ஐஎல் இ20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வதேச லீக் இ20 (ஐஎல் இ20)
நாடு(கள்)ஐக்கிய அரபு அமீரகம்
நிர்வாகி(கள்)அமீரக துடுப்பாட்ட வாரியம்
வடிவம்20 நிறைவுகள் போட்டி
முதல் பதிப்பு2023
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி, பிளே ஆஃப்
மொத்த அணிகள்6
2022–23 ஐஎல் இ20
வலைத்தளம்www.ilt20uae.com

சர்வதேச லீக் இ20 அல்லது ஐஎல் இ20 (International League T20 , ILT20) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடப்படும் 20 நிறைவுகள் கொண்ட துடுப்பாட்டப் போட்டியாகும். [1] [2] போட்டியின் முதல் பதிப்பு முதலில் சனவரி மற்றும் பிப்ரவரி 2022இல் நடத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் சனவரி 2023 முதல் ஆறு அணிகள் போட்டியிடும் வகையில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. [3] சூன் 2022இல், முறையாக சர்வதேச லீக் T20 என பெயரிடப்பட்டு, முதல் பருவத்திற்கான தேதிகளும் உறுதி செய்யப்பட்டன. [4]

கண்ணோட்டம்[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்ற நைட் ரைடர்ஸ் குழு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜி. எம். ஆர் குழுமம் மற்றும் லான்சர் கேபிடல்ஸ் மற்றும் அதானி குழுமம் போன்றவர்கள் அணிகளின் உரிமையாளர்களாக அறிவிக்கப்பட்டனர். [5] [6] கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளர்கள் தங்கள் தற்போதைய ஐபிஎல் அணிகளில் இருந்து நான்கு வீரர்களை ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.[7]

அணிகள்[தொகு]

பின்வரும் அணிகளும் அவற்றின் உரிமையாளர்களும் போட்டியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டனர்: [8]

குழு நகரம் உரிமையாளர் பயிற்சியாளர் தலைவர்
அபுதாபி நைட் ரைடர்சு அபுதாபி, அபுதாபி எமிரேட் நைட் ரைடர்ஸ் குழு அபிசேக் நாயர் சுனில் நரைன்
டெசர்ட் வைப்பர்சு இல்லை லான்சர் கேபிடல் எல்எல்சி ஜேம்ஸ் போஸ்டர் கொலின் மன்ரோ
துபாய் கேப்பிடல்சு துபாய், துபாய் அபுதாபி ஜிஎம்ஆர் குழுமம் பில் சிம்மன்ஸ் உரோவ்மேன் பவல்
கல்ஃப்

ஜயண்ட்சு

இல்லை அதானி ஸ்போர்ட்ஸ்லைன் ஆண்டி பிளவர் ஜேம்ஸ் வின்ஸ்
எம்ஐ எமிரேட்சு அபுதாபி, அபுதாபி எமிரேட் ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் பிசினஸ் வென்ச்சர்ஸ் லிமிடெட் ஷேன் பாண்ட் கீரன் பொல்லார்ட்
ஷார்ஜா வாரியர்சு ஷார்ஜா, ஷார்ஜா எமிரேட் காப்ரி குளோபல் கேபிடல் லிமிடெட் பால் ஃபார்ப்ரேஸ் மொயின் அலி

விதிகள்[தொகு]

ஒவ்வொரு அணியிலும் உள்ள பதினொரு வீரர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம், [9] இது மற்ற பெரிய இருபது20களின் வெளிநாட்டு வீரர்களின் வரம்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். [10] ஒவ்வொரு அணியிலும் இரண்டு வீரர்கள் முறையே ஐக்கிய அரபு அமீரக வீரராகவும், இணை உறுப்பினர் நாட்டிலிருந்து ஒரு வீரராகவும் இருக்க வேண்டும். [9]

சான்றுகள்[தொகு]

  1. "KKR, Mumbai Indians set to become franchise owners in UAE-based Premier League T20". ESPN Cricinfo.
  2. "UAE'S PREMIER LEAGUE T20 SETS DATES AND UNVEILS TOURNAMENT LOGO". Emirates Cricket Board.
  3. "Flush With Cash And Influential Backing, The UAE's New T20 League Is Set To Shake Up Cricket Globally". Forbes.
  4. "UAE T20 league announces early-2023 window, set for clash of dates with BBL, BPL and CSA league". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
  5. "Shah Rukh Khan Leads Acquisition of Abu Dhabi Knight Riders Cricket Franchise". Variety. 12 May 2022.
  6. "Manchester United co-chairman Avram Glazer buys franchise in new UAE T20 cricket league". Sky Sports.
  7. "IPL franchises to have first right to sign their players in UAE T20 league" (in en). Cricbuzz. https://www.cricbuzz.com/cricket-news/122468/ipl-franchises-to-have-first-right-to-sign-their-players-in-uae-t20-league-cricbuzzcom. 
  8. "Knight Riders Group acquires Abu Dhabi franchise in upcoming UAE T20 League". ESPNCricinfo.
  9. 9.0 9.1 "UAE T20 league sets $450,000 contract for top players". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-07-28.
  10. Laghate, Gaurav. "ZEE signs exclusive media rights deal for Emirates Cricket Board’s UAE T20 League". The Economic Times இம் மூலத்தில் இருந்து 2022-05-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220524100512/https://economictimes.indiatimes.com/industry/media/entertainment/zee-signs-exclusive-media-rights-deal-for-emirates-cricket-boards-uae-t20-league/articleshow/91764513.cms?from=mdr. 


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎல்_இ20&oldid=3638124" இலிருந்து மீள்விக்கப்பட்டது