ஏ சைலண்ட் வாய்சு (2016 அனிமே திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ சைலன்ட் வாய்சு
இயக்கம்நவுக்கோ யமடா
தயாரிப்பு
  • ஈகாரு ஓகாசி
  • சினிச்சி நாக்கமுரா
  • மிக்கியோ எட்சுக்கி
திரைக்கதைஎரெய்கோ யொசிடா
இசைகென்சுக்கே உசியோ
நடிப்பு
  • மியு இரினோ
  • சவோரி அயாமி
ஒளிப்பதிவுகசூயா தக்கௌ
படத்தொகுப்புகெங்கோ சிகெமுரா
கலையகம்கியோட்டோ அனிமேசன்
விநியோகம்சோச்சிக்கு
வெளியீடுசெப்டம்பர் 17, 2016
ஓட்டம்130 நிமிடங்கள்[1][2]
நாடுசப்பான்
மொழிசப்பானிய மொழி
மொத்த வருவாய்
  • $ 33 மில்லியன்
  • (௹ 241 கோடி)

ஏ சைலன்ட் வாய்சு (சப்பானியம்-காஞ்சி: 映画 聲の形) (தமிழ்: கோய் னோ கத்தாச்சி - அமைதிக்குரல்) 2016 இல் வெளிவந்த ஒரு சப்பானிய அனிமே திரைப்படமாகும்.

கதைக்கரு[தொகு]

காதுகேளாத சிறுமியான சோக்கோ நிசிமியா, இடைநிலைபள்ளியில் பயிலும் போது சகமாணவன் சோயா இசிதாவால் கொடுமைப் படுத்தப்படுகிறாள். விளையவாக, நிசிமியா பள்ளியை விட்டுச்செல்ல, சகமாணவர்களால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறான் இசிதா. நண்பர்களே இல்லாமல் தனிமையில் நாட்களை நகர்த்தி வாழ்க்கையை வெறுக்கிறான்.

சில ஆண்டுகள் கழித்து, தற்போது உயர்நிலைப்பள்ளியில் பயிலும் இசிதா தற்கொலை முயற்சி செய்து தோற்றுவிடுகிறான். இறுதியாக நிசிமியாவைச் சந்தித்து மன்னிப்பு கோர விழைபவனை நிசிமியா மன்னித்தாளா இசிதாவின் வாழ்க்கையைச் சூழ்ந்திருந்த தனிமை விலகியதா என்பது கதை.

குரல் கொடுத்தவர்கள்[தொகு]

சோயோ இசிதா (石田 将也)
என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மியு இரினோ[3]
கழிவிரக்கம் கொள்ளும் ஒரு உயர்நிலை மாணவனாக இந்த கதாப்பாத்திரம் உள்ளது.
சோக்கோ நிசிமியா' (西宮 硝子)
என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் சவோரி அயாமி
இசிதா என்ற கதாப்பாத்திரத்தால் கொடுமைப் படுத்தப்படுவதும், பின்னால் மன்னிப்பு கேட்டு வருபவனை எதிர்கொள்வதுமான இந்த கதாப்பாத்திரம் ஒரு காதுகேளா மாற்றுத்திறனாளியாக உள்ளது.

தயாரிப்பு[தொகு]

இதே பெயரில் 2014 ஆம் ஆண்டு வெளியான மங்கா தொடரின் அனிமே வடிவமே இந்தத் திரைப்படம்.[4] 2015 ஆம் ஆண்டு வெளியான சோனென் பத்திரிக்கை, கியோட்டோ அனிமேசன் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் நாவுக்கோ யமடா இயக்க இருப்பதாகவும் அறிவித்தது.[5] இத்திரைப்படத்தின் முகப்புப்பாடல் கோய் வோ சீட்டா நோ வாவை ஐக்கோ பாடினார். இத்திரைப்படத்தை ஆங்கில மொழிமாற்றம் செய்யும்போது காதுகேளா மாற்றுத்திறனாளி நடிகையான எலெக்சி கௌடென் நிசிமியாவின் கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தார்.[6]

வெளியீடு[தொகு]

செப்டம்பர் 17, 2016 அன்று சப்பான் முழுவதும் 120 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது.[7][8][9] அக்டோபர் 22,2016 ஆம் ஆண்டு இசுக்கொட்லாந்து அனிமே திருவிழாவிலும் பிப்ரவரி 5, 2017 இலண்டன் கலையரங்க கல்வி நிறுவனத்திலும் வெளியானது.[10] மார்ச்சு 9,2017 இல் சிங்கப்பூர் மலேசியாவிலும் ஏப்ரல் 9, 2017 இல் ஆத்திரேலியா நியூசிலாந்திலும் [11] ஏப்ரல் 16, 2017 அன்று ஐரோப்பா உருசியா துருக்கி முழுவதும் வெளியானது.[12]

மேற்கோள்[தொகு]

  1. "A SILENT VOICE". British Board of Film Classification. February 8, 2017. பார்க்கப்பட்ட நாள் December 13, 2018.
  2. Green, Scott (August 7, 2016). ""A Silent Voice" Anime Movie Listed For Over Two Hours". Crunchyroll. பார்க்கப்பட்ட நாள் August 7, 2016.
  3. "A Silent Voice Anime Film Stars Miyu Irino, Saori Hayami". Anime News Network. May 27, 2016. பார்க்கப்பட்ட நாள் May 27, 2016.
  4. "A Silent Voice Manga Has Anime in the Works". Anime News Network. November 17, 2014. பார்க்கப்பட்ட நாள் April 8, 2016.
  5. "Kyoto Animation to Produce A Silent Voice Film With Director Naoko Yamada". Anime News Network. October 11, 2015. பார்க்கப்பட்ட நாள் April 8, 2016.
  6. "A Silent Voice English Dub Clip Features Lexi Cowden as Shoko". Anime News Network. October 10, 2017. பார்க்கப்பட்ட நாள் June 15, 2018.
  7. "A Silent Voice Anime Film's Visual, Teaser Video, Release Date, More Staff Revealed". Anime News Network. April 8, 2016. பார்க்கப்பட்ட நாள் April 8, 2016.
  8. "A Silent Voice Anime Film Earns 283 Million Yen in 2 Days, Ranks #2". Anime News Network. September 20, 2016. பார்க்கப்பட்ட நாள் September 20, 2016.
  9. "Extra Silent Voice and Your Name Screenings at Edinburgh Scotland Loves Anime". Anime News Network. September 30, 2016. பார்க்கப்பட்ட நாள் March 5, 2017.
  10. "A Silent Voice in Japanese Film Tour". Anime News Network. January 10, 2017. பார்க்கப்பட்ட நாள் March 5, 2017.
  11. McCallum, Jessica (March 2, 2017). "A Silent Voice is Heading to Australia and New Zealand This April". Madman Entertainment. பார்க்கப்பட்ட நாள் March 5, 2017.
  12. "A Silent Voice Animated Movie Acquired by Viz Media Europe". Anime News Network. Viz Media. February 20, 2017. பார்க்கப்பட்ட நாள் May 25, 2019.