2008 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்கா குடியரசுத் தலைவர் தேர்தல், 2008

← 2004 நவம்பர் 4, 2008 2012 →
 
வேட்பாளர் பராக் ஒபாமா ஜான் மெக்கெய்ன்
கட்சி மக்களாட்சி குடியரசு
சொந்த மாநிலம் இல்லினாய் அரிசோனா
துணை வேட்பாளர் ஜோ பிதன் சாரா பாலின்

தேர்வு வாக்குகள்
365 173
வென்ற மாநிலங்கள் 28 + டிசி + என்.ஈ-02 22
மொத்த வாக்குகள் 69,456,897[1] 59,934,814[1]
விழுக்காடு 52.9%[1] 45.7%[1]

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு வரைபடம். நீலம்- ஒபாபா / பைடன் வென்ற மாநிலங்கள் / மாவட்டங்கள்.சிவப்பு - மெக்கெய்ன் பேலின் வென்றவை. ஒவ்வொரு மாநிலமும் பெற்றுள்ள வாக்காளர் குழும வாக்குகளின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய குடியரசுத் தலைவர்

ஜார்ஜ் புஷ்
குடியரசு

குடியரசுத் தலைவர் -தெரிவு

பராக் ஒபாமா
மக்களாட்சி


2008 இன் ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதித் தேர்தல் நவம்பர் 4, 2008 நடைபெற்றது. இது 56 வது தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவருயும், துணைக் குடியரசுத் தலைவரும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

மக்களாட்சிக் கட்சி சேர்த ஆபிரிக்க அமெரிக்கரான இலினொய் மாநில மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா இந்த தேர்தலில் வென்று ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆனார். இவரே அமெரிக்காவின் முதல் ஆபிரிக்க அமெரிக்க அல்லது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் ஆவார். வெள்ளை இனத்தவர் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாட்டில் இவரே முதல் ஆபிரிக்க அமெரிக்க குடியரசுத் தலைவர்.

குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட அரிசோனா மாநில மேலவை உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் தோல்வியுற்றார்.

குடியரசுத் துணைத் தலைவர் போட்டியாளர்கள்[தொகு]

ஜோ பைடன்
சேரா பேலின்

மக்களாட்சிக் கட்சி சேர்த டெலவெயர் சார்பு மேலவை அவை உறுப்பினர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட அலாஸ்கா மாநிலத்தின் ஆளுனர் சேரா பேலின் தோல்வியுற்றார்.

வேட்பாளர்களின் நிலைப்பாடுகள்[தொகு]

2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கிய விடயங்கள்
விடயம் ஒபாமா மெக்கெய்ன்
பொருளாதாரம் * அதி உயர் வருமான உள்ளவர்களுக்கு வரி உயரும், 95% மற்றவர்களுக்கு வரிக் கழிவு
* புதிய சமூக நல திட்டங்கள்
* படைத்துறை செலவீனம் குறைப்பு
வரி கழிவு; அரச செலவீனம் குறைப்பு
சுகாதாரம் அனைவருக்கும் பொதுச் சுகாதாரம் சுகாதார செலவுக்கு வரிக் கழிவு
கல்வி School voucher எதிர்ப்பு, பொது கல்வியை பலப்படுத்தல் School voucher
சுற்றுச்சூழல் 2050 இல் 80% காபன் வெளியீடு குறைப்பு 2050 இல் 65% காபன் வெளியீடு குறைப்பு
ஆற்றல் __ __
ஈராக் போர் சீக்கரமாக அமெரிக்க படைகளை வெளியேற்றல் ஈராக்கில் அமெரிக்க வெற்றியை உறுதிசெய்தல்
ஆப்கானிஸ்தான் போர் __ __

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]