ஏ. வி. குட்டிமாலு அம்மா
ஏ. வி. குட்டிமாலு அம்மா | |
|---|---|
| பிறப்பு | 23 April 1905 ஆனைக்கரை, பாலக்காடு மாவட்டம் |
| இறப்பு | 14 ஏப்ரல் 1985 |
| அரசியல் கட்சி | கேரள பிரதேச காங்கிரசு கட்சி, அனைத்திந்திய காங்கிரசு குழு |
| அரசியல் இயக்கம் | வெள்ளையனே வெளியேறு இயக்கம், சுதேசி இயக்கம் |
| வாழ்க்கைத் துணை | கே. மாதவ மேனன் |
ஏ. வி. குட்டிமாலு அம்மா (A. V. Kuttimalu Amma) அல்லது ஆனக்கரை வடக்கத்து குட்டிமாலு அம்மா (1905-1985) இந்தியாவின் இந்திய விடுதலை வீரரும், சமூக சேவகரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் உப்புச் சத்தியாகிரக இயக்கத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தார.[1]
வாழ்க்கை
[தொகு]இவர் பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஆனக்கரை கிராமத்தில் 1905 ஏப்ரல் 23 அன்று பெரும்பிலவில் கோவிந்த மேனன் மற்றும் மாதவியம்மா தம்பதியினருக்கு பிறந்தார்.[2]
ஏப்ரல் 25,1931 அன்று விடுதலை இயக்க வீரர் மார்கரெட் பவமணியுடன் சேர்ந்து திருச்சூர் நகரில் நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் குழுவுடன் ஒரு மறியலை ஏற்பாடு செய்தார்.[3] மலபாரில் இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பைத் திரட்டுவதில் இவர்களது முயற்சிகள் முக்கியப் பங்கு வகித்தன. கள்ளுக்கடைகள் மற்றும் வெளிநாட்டுத் துணிகளை விற்கும் கடைகளிலும் தீவிரமாக மறியல் செய்தார். இந்த நோக்கத்திற்காக 1932 இல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு 1936-இல் சென்னை மாகாணச் சட்டமன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது (1942) மீண்டும் இரண்டு ஆண்டுகள் அமராவதி மாகாண சிறையில் அடைக்கப்பட்டார். மலபார் மாகாணத்தில் காங்கிரசு கட்சியின் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதில் ஒரு முக்கிய நபராகவும் இருந்தார். மேலும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் செயற்குழுவிலும் பணியாற்றினார.[4] குட்டிமாலு அம்மா இந்திப் பிரசாரச் சபையின் தலைவராகவும், இந்திப் பிரசாரிகா ஆகவும் இருந்தார். 1946-இல் மீண்டும் சென்னை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1985 இல் இறந்தார்.
மலபாரில் பல அனாதை இல்லங்களை இவர் அமைத்திருந்தார். சென்னை மாகாணத்தில் மலபார் பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரான கோழிபுரத்து மாதவ மேனனை மணந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gandhi and the Mass Movements (in ஆங்கிலம்). Atlantic Publishers & Distri.
- ↑ "Directory of Madras Legislature 1950" (PDF).
- ↑ "Political Participation of Women in Malabar" (PDF). shodhganga.inflibnet.ac.in. Retrieved 2019-03-08.
- ↑ Kumar, Ravindra (1992). Selected Works Of Maulana Abul Kalam AzadVol. 11 Vol# 11 (in ஆங்கிலம்). Atlantic Publishers & Dist. ISBN 9788171563111.