ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்
113வது ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்
Coat of arms or logo
வகை
வகைBicameral
அவைகள்மேலவை
கீழவை
தலைமை
President of the SenateJoe Biden, ()
January 20, 2009 முதல்
President pro tempore of the SenatePatrick Leahy, ()
December 17, 2012 முதல்
Speaker of the House of RepresentativesJohn Boehner, (கு)
January 5, 2011 முதல்
அமைப்பு
உறுப்பினர்கள்535 voting members:
100 senators
435 representatives
6 non-voting members
113th United States Senate Structure.svg
Senate அரசியல் குழுக்கள்Majority (55)

Minority

113USHouseStructure.svg
House of Representatives அரசியல் குழுக்கள்     Republican (232)
     Democratic (200)
     vacant (3)
தேர்தல்
Senate இறுதித் தேர்தல்November 6, 2012
House of Representatives இறுதித் தேர்தல்November 6, 2012
கூடும் இடம்
United States Capitol west front edit2.jpg
அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம்
வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
வலைத்தளம்
Senate
House of Representatives

ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்றம் அல்லது ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ் (United States Congress) என்பது மேலவை (செனட்) மற்றும் கீழவை (ஹவுஸ்) என்னும் இரு பிரிவுகள் கொண்ட அமைப்பில் இயங்கும் உறுப்பினர்களைக் கொண்டதாகும். இந்த ஈரவை உறுப்பினர்களையும் கொண்ட கூட்டம் காங்கிரசு எனப்படும். இதுவே ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் அரசின் சட்டமன்றம். இது ஈரவைச் சட்டமனற முறையைக் கொண்டதாகும்.

மக்களின் சார்பாளர்களைக் (பிரதிநிதிகளைக்) கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்கள் அமெரிக்கன் சமோவா, கொலம்பியா மாவட்டம், குவாம், அமெரிக்க கன்னித் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, வட மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.