ஆடுதுறை - 36 (நெல்)
| ஆடுதுறை - 36 ADT 36 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| திரிவேணி x ஐஆர்-20 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 110 - 115 நாட்கள் |
| மகசூல் |
| 6000 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1980 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஆடுதுறை - 36 (ADT 36) பிரபலமாக சிவப்பு சிறுமணி (Red Sirumani) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, திரிவேணி (Triveni) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் - 20 (IR 20) என்ற நெல் இரகத்தையும் இயற்கை முறையில் இணைச் சேர்த்து உருவாக்கப்பட்ட [1] தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]
வெளியீடு
[தொகு]தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[3] 1980 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
காலம்
[தொகு]குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[2] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[4]
சாகுபடி
[தொகு]நீர்ப்பாசன வசதியுள்ள தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் ஆடுதுறை - 36 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[3]
சிறப்புப் பண்புகள்
[தொகு]- இந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 5500 - 6000 கிலோவரை (5.5 - 6 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இதன் தானியமணிகள் மிதமெல்லிய அளவில் உள்ளது.
- இந்நெல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.[2]
- இவ்வகை நெற்பயிர் குலை நோய் எதிர்ப்பு திறனுடையதாக உள்ளது.[3]
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Details of Rice Varieties : Page 2 - 93". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2017. Retrieved 2017-08-04.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-07-31.
- ↑ 3.0 3.1 3.2 "Rice Knowledge Management Portal ADT 36". www.rkmp.co.in (ஆங்கிலம்) - 2011. Retrieved 2017-08-04.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Paddy Varieties of Tamil Nadu - Long duration varieties". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2017. Retrieved 2017-08-04.