ஏ. முகம்மது ஜான்
ஏ.முகம்மது ஜான் (A. Mohammed John) 1948-23 மார்ச் 2021 ஓர் தமிழக அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இராணிப்பேட்டை தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் மாநில பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.[2]
பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு, திமுக சார்பில் போட்டியிட்ட, ஆர். காந்தி என்பவரிடம் தோல்வியடைந்தார்.[3]
தொழில்[தொகு]
இவர் ஒரு தோல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்த தொழிலதிபராக உள்ளார். இவர் தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் உள்ள இராணிப்பேட்டையில் பிறந்தார்.
இறப்பு[தொகு]
முகமது ஜான் 23 மார்ச் 2021 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். [4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-04-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. 2011-08-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. 2016-08-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-04-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ அதிமுக எம்.பி. முகமது ஜான் திடீர் மரணம்{https://www.hindutamil.in/news/tamilnadu/649577-aiadmk-mp-mohammed-john-died-suddenly-of-a-heart-attack.html
வெளி இணைப்புகள்[தொகு]
- Ibnlive.in.com பரணிடப்பட்டது 2014-11-22 at Archive.today
- Tamilnadumlas.com பரணிடப்பட்டது 2014-11-29 at the வந்தவழி இயந்திரம்
- Tamil.oneindia.com
- Elections.in
- Thehindu.com