உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விலார்ட் பூங்காவிலிருந்து ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அருங்காட்சியகத்தின் ஒரு தோற்றம். காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கிகளின் "பெரிஸ்கோப்பு"களை இடப்பக்கத்தில் காணலாம்.

ஐக்கிய அமெரிக்கக் கடற்படைத் தேசிய அருங்காட்சியகம் என்ற முழுப்பெயர் கொண்ட ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அருங்காட்சியகம் (U.S. Navy Museum) ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முதன்மை அருங்காட்சியகம் ஆகும். இது, அமெரிக்காவின் வாசிங்டன் டி. சி. யிலுள்ள வாசிங்டன் கடற்படை தளப் பகுதியில் உள்ள பழைய கடற்படைச் சுடுகலன் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. அமெரிக்கக் கடற்படையின் வரலாற்றுத் திட்டமான கடற்படை வரலாற்று மையத்தின் ஒரு பகுதியான இந்த அருங்காட்சியகம், இக் கடற்படையின் 12 அருங்காட்சியகங்களில் ஒன்று.

இந்த அருங்காட்சியகத்தில், கப்பல் மாதிரிகள், சீருடைகள் உட்பட்ட பலவகையான கடற்படையோடு தொடர்புள்ள பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது விடய அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
U.S. Navy Museum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.