைத் தொடர்ந்து அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைப்பிரிவுப் பொறிஞர்களின், மேன்காட்டன் பொறியியற் பிரிவு ( Manhattan Engineer District) இரண்டாவது உலகப்போரின்போது, அணுகுண்டை உருவாக்கியது. .[3]
பல உய்யநிலை ஆய்வாளர்கள் 1960 களில் அணுவாற்றல் பொறுப்புக்குழுவின் பேரில் அந்நிறுவன ஒழுங்குமுறைகள், கதிர்வீச்சுப் பாதுகாப்புச் செந்தரங்கள், அணுக்க்கரு உலை பாதுகாப்பு, அணுக்கருமின் நிலைய இருப்பிடம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் போதுமான அளவில் கண்டிப்பாக அமையவில்லை எனக் குற்றம் சாட்டினர்.
அணுவாற்றல் பொறுப்புக்குழுவின் கட்டுபாட்டுத் திட்டங்கள், 1974 அளவில், கடுந்தாக்கத்துக்கு உள்ளாகவே, ஐக்கிய அமெரிக்கப் பேராயம் 1974 ஆம் ஆண்டைய அணுவாற்றல் பொறுப்புக்குழுச் சட்டத்தை நீக்க முடிவெடுத்தது. எனவே,1974 ஆம் ஆண்டினளாற்றல் மறு ஒழுங்கமைப்புச் சட்டப்படி (Energy Reorganization Act.) அணுவாற்றல் பொறுப்புக்குழு கலைக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு அதன் செயல்கள் ஆற்றல் ஆராய்ச்சி, வளர்ச்சிக்கான ஆட்சியகத்திடமும், (Energy Research and Development Administration) அணுக்கருக் கட்டுப்பாட்டுக் குழுவினிடமும் (Nuclear Regulatory Commission) மாற்றம் செய்யப்பட்டன.[4]குடியரசு தலைவர் ஜிம்மி கார்ட்டர் 1977, ஆகத்து 4 இல் ஆற்றல் நிறுவனத் துறைச் சட்டம், 1977 இல் கையெழுத்திட்டு, ஐக்கிய அமெரிக்க ஆற்றல் துறையை உருவாக்கினார். இந்தப் புதிய முகமை, கூட்டு ஆற்றல் ஆட்சியகம், ஆற்றல் ஆராய்ச்சி, வளர்ச்சி ஆட்சியகம், கூட்டு மிந்திறன் ஆணையம் மேலும், பல்வேறு பிற கூட்டு ஆட்சி முகமைகளின் பொறுப்புகளை ஏற்றது.
உசாத்துணை
[தொகு]The New Encyclopedia Britannica Micro, Vol I, 15th Edition, 1982. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு அறிவியல் களஞ்சியம் தொகுதி 1, பக்கம் எண்:675
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "U.S. Department of Energy: Germantown Site History". United States Department of Energy. பார்க்கப்பட்ட நாள் March 13, 2012.
- ↑ Niehoff, Richard (1948). "Organization and Administration of the United States Atomic Energy Commission". Public Administration Review 8 (2): 91–102. doi:10.2307/972379. https://archive.org/details/sim_public-administration-review_spring-1948_8_2/page/91.
- ↑ Hewlett, Richard G. & Oscar E. Anderson (1962). A History of the United States Atomic Energy Commission. University Park: Pennsylvania State University Press.
- ↑ "Atomic Energy Commission". Nuclear Regulatory Commission. பார்க்கப்பட்ட நாள் 2009-11-16.
மேலும் படிக்க
[தொகு]- Clarfield, Gerard H., and William M. Wiecek. Nuclear America: military and civilian nuclear power in the United States, 1940–1980 (Harpercollins, 1984).
- Richard G. Hewlett; Oscar E. Anderson. The New World, 1939–1946. University Park: Pennsylvania State University Press, 1962.
- Richard G. Hewlett; Francis Duncan. Atomic Shield, 1947–1952. University Park: Pennsylvania State University Press, 1969.
- Richard G. Hewlett; Jack M. Holl. Atoms for Peace and War, 1953–1961: Eisenhower and the Atomic Energy Commission. Berkeley: University of California Press, 1989.
- Rebecca S. Lowen. "Entering the Atomic Power Race: Science, Industry, and Government," Political Science Quarterly 102#3 (1987), pp. 459–479 in JSTOR
- Mazuzan, George T., and J. Samuel Walker. Controlling the atom: The beginnings of nuclear regulation, 1946–1962 (Univ of California Press, 1985) online.
வெளி இணைப்புகள்
[தொகு]- U.S. Nuclear Regulatory Commission Glossary: "Atomic Energy Commission"
- Diary of T. Keith Glennan, Dwight D. Eisenhower Presidential Library[தொடர்பிழந்த இணைப்பு]
- Papers of John A. McCone, Dwight D. Eisenhower Presidential Library பரணிடப்பட்டது 2008-05-12 at the வந்தவழி இயந்திரம்
- Technicalreports.org: TRAIL—Technical Report Archive and Image Library – historic technical reports from the Atomic Energy Commission (& other Federal agencies) are available here.
- Briefing Book: "Clean" Nukes and the Ecology of Nuclear War, published by the National Security Archive